பொதுவாக கோழி முட்டைகள் நம் உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு விட்டமின்கள் மற்றும் அதிகப்படியான புரதச்சத்துக்களைக் கொண்டுள்ளன. இந்த பதிவில், முட்டையின் மஞ்சள் கருவை உட்கொள்வதால் கிடைக்கும் அபரிமிதமான நன்மைகள் குறித்து விரிவாகக் காண்போம்.
பலரும் முட்டையை ஆம்லெட் அல்லது அவித்த முட்டை என பல்வேறு வடிவங்களில் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்கின்றனர். ஏனெனில், முட்டை உடலுக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இருப்பினும், ஆரோக்கியம் நிறைந்த முட்டையின் மஞ்சள் கருவை சிலர் சாப்பிடத் தயங்குகின்றனர்.
ஆனால், மஞ்சள் கருவை உண்பதால் அதில் உள்ள இரும்புச்சத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, நம்மை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. இதுமட்டுமின்றி, முட்டை மஞ்சள் கரு இரத்த சோகை ஏற்படாமல் தடுக்கவும் துணைபுரிகிறது.
மேலும், முட்டை மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. இது கண் பார்வைக்கும், சரும ஆரோக்கியத்திற்கும் மிகவும் அவசியமானதாகும்.
முட்டை மஞ்சள் கருவில் உள்ள வைட்டமின் டி, எலும்புகளில் பிரச்சனைகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. இதனால் வலுவான எலும்புகளைப் பெற முடியும்.
சிலர் முட்டை மஞ்சள் கருவில் கொழுப்பு இருப்பதாகக் கூறுகின்றனர். ஆனால், அதில் உள்ள கொழுப்புக்கும், இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எனவே, இந்த தவறான கருத்தை நிராகரித்து மஞ்சள் கருவை உணவில் சேர்த்துக்கொள்வது ஆரோக்கியமான வாழ்விற்கு வழிவகுக்கும்.
அதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை முழுமையாக அறிந்து, அதனை முறையாக உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் நம் உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைத்துக் கொள்ளலாம். முட்டையின் மஞ்சள் கருவை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல.
