MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு

க்ரைம்

தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு

Fernandez
Last updated: ஜூலை 24, 2026 9:54 மணி
Fernandez
Share
தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக செய்தி
தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது பாலியல் புகார்.
SHARE

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது, கட்சியில் பொறுப்பு கேட்கச் சென்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை கூறி, பின்னர் வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பெண் தனது புகார் மனுவில், கடந்த பத்து மாதங்களுக்கு முன்பு தவெக கட்சியில் தன்னை இணைத்துக் கொள்வதற்காக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மகளிர் அணி பொறுப்பு கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். அதற்கு அவர், 'பெண்களுக்கான கட்சி இது, உங்களுக்கு முன்னுரிமை உண்டு' என்று உறுதியளித்ததாகக் கூறியுள்ளார்.

பின்னர், விழாக்கள் நடக்கும்போது தன்னை அழைக்குமாறு அவர் கேட்டபோது, விஜய்மோகன் இன்ஸ்டாகிராம் மூலம் தன்னைத் தொடர்பு கொண்டு பேசத் தொடங்கியதாகப் பெண் தெரிவித்துள்ளார். கட்சியில் பதவி அவ்வளவு எளிதில் கிடைத்துவிடாது என்றும், தனக்காக அவர் என்ன செய்வார் என்றும் விஜய்மோகன் கேட்டதாகவும், அதற்குப் பெண் தன்னிடம் எதுவும் இல்லை என்று கூறியபோது, 'எனக்கு வீடியோ கால் செய், அது போதும்' என்று ஆசை வார்த்தை கூறியதாகப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, விஜய்மோகன் வீடியோ கால் செய்து, பெண்ணின் தோற்றத்தைப் பாராட்டி, திருமணம் ஆகிவிட்டதா என்று விசாரித்ததாகவும், பின்னர் மார்பகத்தைக் காட்டுமாறு கேட்டதாகவும், பெண் மறுத்ததும் கால் துண்டிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மீண்டும் தொடர்பு கொண்ட விஜய்மோகன், பதவி வேண்டுமானால் இது போன்ற சின்ன விஷயங்களைச் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், அதற்குப் பெண் சம்மதித்ததும், அந்த வீடியோவை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஸ்கிரீன் ரெக்கார்டிங் பதிவைக் காட்டி, முழு உடலையும் காட்டுமாறு மிரட்டியதாகவும், பயப்பட வேண்டாம் என்றும், எந்த உதவியும் வேண்டுமானால் கேட்பதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியதாகவும் பெண் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, விஜய்மோகன் மீது BNS சட்டப்பிரிவுகள் 75, 78, 308, 351 மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தச் சம்பவம் தமிழக வெற்றிக் கழகம் கட்சியிலும், இராணிப்பேட்டை பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:G.VijaymohanG.விஜய்மோகன்RanipetSexual HarassmentTVEKஇராணிப்பேட்டைதவெகபாலியல் புகார்முதல்வர் தனிப்பிரிவு
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article ஐபோன் 17 ஸ்மார்ட்போன் ஐபோன் 17 விலை உயர்வு: ஆகஸ்டில் ரூ.12,000 வரை அதிகரிக்க வாய்ப்பு!
Next Article தமிழ்நாடு மின்சார வாரியத்தின் அறிவிப்பு பலகை விவசாயிகளுக்கு 18 மணி நேர இலவச மின்சாரம் தொடரும்: மின்வாரியம் உறுதி
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய இணை அமைச்சர் ரவ்னீத் சிங் பிட்டு

மத்திய இணை அமைச்சர் பதவியிலிருந்து ரவ்னீத் சிங் விலகல்

மத்திய ரயில்வே இணை அமைச்சர் பதவியில் இருந்து ரவ்னீத் சிங் பிட்டு ராஜினாமா…

ஜூலை 24, 2026

இமாச்சலப் பிரதேசத்தில் பாறை சரிந்து 13 பேர் உயிரிழப்பு

இமாச்சலப் பிரதேசத்தின் லாஹால்-ஸ்பிதி மாவட்டத்தில் கடூ நாலா…

ஜூலை 24, 2026

அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை: இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருங்கள்!

பிரதமர் மோடி, தனது அமைச்சர்களுக்கு இன்ஸ்டாகிராமில் அதிகளவில்…

ஜூலை 24, 2026

இளைஞர்களுடன் இணைய இன்ஸ்டா ரீல்ஸ்: மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

இளைஞர்களுடன் தொடர்பில் இருக்க இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பதிவிட…

ஜூலை 24, 2026

நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசின் நிலைப்பாடு என்ன? – கனிமொழி கேள்வி

நீட் தேர்வு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விரிவான…

ஜூலை 24, 2026

You Might Also Like

க்ரைம்

சிறுமிக்கு பாலியல் தொல்லை: இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை!

சென்னை மதுரவாயலில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கி போக்சோ…

1 Min Read
லைஃப் ஸ்டைல்

நான் முதல்வன் திட்டம் இனி திறன் தமிழ்நாடு: பெயர் மாற்றம்

தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' திட்டம், தவெக ஆட்சியில் 'திறன் தமிழ்நாடு' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பழைய பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன.

1 Min Read
க்ரைம்

காதலிக்க மறுத்த பெண்ணின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு: இளைஞர் கைது

கோவையில், காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் பெட்ரோல் குண்டுகளை வீசிய இளைஞர் மற்றும் அவரது நண்பர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.…

1 Min Read
அரசியல்

தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மேலிடப் பொறுப்பாளர் அறிவிப்பு

தமிழக முதலமைச்சர் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற தவெக அழைப்பு விடுத்துள்ளது. எத்தனை அமைச்சர்கள் இடம் பெறுவார்கள் என்பது குறித்து ஆலோசனை நடந்து வருகிறது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?