MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது வாழ்த்துகள்- மு.க.ஸ்டாலின்

Admin
Last updated: மே 9, 2026 7:30 மணி
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசுக்கு வாழ்த்துகள் என தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.

நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.

அதன்பின், என் தலைமையில் நடந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.

ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.

எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.

கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.

கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.

தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.

மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்புநிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில்…

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்ட்: வங்கதேசம் முதல் இன்னிங்சில் 413 ரன்னுக்கு ஆல் அவுட்
Next Article RR vs GT: ராஜஸ்தான் ராயல்ஸ் புதிய கேப்டனான ஜெய்ஸ்வால்.. குஜராத் டைட்டன்ஸ் அணியிலும் அதிரடி மாற்றம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஈ20 பெட்ரோல் பயன்பாடு குறித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு

ஈ20 பெட்ரோல்: அச்சமின்றி பயன்படுத்தலாம் – எண்ணெய் நிறுவனங்கள்

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், ஈ20 பெட்ரோலை மக்கள் முழு நம்பிக்கையுடன் தொடர்ந்து பயன்படுத்தலாம்…

ஆகஸ்ட் 9, 2026

காரை தாக்கிய கல்: மம்தா பானர்ஜி அதிர்ச்சி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தனது…

ஆகஸ்ட் 9, 2026

மெட்டா நிறுவன சட்டப் பாதுகாப்பை நீக்க மத்திய அரசு ஆய்வு

மெட்டா நிறுவனத்தின் சட்டப் பாதுகாப்பை நீக்குவது குறித்து…

ஆகஸ்ட் 9, 2026

சென்னை ஐகோர்ட்டில் 15 புதிய நீதிபதிகள் பதவியேற்பு

சென்னை உயர் நீதிமன்றத்தில் 5 நிரந்தர மற்றும்…

ஆகஸ்ட் 9, 2026

இந்தி பேச மறுத்ததால் டெலிவரி ஊழியர் தாக்கப்பட்டார்: 4 பேர் மீது வழக்கு

பெங்களூருவில், இந்தி பேச மறுத்ததாக கூறி ஜெப்டோ…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக கூறும் பழ. நெடுமாறன்
தமிழ்நாடு

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பழ. நெடுமாறன் பேட்டி

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் நலமாக இருக்கிறார் என்றும், உரிய நேரத்தில் அவர் வெளியே வருவார் என்றும் உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.

1 Min Read
பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காட்சி
தமிழ்நாடு

பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

பில்லூர் அணைப் பகுதிகளில் பெய்த கனமழையால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் ஆற்றில் இறங்க…

2 Min Read
தமிழ்நாடு

நார்வே செஸ் சாம்பியன்: பிரக்ஞானந்தாவிற்கு வானதி சீனிவாசன் வாழ்த்து

இந்தியாவின் இளம் செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா நார்வே செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார். தமிழக பாஜக தலைவர் வானதி சீனிவாசன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

காவிரி விவகாரம்: புதிய நடுவர் மன்றம் அவசியம் – தங்கம் தென்னரசு

மேகதாது அணை தொடர்பான அரசு தீர்மானத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டதற்கு அதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். காவிரி பிரச்சனைக்கு புதிய நடுவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?