MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ்நாடு

பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்

Admin
Last updated: மே 26, 2026 7:26 மணி
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்துள்ளது. எடப்பாடி பழனிசாமி அணி மற்றும் சி.வி.சண்முகம் அணி என எம்.எல்.ஏ.க்கள் இரு பிரிவாக செயல்பட்டு வருகின்றனர். இதில் சி.வி.சண்முகம் தரப்பினர் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்தனர். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதற்கிடையே, சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது தவெகவுக்கு ஆதரவு தெரிவித்த திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. சத்தியபாமா, ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெயக்குமார், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தொகுதி எம்.எல்.ஏ. மரகதம் குமரவேல் ஆகியோர் நேற்று தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரனை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்த அவர்கள், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் த.வெ.க.வில் இணைந்தனர்.

இந்த சூழலில், அ.தி.மு.க. சார்பில் அம்பாசமுத்திரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது எம்.எல்.ஏ. பதவியை இன்று ராஜினாமா செய்தார். சென்னை தலைமை செயலகம் வந்த அவர், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார். முதலில் கடிதத்தை ஏற்க மறுத்த சபாநாயகர், பின்னர் கைப்பட எழுதி தருமாறு அறிவுறுத்தினார். அதன்படி இசக்கி சுப்பையா கைப்பட எழுதிய கடிதத்தை சபாநாயகர் பெற்றுக்கொண்டார். இதன் மூலம் பதவியை ராஜினாமா செய்துள்ள அதிமுக எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை தற்போது 4 ஆக அதிகரித்துள்ளது. ராஜினாமா செய்துள்ள இசக்கி சுப்பையா, தவெகவில் இணைய உள்ளார்.

இந்நிலையில், ஒவ்வொருவரும் பதவியை ராஜினாமா செய்வது அவரவருடைய ஜனநாயக உரிமை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், 'திமுகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க அதிமுக முயன்றதால் எம்.எல்.ஏ.க்கள் தவெகவில் இணைகின்றனர். நானே ராஜினாமா செய்துவிட்டுதான் தவெகவில் இணைந்தேன். எடப்பாடி பழனிசாமி நினைத்ததை உடைத்தெறிந்திருக்கிறார் இசச்கி சுப்பையா. முதல்வர் விஜய் ஜனநாயகத்தை பாதுகாப்பார். திமுக ஆதரவுடன் குதிரை பேரம் நடத்தி ஆட்சியமைக்க முயற்சி செய்தது யார் என்பது அனைவருக்கும் தெரியும். த.வெ.க. எவ்வித குதிரை பேரத்திலும் ஈடுபடவில்லை. முதல்-அமைச்சரின் செயல்பாடுகளை பார்த்து அவர்களாக த.வெ.க.வில் வந்து இணைகிறார்கள். அதிமுகவில் ஜனநாயகம் இல்லை. அதனால் கட்சியில் இருந்து வெளியேறுகிறார்கள். நான் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரையும் த.வெ.க.வில் இணைக்கவில்லை. புதிய ஆட்சி அமைந்துள்ள நிலையில், சில மாற்றங்கள் செய்ய வேண்டியுள்ளது. 6 மாதம் விமர்சிக்க மாட்டோம் என கூறிவிட்டு, இப்போது குறை கூறுவது சரியா?' என்று அவர் கேள்வி எழுப்பினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu PoliticsTTV Dhinakaranஅரசியல்சட்டமன்ற தேர்தல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026 குவாலிபையர்: டாஸ் வென்ற குஜராத் – பெங்களூரு பிளேயிங் 11 என்ன?
Next Article சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தின் அலுவலகம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு இந்து உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இது…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு…

ஜூலை 6, 2026

You Might Also Like

லைஃப் ஸ்டைல்

இந்து விரோத ஆட்சி மாறவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு

முதல்வர் நாற்காலி மாறியிருந்தாலும், இந்து விரோத ஆட்சி மாறவில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரத்தை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

மங்களூரு-நெல்லை ரயில்: நேர மாற்றத்தை வலியுறுத்தும் பயணிகள்

மங்களூரு-நெல்லை வாராந்திர ரயிலின் நேரத்தை மாற்றியமைக்க வேண்டும் என தென் மாவட்ட பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயணிகளின் வசதிக்கேற்ப நேரம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

ரேஷன் அட்டைதாரர்களே கவனம்: ஜூன் 25க்குள் இதை செய்யுங்கள்!

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் ஜூன் 25ஆம் தேதிக்குள் கைரேகை பதிவு செய்வது கட்டாயம். இறந்தவர்களின் பெயர்களை நீக்கி, ஆதார் எண்ணை இணைக்க கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

2 Min Read
தமிழ்நாடு

மலர் கண்காட்சி: ஊட்டி தாவரவியல் பூங்காவில் இறுதி கட்ட பணிகள் தீவிரம்

சர்வதேச சுற்றுலா தலமான நீலகிரிக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இவ்வாறு வருபவர்களில், 90 சதவீதம் பேர் ஊட்டிக்கு வருகின்றனர். கோடை சீசனான…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?