தினமும் தூங்காவிட்டால் இதய கோளாறு நிச்சயம்!

ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் எட்டு மணி நேர தூக்கம் அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், இன்றைய டிஜிட்டல் யுகத்தில் பலர் இரவில் கண்விழித்து செல்போன்களுக்கு அடிமையாகி, தங்களின் தூக்கத்தையும் ஆரோக்கியத்தையும் இழந்து வருகின்றனர். இந்த தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாகக் காண்போம்.

உயிர் வாழ்வதற்கு உணவு எவ்வளவு முக்கியமோ, அதே அளவு தூக்கமும் இன்றியமையாதது. பலர் தூக்கமின்மையால் பல்வேறு உடல்ரீதியான பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு நிம்மதியான உறக்கமே ஆகும். ஆய்வுகளின்படி, ஒரு மனிதன் தனது வயதிற்கேற்ப சுமார் 7 மணி நேரம் தூங்க வேண்டும் என கூறப்படுகிறது. ஆனால், இன்றைய வேகமான வாழ்க்கைச் சூழலில் பலருக்கும் போதுமான அளவு தூக்கம் கிடைப்பதில்லை என்பதே கசப்பான உண்மை.

சரியான அளவு தூக்கம் இல்லாத பட்சத்தில், இதய நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், மன அழுத்தம், உடல் பருமன், சுவாசக் கோளாறுகள், செரிமான பிரச்சனைகள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற பல உடல்நலக் குறைபாடுகளும் தூக்கமின்மையால் உண்டாகக்கூடும். எனவே, ஆரோக்கியமான வாழ்விற்கு தினமும் போதுமான அளவு தூங்குவது மிகவும் அவசியமாகும்.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version