வைட்டமின் டி குறைபாடு: பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

நம் உடல் சீராக இயங்கவும் ஆரோக்கியமாக வாழவும் பல்வேறு வைட்டமின் சத்துக்கள் அவசியமாகின்றன. இவற்றில் புரதம், வைட்டமின் பி, மற்றும் வைட்டமின் டி ஆகியவை மிக முக்கியமானவையாகும். இந்த சத்துக்கள் எந்தெந்த உணவுகளில் உள்ளன, அவற்றை எப்படிப் பெறுவது என்பது குறித்து விரிவாகக் காண்போம்.

புரதச்சத்து என்பது உடலுக்குத் தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்றாகும். துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்களில் சுமார் 80 சதவீதத்தினருக்கு புரதக் குறைபாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. முட்டை, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பூசணி விதைகள், மற்றும் சியா விதைகள் போன்றவற்றில் புரதச்சத்து நிறைந்துள்ளது.

கர்ப்பிணிப் பெண்களுக்கு ஃபோலேட் எனப்படும் வைட்டமின் மிகவும் அவசியமாகும். கீரைகள் மற்றும் காய்கறிகளில் ஃபோலேட் அதிகமாகக் காணப்பட்டாலும், பலருக்கும் இந்தச் சத்து குறைவாகவே உள்ளது. ஆரஞ்சு வகை பழங்கள், பிரக்கோலி போன்றவற்றிலும் வைட்டமின் பி9 (ஃபோலேட்) கிடைக்கிறது.

வைட்டமின் டி, எலும்புகளுக்கு வலிமை சேர்ப்பதிலும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி கிடைத்தாலும், நம் நாட்டில் பலர் இந்தச் சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொழுப்பில் கரையக்கூடிய இந்த வைட்டமின், முட்டை, பால், மீன், மற்றும் காளான் போன்ற உணவுகளிலும் அதிகளவில் காணப்படுகிறது.

Share This Article
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version