MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்

தமிழ்நாடு

ஆளுநரின் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம்: உதயநிதி ஸ்டாலின்

Admin
Last updated: ஜூலை 3, 2026 7:20 காலை
Admin
Share
SHARE

மதுரைக்கு சென்றிருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தான் ஒரு நியமனப் பதவியில் இருப்பதை மறந்து, மக்கள் பிரதிநிதி போல ஆய்வு நடத்தியுள்ளார். இது அரசியலமைப்புக்கும் மாநில உரிமைக்கும் எதிரானது. இந்த செயலில் ஈடுபட்ட ஆளுநருக்கும், இதை அனுமதித்த அரசுக்கும் கடும் கண்டனங்கள். ஆளுநர் மாளிகையின் பராமரிப்பே தமிழ்நாடு அரசிடம் இருக்கும்போது, வைகையை அரசு சீரமைக்காவிட்டால் ஆளுநர் மாளிகை களமிறங்கும் என ஆளுநர் பேசியது அடாவடித்தனம். ஆளுநரின் இந்த அசட்டுத் துணிச்சலுக்கு ஆளுங்கட்சியின் கையாலாகாத்தனமே காரணம் என சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

கூவத்தூர் ஆட்சி காலத்தைப் போல, தற்போதைய குதிரை பேர ஆட்சியில் மீண்டும் 'ஆளுநர் ஆய்வு செய்தார்' என்ற வரலாறு திரும்புகிறது. ஆளுநர் பங்கேற்ற அரசு நிகழ்வுகளில் தமிழ்த்தாய் வாழ்த்தின் முக்கியத்துவம் குறைக்கப்படும் அளவுக்கு என்ன சமரசம் செய்யப்பட்டது என்று சட்டப்பேரவையில் கேட்டிருந்தோம். அதற்கு உரிய பதிலைச் சொல்லாத ஆளுங்கட்சியினர், இன்றைக்கு ஆளுநரை ஆய்வு செய்யவிட்டு, மாநில உரிமைகளை சமரசம் செய்திருப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

சட்டத்துக்குப் புறம்பாக அடுத்தக் கட்சி எம்.எல்.ஏ.க்களை கொள்முதல் செய்யும் ஆளுங்கட்சி, ஆளுநர் நடவடிக்கை எடுத்துவிடுவாரோ என்ற பயத்தில் அவரது ஆய்வை அனுமதிக்கிறதா? முந்தைய அதிமுக ஆட்சிக்காலத்தில் அப்போதைய ஆளுநர் ஆய்வுகளில் ஈடுபட்ட போது, அவர் சென்ற இடங்களில் எல்லாம் கழகத்தினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தோம். ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நாங்கள் அனுமதித்ததில்லை.

ஆகவே, மாற்றம் என்ற பெயரில் ஆட்சிக்கு வந்தவர்கள், மாநில உரிமைகளைத் தாரை வார்க்காமல், ஆளுநர் ஆய்வு செய்யும் நடைமுறையை உடனே நிறுத்த உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKஅரசியல்ஆளுநர்உதயநிதி ஸ்டாலின்தமிழ்நாடு அரசு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இண்டிகோ: கைப்பைக்கு மட்டும் கட்டண சலுகை அறிவிப்பு!
Next Article மூக்கடைப்பு நீங்க உடனடி தீர்வுகள்: இதோ எளிய வழிகள்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

அதிமுக எம்.பி. இன்பதுரை ஆளுநரிடம் புகார் மனு அளிக்கும் காட்சி
தமிழ்நாடு

தவெக அமைச்சரவை கூட்டத்தில் இருவர் பங்கேற்பு: ஆளுநரிடம் அதிமுக எம்.பி. இன்பதுரை புகார்

ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி தவெக அமைச்சரவை கூட்டத்தில் இருவர் பங்கேற்பதாக அதிமுக எம்.பி. இன்பதுரை ஆளுநரிடம் புகார். ஆளுநர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்.

2 Min Read
தமிழ்நாடு

அடையாறு LB சாலையில் நாளை முதல் போக்குவரத்து மாற்றம்

சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, நாளை முதல் (ஜூன் 27) அடையாறு LB சாலையில் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தொடர்பாக போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடை மூடல்: மக்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தூத்துக்குடி சேர்வைக்காரன்மடம் காமராஜர்நகர் பகுதியில் டாஸ்மாக் கடை மூடப்பட்டதை கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.

1 Min Read
தமிழ்நாடு

மேகதாது திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும்: மத்திய மந்திரி குமாரசாமி

மத்திய அமைச்சர் குமாரசாமி, மேகதாது அணைத் திட்டத்திற்கு தமிழக அரசு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்ததாகவும் அவர் கூறினார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?