MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - க்ரைம் - காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

க்ரைம்

காதலித்த வாலிபரை உறவினர்கள் கொடூரமாக கொலை: குடும்பத்தினர் ஆட்சியரிடம் மனு

Admin
Last updated: மே 25, 2026 3:56 மணி
Admin
Share
SHARE

நெல்லை மாவட்டம் களக்காடு அருகே, காதலித்த பெண்ணின் உறவினர்களால் வாலிபர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளிகளை முழுமையாக கைது செய்ய வலியுறுத்தி, உயிரிழந்த வாலிபரின் தாய் மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மனு அளித்துள்ளார்.

களக்காடு படலையார் குளம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி செல்லதுரை – பேச்சியம்மாள் தம்பதியினரின் இளைய மகன் சுரேஷ் (21). இவர், அதே பகுதியைச் சேர்ந்த வசதி படைத்தவரான தளவாய் என்பவரின் மகளை கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இவர்களது காதல் விவகாரம் இரு குடும்பத்தினருக்கும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில், தளவாய், சுரேஷை அழைத்து தனது மகளுடனான காதலை கைவிடுமாறு பலமுறை எச்சரித்துள்ளார்.

கடந்த மே 1 ஆம் தேதி, காதலித்த பெண்ணின் உறவினர்கள் சுரேஷை வழிமறித்து கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சுரேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து களக்காடு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ஒருவரை மட்டும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஆனால், கைது செய்யப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்காமல், பொய்யாக கைது செய்துவிட்டதாக கூறி சுரேஷின் பெற்றோர்களிடம் கையெழுத்து பெற்று, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட சுரேஷின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, உயிரிழந்த சுரேஷின் தாய் பேச்சியம்மாள் மற்றும் குடும்பத்தினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், டிஎஸ்பி அலுவலகம் என பல்வேறு இடங்களில் மனு அளித்தும், இதுவரை கொலையில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் முழுமையாக கைது செய்யவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர். இதனால், மனமுடைந்த பேச்சியம்மாள், தனது குடும்பத்துடன் நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமாரை சந்தித்து, 'ஒரே சமூகமாக இருந்தும், நாங்கள் ஏழைகள் என்பதால் எங்கள் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து என் மகனை கொன்றுவிட்டார்கள். எங்கு சென்றாலும் எங்களை மிரட்டுகிறார்கள். என் மகனின் சாவுக்கு நீதி வேண்டும்' என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Nellai Murderஉறவினர்கள்காதல்கொலைநெல்லைமாவட்ட ஆட்சியர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article உடன் பிறவா சகோதரர் செபாஸ்டியன் மறைவு: எம்.எஸ்.பாஸ்கர் உருக்கம்
Next Article காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் மண்ணெண்ணெய் குண்டுகள் வீச்சு: கோவை அதிர்ச்சி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மது குறைவாக கொடுத்ததால் வடமாநில தொழிலாளி கொலை: 4 பேர் கைது

தூத்துக்குடியில் மதுபானம் குறைவாகக் கொடுத்ததாக ஏற்பட்ட தகராறில் வட மாநில வாலிபர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய 4 பேர் 5 மணி நேரத்திற்குள்…

1 Min Read
தமிழ்நாடு

நடத்துனர் பணி பறிப்பு: கண்ணீருடன் ஆட்சியரிடம் தற்காலிக நடத்துனர் முறையீடு

நெல்லை அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஜாதியப் பாகுபாடு காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டதாகத் தற்காலிக நடத்துநர் தம்பிதுரை கண்ணீருடன் புகார். தூய்மைப் பணி தருவதாக அதிகாரிகள் கூறுவதாக வேதனை.

1 Min Read
க்ரைம்

ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர…

1 Min Read
க்ரைம்

புனே போர்ஷ் விபத்து: ஜாமீன் பெற்ற தந்தை பணமாலையுடன் குத்தாட்டம் – நெட்டிசன்கள் கொந்தளிப்பு!

புனே போர்ஷ் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்காத நிலையில், ஜாமீனில் வெளிவந்த சிறுவனின் தந்தை பணமாலையுடன் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?