MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: மாமல்லபுரத்தில் தவெக பிரம்மாண்ட இணைப்பு விழா: 20,000 பேர் பங்கேற்பு!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - மாமல்லபுரத்தில் தவெக பிரம்மாண்ட இணைப்பு விழா: 20,000 பேர் பங்கேற்பு!

தமிழ்நாடு

மாமல்லபுரத்தில் தவெக பிரம்மாண்ட இணைப்பு விழா: 20,000 பேர் பங்கேற்பு!

Admin
Last updated: ஜூலை 2, 2026 6:04 காலை
Admin
Share
SHARE

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில், மாற்று கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20,000 பேர் அக்கட்சியில் இணையும் மாபெரும் விழா இன்று (ஜூலை 02) மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த பிரம்மாண்ட நிகழ்விற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக-வில், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களான மரகதம் குமரவேல், இசக்கி சுப்பையா, ஜெயக்குமார், சத்யபாமா ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு இணைந்தனர். தொடர்ந்து, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் ஆகியோரும் தங்கள் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்து தவெக-வில் இணையவுள்ளதாக அறிவித்துள்ளனர். இது அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாமல்லபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறும் இந்த விழாவில், சுமார் 20,000 பேர் பங்கேற்க உள்ளனர். இதற்காக 4,000 பேர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. மண்டபத்திற்கு வெளியே பெரிய எல்இடி திரைகளும் நிறுவப்பட்டுள்ளன. மேலும், பங்கேற்பாளர்களுக்கு தடபுடல் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த 2 முன்னாள் அமைச்சர்கள், 4 மாவட்ட செயலாளர்கள், 7 முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள், நான்கு பாராளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்கள், 50 மாநில நிர்வாகிகள், 45 ஒன்றிய கழகச் செயலாளர்கள், 15 நகரக் கழகச் செயலாளர்கள், 40 மாவட்ட அணி செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி, கிளைக் கழக நிர்வாகிகள் என ஏராளமானோர் 200 பேருந்துகள் மற்றும் 400 கார்களில் சென்னை வந்து தவெக-வில் இணைய உள்ளனர். இந்த இணைப்பு விழாவுக்கான விரிவான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். திருச்சி வளர்மதி, திருப்பூர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், வைரமுத்து, இளம்பை தமிழ்ச்செல்வன், ஒரத்தநாடு சேகர், திருச்சி சீனிவாசன், மான்ராஜ், ராம்குமார், ராஜவர்மன், சதன் பிரபாகர், திருஞானசம்பந்தம், சுந்தர்ராஜன் ஆகியோரும் தவெக-வில் இணைகின்றனர். இதனிடையே, நத்தம் விஸ்வநாதன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கே.பி.அன்பழகன், கே.சி.வீரமணி, அருண்மொழிதேவன், பாலகிருஷ்ணரெட்டி, கிருஷ்ணமுரளி, எஸ்.எம்.சுகுமார் ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட புதிய பதவியை ஏற்க முடியாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இது அதிமுக தலைமையை மேலும் சோர்வடையச் செய்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Politicsஅரசியல்இணைப்பு விழாதமிழக வெற்றிக் கழகம்தவெகமாமல்லபுரம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சிக்சர்களில் சதம்! இந்திய அணியை காத்த அபிஷேக் சர்மா
Next Article முதலமைச்சர் விஜய் மீது வழக்குப்பதிவு: ஆளுநருக்கு ஆர்.எஸ்.பாரதி கடிதம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மும்பையில் கனமழையால் இடிந்து விழுந்த குடியிருப்பு கட்டிடம்

மும்பையில் கனமழையால் குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழப்பு

மும்பை மன்குர்ட் பகுதியில் கனமழையால் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து 6 பேர் உயிரிழந்தனர்.…

ஜூலை 6, 2026

அசாம் சட்டசபையில் இந்திக்கு அனுமதி: முதல் முறை

அசாம் சட்டமன்றத்தில் முதல் முறையாக இந்தி மொழி…

ஜூலை 6, 2026

மும்பை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

மும்பை, தானே, பால்கர் மாவட்டங்களில் கனமழை காரணமாக…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவில்: ரூ.5 கோடி தங்க நூல் காணாமல் போனதாக புகார்

அயோத்தி ராமர் கோவிலில் இருந்து ரூ.5 கோடி…

ஜூலை 5, 2026

விசாகப்பட்டினம் கடலில் படகு கவிழ்ந்து 6 மீனவர்கள் மாயம்: தேடுதல் வேட்டை தீவிரம்

விசாகப்பட்டினம் அருகே கடலில் படகு கவிழ்ந்து 6…

ஜூலை 5, 2026

You Might Also Like

அரசியல்

ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது குறித்தும், நடிகர் விஜய்யின் முதல்வர் பதவி குறித்த விமர்சனங்கள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

ஹஜ் பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு: ஜூலை 20க்குள் விண்ணப்பிக்கலாம்!

2027ஆம் ஆண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோர் ஜூலை 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஹஜ் பயணிகளுக்கான மானியம் உயர்த்தப்படும். வக்ஃபு சொத்துக்கள் பதிவேற்றம் 95% நிறைவடைந்துள்ளது. NIA…

1 Min Read
தமிழ்நாடு

ஜெயலலிதாவின் படத்தை பார்த்து அழுதபடியே பதவியேற்ற எம்.எல்.ஏ.

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டசபைக்கு புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்களாகப் பதவியேற்று வருகின்றனர்.…

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி பயணம் முடிந்தது: முதல்வர் விஜய் சென்னை திரும்பினார்

முதல்-அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, தனது முதல் வெளிநாட்டுப் பயணமாக டெல்லி சென்றிருந்த முதல்வர் விஜய், இன்று காலை சென்னை திரும்பினார். பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமனை சந்தித்தார்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?