சென்னையில் இன்று (மே 25) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.400 உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. சர்வதேச பொருளாதார நிலை, மத்திய கிழக்கில் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்க முதலீடு, உலக பங்குச் சந்தை நிலவரங்கள் போன்ற காரணிகள் தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன.
இந்தியாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. கடந்த மே 13 அன்று, மத்திய அரசு தங்கத்தின் மீதான சுங்க வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியது. அதன் பிறகு தங்கத்தின் விலையில் தொடர்ச்சியான மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.50 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,780 ஆகவும், ஒரு பவுன் ரூ.400 உயர்ந்து ரூ.1,18,240 ஆகவும் விற்பனையாகிறது. கடந்த சனிக்கிழமை அன்று தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், 24 காரட் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.440 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.1,28,992-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையைப் பொறுத்தவரை, இன்று எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் ரூ.295-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,95,000-க்கும் விற்பனையாகிறது.