MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

Admin
Last updated: மே 28, 2026 6:46 மணி
Admin
Share
SHARE

புதுடெல்லி: சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல் முறையில் திருத்தப்பட்டதில் எழுந்த சர்ச்சை குறித்து மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பொறுப்பேற்றுள்ளார். மதிப்பிடும் முறையில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் யாரும் தப்பிக்க முடியாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

டிஜிட்டல் விடைத்தாள் மதிப்பிடும் (On Screen Marking – OSM) முறையில் மதிப்பெண் தாள்கள் ஸ்கேன் செய்யப்பட்டதில், அதன் பிரதிகள் மங்கலாக இருந்ததாகவும், சில விடைகள் சரிபார்க்கப்படாமல் விடப்பட்டதாகவும், இணையதளம் செயலிழந்ததாகவும், கட்டணம் செலுத்துவதில் சிக்கல்கள் ஏற்பட்டதாகவும், மறுமதிப்பீட்டு செயல்முறையிலும் குழப்பங்கள் நிலவுவதாகவும் சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் புகார்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியில் சிபிஎஸ்இ அதிகாரிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆலோசனை நடத்தினார்.

ஆலோசனைகளுக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தர்மேந்திர பிரதான், ‘ஓஎஸ்எம் முறையில் மதிப்பீட்டில் மாணவர்களின் மதிப்பெண்கள் குறைந்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்துக்கு நான் பொறுப்பேற்கிறேன். இது சரிசெய்யப்படும், தீர்வு காணப்படும். நாங்கள் அனைவரும் அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளோம். தேர்வு எழுதிய 17 லட்சம் மாணவர்களின் விடைத்தாள்களை நாங்கள் பாதுகாத்து வைத்துள்ளோம். ஓஎஸ்எம் முறை என்பது உலக அளவில் பல்வேறு கல்வி நிறுவனங்களால் பின்பற்றப்படும் ஒரு முற்போக்கான முறை. இது மாணவர்களை மையமாகக் கொண்டது. மாணவர்களுக்காகவே வடிவமைக்கப்பட்டது. இதன்மூலம், தங்கள் மதிப்பெண்கள் குறித்த வெளிப்படையான தகவல்களை அவர்கள் பெறுவது உறுதி செய்யப்படுகிறது.

ஓஎஸ்எம் முறை அரசின் விதிகளுக்கு உட்பட்டே நடைபெற்றுள்ளது. இதில், ஏதேனும் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட யாரும் தப்ப மாட்டார்கள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பியது குறித்து கேட்கிறீர்கள். அரசியலை நாம் பின்னர் வைத்துக்கொள்ளலாம். தற்போதைய சூழலில் மாணவர்களின் மன உளைச்சல் மேலும் அதிகரிக்காமல் இருப்பதே மிக முக்கியம். மாணவர்களிடையே பதற்றத்தை அதிகரிக்கும் வகையிலான கருத்துகளை அரசியல் தலைவர்களும் பொதுமக்களும் வெளியிட வேண்டாம்’ என்று கேட்டுக்கொண்டார். சிபிஎஸ்இ வெளியிட்டுள்ள அறிக்கையில், பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் பலர் தங்கள் மதிப்பெண்கள் குறித்து வருத்தத்துடன் இருப்பதாகவும், அதற்கு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஓஎஸ்எம் முறையே காரணம் என்றும் கருதுவதாக சமூக வலைதளங்கள் வழியாக தகவல்கள் வருவதாகக் குறிப்பிட்டுள்ளது. மாணவர் நலனில் சிபிஎஸ்இ எப்போதும் அக்கறை கொண்டுள்ளது என்றும், புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட ஓஎஸ்எம் நடைமுறையானது, அனுபவமிக்க ஆசிரியர்கள் தயாரித்த மதிப்பிட்டு திட்டத்தின் அடிப்படையில், ஒரே மாதிரியான மற்றும் சீரான மதிப்பிட்டை உறுதி செய்யும் என்றும், மேலும் அந்த மதிப்பிட்டில் மாற்று முறைகளில் எழுதப்பட்ட பதில்களுக்கும், மதிப்பெண் பெறும் வகையில் வழி காட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளது. எனினும் மாணவர்களுக்கு தங்கள் தேர்வு முடிவில் திருப்தி இல்லை எனில், மறுகூட்டல், திருத்தப்பட்ட விடைத்தாள்களைப் பார்வையிடுதல் மற்றும் மறுமதிப்பீடு கோரலாம். தேர்வு முடிவுகள் தொடர்பாக கவலை அடைந்துள்ள மாணவர்களுக்கு இலவச ஆலோசனை சேவையும் 1800-11-8004 என்ற தொலைபேசி வழியாக வழங்கப்படுகிறது. மேலும் resultcbse2026@gmail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் மாணவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்றும் சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CBSEExamOSMPlus 2சிபிஎஸ்இதர்மேந்திர பிரதான்தேர்வுபிளஸ் 2
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தமிழகத்தை முதலீட்டு மையமாக்க அமைச்சர் கீர்த்தனா ரீல்ஸ் வீடியோ
Next Article எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் எனது பயணம்: சி. விஜயபாஸ்கர்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

இந்தியா

பஞ்சாபில் மாமியாரை செங்கலால் கொன்ற மருமகள்: ஹோஷியார்பூரில் அதிர்ச்சி

பஞ்சாப் ஹோஷியார்பூரில் குடும்பத் தகராறில் மருமகள் செங்கலால் தாக்கி மாமியாரைக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக மருமகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

1 Min Read
இந்தியா

மருமகளின் ரீல்ஸ் வீடியோவால் மாமனார், மாமியார் தற்கொலை: அதிர்ச்சி சம்பவம்

அரியானாவில், மருமகளின் ரீல்ஸ் வீடியோக்களால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மாமனார், மாமியார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
இந்தியா

புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு

புதுச்சேரியில் அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது. ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் முன்னிலையில் 3 புதிய அமைச்சர்கள் பதவியேற்றனர். இதன் மூலம் அமைச்சரவை மேலும் பலம் பெற்றுள்ளது.

0 Min Read
இந்தியா

நீட் தேர்வு ரத்து: தவிப்பில் மாணவர்கள்; தீர்வு என்ன?

நீட் தேர்வு வினாத்தாள் கசிவால் ரத்து செய்யப்பட்ட நிலையில், லட்சக்கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளதோடு, தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்…

5 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?