MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு

அரசியல்

சிபிஎஸ்இ 3-வது மொழி அறிவிப்புக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு

Admin
Last updated: மே 26, 2026 7:26 மணி
Admin
Share
SHARE

சிபிஎஸ்இ ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த கல்வியாண்டில் இருந்தே மூன்று மொழிகளைக் கட்டாயமாக்கியுள்ள புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில், "கடந்த 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிபிஎஸ்இ அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.

குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, சிபிஎஸ்இ அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, சிபிஎஸ்இ அமைப்பு மீறியிருக்கிறது.

சிபிஎஸ்இ அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கெனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின்படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளைக் கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மிகவும் குறுகிய காலத்துக்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும். எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AnnamalaiCBSEEducationTamil Naduஅண்ணாமலைகல்விசிபிஎஸ்இதமிழ்நாடு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பதவி ராஜினாமா ஜனநாயக உரிமை – அமைச்சர் செங்கோட்டையன்
Next Article அ.தி.மு.க. எம்.எல்.ஏ. அருண்மொழி தேவன் ராஜினாமா? த.வெ.க.வில் இணைய திட்டம்!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீரில் கைது செய்யப்பட்ட பதிப்பாளர்கள்

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளை புகழ்ந்த பதிப்பாளர்கள் கைது

ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளை பெருமைப்படுத்தும் புத்தகம் வெளியிட்டதால் 3 பதிப்பாளர்கள்…

ஜூலை 13, 2026

ககன்யான் விண்கலம்: 3 சோதனைகள் வெற்றிகரமாக நிறைவு

ககன்யான் விண்கலத்தில் மேற்கொள்ளப்பட்ட மூன்று புதிய சோதனைகள்…

ஜூலை 13, 2026

குதிரை பேரம்: உமர் அப்துல்லா குற்றச்சாட்டுக்கு பாஜக கண்டனம்

ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, பா.ஜ.க.…

ஜூலை 13, 2026

கணவர் மீது வழக்கு: கோமியத்தை குடிக்க வற்புறுத்தல்

தானே மாநகரில், மனைவியை கோமியத்தை குடிக்க வற்புறுத்திய…

ஜூலை 13, 2026

ஆந்திராவில் மீண்டும் கொரோனா: 2 பேர் உயிரிழப்பு, 8 பேருக்கு தொற்று

ஆந்திராவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.…

ஜூலை 13, 2026

You Might Also Like

சினிமா

நீதிக்கு குரல் கொடுக்கும் ‘ஆட்டி’ – இசக்கி கார்வண்ணன் பேட்டி

அநீதிக்கு எதிராக போராடும் பெண்களை மையப்படுத்திய 'ஆட்டி' திரைப்படம் ஜூன் 12 அன்று வெளியாகிறது. இசக்கி கார்வண்ணன் தனது சினிமா, அரசியல், வியாபாரப் பயணங்கள் குறித்து மனம்…

1 Min Read
அரசியல்

சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது: முதல்வர் விஜய் உட்பட புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு

சென்னை: 17-வது சட்​டப்​பேர​வை​யின் முதல் கூட்​டம் இன்று தொடங்கியது. இதில், தற்​காலிக பேர​வைத் தலைவர் கருப்பையா முன்​னிலை​யில், முதல்​வர் ஜோசப் விஜய் உட்பட பேர​வை​யின் புதிய உறுப்பினர்கள்…

1 Min Read
நாகர்கோவிலில் ஜவுளிக்கடை முன்பக்க கண்ணாடி உடைந்த காட்சி
தமிழ்நாடு

நாகர்கோவில்: மலிவு விலை சேலைக்காக ஜவுளிக்கடை கண்ணாடியை உடைத்த பெண்கள்

நாகர்கோவிலில் மலிவு விலை சேலைகளுக்காக ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஜவுளிக்கடை முன்பக்க கண்ணாடி உடைந்து பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.

2 Min Read
அரசியல்

மேகதாது அணை: கர்நாடக துணை முதல்வருக்கு தலைவர்கள் கடும் கண்டனம்!

கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவக்குமார், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் எதிர்ப்புக்கு உரிமை இல்லை என கூறியதற்கு தமிழக தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?