விஜயின் முதல் கோரிக்கை வெற்றி: ரூ.7,500 கோடி நிதிக்கு மத்திய அரசு ஒப்புதல்

தமிழக முதல்வர் விஜய் அவர்களின் CMIUTM திட்டத்திற்கு மத்திய அரசின் ரூ.7,500 கோடி நிதி ஒப்புதல் கிடைத்துள்ளது. இது தமிழக நகரங்களின் குடிநீர், கழிவுநீர், சாலைகள், பூங்காக்கள் மற்றும் நதிகள் சீரமைப்புக்கு முதல் கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

மாநில முதல்வர் தலைவர் விஜய் அவர்களின் வேண்டுகோளை ஏற்று, கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் ஆகிய முக்கிய நீர்வழிகளை மீட்டெடுக்கும் திட்டத்திற்கு, ஒன்றிய அரசின் Urban Challenge Fund (UCF) திட்டத்தின் கீழ் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வர் அறிவித்த Chief Minister's Integrated Urban Transformation Mission (CMIUTM) திட்டத்தின் கீழ் இந்த நிதி பயன்படுத்தப்படும்.

இந்த நிதியுதவியின் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம், 100% கழிவுநீர் இணைப்பு, சாலைகள், மழைநீர் வடிகால் வசதிகள், ஒருங்கிணைந்த அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு, 2031ஆம் ஆண்டுக்குள் 5 கோடி மரக்கன்றுகள் நடுதல், பூங்காக்கள் மற்றும் பொது இடங்கள் விரிவாக்கம், அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் விலங்குகள் கருத்தடை மையங்கள் அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும். பசுமை நகரங்கள், நவீன உள்கட்டமைப்பு என தமிழ்நாட்டின் நகர்ப்புற வளர்ச்சிக்கு இது ஒரு புதிய அத்தியாயமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் நவீன பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி வழிவகை செய்யும். முதல்வரின் முதல் கோரிக்கை வெற்றி பெற்றுள்ளது என்றும், இது நகர்ப்புற வளர்ச்சிக்கு ஒரு முக்கிய மைல்கல் என்றும் கருதப்படுகிறது.

Author
Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version