MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தருணங்கள் – புகைப்பட தொகுப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தருணங்கள் – புகைப்பட தொகுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - அரசியல் - தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தருணங்கள் – புகைப்பட தொகுப்பு

அரசியல்

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தருணங்கள் – புகைப்பட தொகுப்பு

Admin
Last updated: மே 10, 2026 3:24 மணி
Admin
Share
SHARE

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர்.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணியளவில் பதவியேற்பு விழா தொடங்கியது. வந்தே மாதரம் பாடல் இசைக்க பதவியேற்பு விழா தொடங்கியது. பின்னர் தேசிய கீதம் பாடப்பட்டது, அதன் பின்னர் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது.

இதனையடுத்து தமிழகத்தின் 18-வது முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் அர்லேகர் பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்வர் விஜய்யுடன் புஸ்ஸி என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஜி.அருண்ராஜ், கே.ஏ.செங்கோட்டையன், வெங்கடரமணன், நிர்மல்குமார், ராஜ்மோகன், டி.கே.பிரபு, கீர்த்தனா உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். 

தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்ட சி.ஜோசப் விஜய், வீடுகளில் 2 மாதங்கள் 500 யூனிட் பயன்படுத்துபவர்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சாரம், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் ‘சிங்கப்பெண் அதிரடிப்படை’ திட்டம், போதைப் பொருள் புழக்கத்தை தடுக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் போதை பொருள் தடுப்புப் படை திட்டங்களுக்கான கோப்புகளில் கையெழுத்திட்டார்.

விஜய்யின் பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், விஜய்யின் உறவினர்கள் பலரும் விழா அரங்கிற்கு வருகை தந்தனர்.

கூட்டணி கட்சித் தலைவர்களாக மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், விசிக சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதே போல பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், பாமக தலைவர் அன்புமணி, சட்டமன்ற உறுப்பினர் சவுமியா அன்புமணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

தவெக தலைவர் விஜய் தன் ஃபேவரிட் கோட், வெள்ளை சட்டை அணிந்து வருகை தந்தார். வழக்கமாக இதுவரை தமிழகத்தில் பதவியேற்ற முதல்வர்கள் அனைவரும் வேட்டி அணிந்தே பதவியேற்று வந்த நிலையில், விஜய் அந்த வழக்கத்தை தவிர்த்துவிட்டு கோட் சூட் அணிந்து வந்தது கவனம் ஈர்த்தது. அவர் அரங்கினுள் நுழைந்ததும் உள்ளே அமர்ந்திருந்த தவெக தொண்டர்கள் அனைவரும் எழுந்து நின்று ஆராவாரம் செய்தனர். ‘டிவிகே’, ‘டிவிகே’ என்ற ஆர்ப்பரிப்பால் அரங்கமே அதிர்ந்தது.

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்தபோது விஜய் சென்று அவரை கட்டியணைத்து வரவேற்றார். இருவரும் ஒன்றாக மேடைக்கு வந்து அமர்ந்தனர். அருகில் அமைச்சராக பதவியேற்க இருந்த 9 எம்எல்ஏக்களும் அமர்ந்தனர்.  9.50 மணியளவில் தமிழக பொறுப்பு ஆளுநர் அரங்கிற்கு வருகை தந்தார். 

இதன் பிறகு முதல்வராக தனது முதல் உரையில் பேசிய விஜய், “சினிமாவில் ஒரு சாதாரண உதவி இயக்குநரின் மகன் தான் நான். எனக்கு வாழ்க்கையில் வறுமை, பசி என்றால் என்னவென்று தெரியும். நான் மன்னர் பரம்பரையில் இருந்து வந்தவன் அல்ல. நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன் தான். நீங்களும் என்னை அப்படி நினைத்ததால் தான், என்னை வெற்றி பெறவைத்துள்ளீர்கள” என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

எமோஷனலாக தொடங்கிய விஜய் பின்னர் தனது வழக்கமான பாணிக்கு மாறி அதிரடியாக பேசினார். “மக்கள் பணத்திலிருந்து ஒரு ரூபாய் கூட எடுக்க மாட்டேன். எனக்கு அந்த அவசியம் இல்லை. அதுபோல நான் யாரையும் தப்பு செய்யவும் விட மாட்டேன். எனது அரசில் யாரும் தவறு செய்ய விடமாட்டேன். ஜெயித்துவிட்டோம் என ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கலாம் என்ற என்ணம் இருந்தால், அதனை உடனே மறந்துவிடுங்கள்” என்று ஆவேசமாக தெரிவித்தார். 

இறுதியாக மேடையில் இருந்த அனைவரும் முதல்வர் விஜய்யுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டனர். விஜய்யும் தனது செல்போனில் மேடைக்கு கீழே இருந்த தொண்டர்களை செல்ஃபி வீடியோ எடுத்துக் கொண்டார்.

புதிய முதல்வராக பொறுப்பேற்ற பின்னர் விஜய் தலைமைச் செயலகத்துக்கு சென்றார். அங்கு முதல்வருக்கான இருக்கையில் அமர்ந்து கோப்புகளில் கையெழுத்திட்டு அலுவல்களை தொடங்கினார். அவருக்கு தமிழக அரசின் உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article முதலமைச்சராக பதவி ஏற்றதும் 200 யூனிட் மின்சாரம் இலவசம் உள்ளிட்ட 3 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார் விஜய்
Next Article முதல் – அமைச்சர் விஜய்க்கு வானதி சீனிவாசன் வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக, எந்த எல்லைக்கும் செல்ல இந்தியா…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

காரில் தாமதம்: ஆட்டோவில் சென்ற மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி – கேரளாவில் பரபரப்பு

கேரளாவில் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி, கார்…

ஆகஸ்ட் 9, 2026

அவசரநிலைப் போராளிகளுக்கு மாதம் ரூ.10,000 ஓய்வூதியம்: முதல்வர் அறிவிப்பு

மேற்கு வங்காள முதல்வர் சுவேந்து அதிகாரி, அவசரநிலையை…

ஆகஸ்ட் 9, 2026

டெல்லி சாலைகளில் ரப்பர் படகு சவாரி: வெள்ளக்காட்சிகள்

டெல்லியில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகள் நீரில்…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

அரசியல்

மேகேதாட்டு அணை: சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த முதல்வர் விஜய் உத்தரவு

மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையையும் விவசாயிகளின் நலனையும் பாதுகாக்க சட்டப் போராட்டத்தை தீவிரப்படுத்த அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் மற்றும் சீராய்வு…

1 Min Read
அரசியல்

ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்தது குறித்தும், நடிகர் விஜய்யின் முதல்வர் பதவி குறித்த விமர்சனங்கள் குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.

2 Min Read
அரசியல்

காசநோயை ஒழிக்க சித்த மருத்துவத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இந்தியாவில் காசநோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமத்துடன் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. இதன் மூலம் சித்த…

1 Min Read
அரசியல்

கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்

அதிமுகவில் தனியாக செயல்பட்டு வந்த எஸ்.பி.வேலுமணி அணி, மீண்டும் பழனிசாமி அணியுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து எஸ்.பி.வேலுமணி கூறுகையில், 'எங்களுக்குள் இருந்தது கருத்து வேறுபாடு தானே தவிர, பிளவு…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?