MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!

தமிழ்நாடு

கோயம்பேடு பேருந்து நிலையத்தை மால் ஆக்கக் கூடாது: அன்புமணி வலியுறுத்தல்!

Admin
Last updated: மே 14, 2026 6:11 மணி
Admin
Share
SHARE

சென்னை: கோயம்பேட்டில் உள்ள புறநகர் பேருந்து நிலையம் விரைவில் மூடப்படும் நிலையில், அதன் 36 ஏக்கர் நிலத்தில் வணிக வளாகங்கள் அல்லது பிரமாண்ட வணிக மால் அமைக்கலாம் என சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) பரிசீலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வணிக நோக்க திட்டங்களுக்கு பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதாலும், குத்தம்பாக்கத்தில் மற்றொரு புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்பட உள்ளதாலும், கோயம்பேடு பேருந்து நிலையத்தின் பயன்பாடு குறைந்து வருகிறது. இதனால், அந்த 36 ஏக்கர் நிலத்தில் நகர்ப்புற பசுமைப் பூங்கா, வணிக வளாகங்கள், அலுவலங்கள், திரையரங்குகள், உணவகங்கள் கொண்ட வளாகம், அல்லது பிரமாண்ட வணிக மால் என மூன்று திட்டங்களை CMDA தயாரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டங்கள் விரைவில் அரசின் ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளன.

முன்னதாக, திமுக ஆட்சியில் ஒரு பன்னாட்டு நிறுவனத்திற்கு இந்த இடத்தை தாரை வார்த்து, பிரமாண்ட வணிக மால் அமைக்க திட்டமிடப்பட்டதாக அன்புமணி ராமதாஸ் குற்றம் சாட்டினார். இதற்கு பா.ம.க. எதிர்ப்பு தெரிவித்ததால், பசுமைப் பூங்கா அமைப்பது உள்ளிட்ட மேலும் இரு திட்டங்களை CMDA உருவாக்கியுள்ளது. இருப்பினும், வணிக மால் அமைக்கும் யோசனையை திமுக அரசு இன்னும் கைவிடவில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.

கோயம்பேடு பேருந்து நிலையம் அமைந்துள்ள 36 ஏக்கர் நிலத்தையும், அதைச் சுற்றியுள்ள ஆம்னி பேருந்து நிலையம் அமைந்துள்ள 30 ஏக்கர் நிலத்தையும் சேர்த்து மொத்தம் 66 ஏக்கரில் ஒரு பெரிய பசுமைப் பூங்காவை அமைக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னையில் தனிநபர் பசுமை நிலப்பரப்பு மிகவும் குறைவாக இருப்பதாகவும், உடல்நலப் பிரச்சனைகள் அதிகரித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் பெரிய பூங்காக்கள் இருப்பதை ஒப்பிடுகையில், சென்னைக்கு இது போன்ற பசுமைப் பூங்காக்கள் அவசியம் என்றார்.

கிண்டியில் சுற்றுச்சூழல் பூங்கா அமைக்கப்பட்டாலும், அது சென்னையின் தேவையைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை என்றும், கோயம்பேட்டில் பூங்கா அமைப்பது அண்ணா நகர், முகப்பேர், வடபழனி உள்ளிட்ட பல பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்குப் பயனளிக்கும் என்றும் அன்புமணி ராமதாஸ் கூறினார். எனவே, வணிக வளாகங்கள் மற்றும் மால் அமைக்கும் திட்டங்களைக் கைவிட்டு, 66 ஏக்கரில் பசுமைப் பூங்கா அமைக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ChennaiParkPMKஅன்புமணி ராமதாஸ்கோயம்பேடுபசுமைப் பூங்கா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இலங்கைக்கு கடத்தல்: ரூ.50 லட்சம் பீடி இலைகள் சிக்கியது!
Next Article கள்ளக்காதல் விபரீதம்: கணவர் வெளிநாட்டில், மனைவி கொலை – தோட்ட்த்தில் புதைத்த கொடூரம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரி முன்ஜாமீன் மனு தள்ளுபடி

முதலீட்டு மோசடி வழக்கில் தொடர்புடைய பெண் காவல் ஆய்வாளர் ஷீலா மேரியின் முன்ஜாமீன் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. ரூ.20 கோடி மோசடி தொடர்பாக…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு வாழ்த்துகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், என் உயிரோடு…

3 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு பயம்: கோவை மாணவி தற்கொலை – அதிர்ச்சி

கோவையில் நீட் தேர்வு குறித்த அச்சத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மாணவர்களின் மனநலன் குறித்த கவலையை எழுப்பியுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடி: சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியால் சுட்ட ரவுடி மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு

தூத்துக்குடி மினிசகாயபுரம் பகுதியைச் சேர்ந்த ஆர்க்(எ) மரியஅந்தோணி (வயது 35), ஒரு பிரபல ரவுடி ஆவார். இவர் மீது தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொள்ளை, வழிப்பறி என…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?