MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!
அரசியல்

ஸ்டாலினை சந்தித்தேன் ஏன்? ரஜினி விளக்கம்!

Admin
Last updated: May 17, 2026 12:01 pm
Admin
Share
SHARE

சென்னை: தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை தான் ஏன் சந்தித்தேன் என்பது குறித்து நடிகர் ரஜினிகாந்த் விரிவாக விளக்கமளித்துள்ளார். சென்னையில் உள்ள போயஸ் கார்டனில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 'தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு என்னைப் பற்றி சில விமர்சனங்கள் எழுந்தன. அது தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கம் தர வேண்டும் என நினைத்தேன். அதற்காகத்தான் இன்று உங்களை சந்திக்க வந்துள்ளேன்' என்று கூறினார்.

'தேர்தல் முடிவுகள் வந்தவுடன் நான் ஸ்டாலின் சாரை சந்தித்தது விமர்சனத்துக்கு உள்ளானது. ஸ்டாலின் சாருக்கும் எனக்கும் இடையிலான நட்பு அரசியலுக்கு அப்பாற்பட்டது. அவர் எனது நீண்ட கால நண்பர். ஜனநாயகத்தில் வெற்றி தோல்வி சகஜம் என்றாலும், கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலின் தோல்வியடைந்தது எனக்கு சங்கடமாக இருந்தது. அதனால் நண்பர் என்ற முறையில் அவரைச் சென்று பார்த்தேன். ஆனால், விஜய் முதல்வர் ஆகக்கூடாது, அதிகாரத்துக்கு வரக்கூடாது, அதைத் தடுக்கவே நான் அங்கு சென்றதாக வதந்திகள் பரவின. அந்தச் சூழலில் அப்படிப் பேச முடியாது. அப்படி தரம் தாழ்ந்து பேசக்கூடிய நபர் நான் அல்ல' என ரஜினிகாந்த் தெரிவித்தார்.

'மேலும், நான் அவருக்கு (விஜய்) வாழ்த்து தெரிவிக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன. அவர் வென்றதும் எக்ஸ் தளத்தில் எனது வாழ்த்துகளைப் பதிவு செய்திருந்தேன். விமான நிலையம் செல்லும் வழியில் ஒரு நபர், 'விஜய் முதல்வர் ஆகிவிட்டார்' என்று சொன்னபோது, நான் புன்னகையுடன் சென்றுவிட்டேன். அதை வைத்து நான் வாழ்த்து தெரிவிக்கவில்லை என விமர்சனம் எழுந்தது. எனக்கு விஜய் மீது பொறாமை என்றும் கூறப்பட்டது. நான் அரசியலில் இல்லாதபோது, அவர் மீது எனக்கு ஏன் பொறாமை வரப்போகிறது? ஒருவேளை கமல்ஹாசன் முதல்வர் ஆகியிருந்தால் கூட எனக்கு பொறாமை வந்திருக்காது. எனக்கும் விஜய்க்கும் இடையே ஒரு தலைமுறை இடைவெளி உள்ளது. நாங்கள் ஒருவருக்கொருவர் போட்டியிடுவது எங்களுக்கு நல்லதல்ல என்று நான் அவரிடம் கூறியுள்ளேன்' என ரஜினிகாந்த் விளக்கினார்.

'சிறு வயதிலிருந்தே அவரைப் பார்த்து வருகிறேன். அவர் முதல்வர் ஆவதில் எனக்கு என்ன பொறாமை? அவர் இளம் வயதில் முதல்வர் ஆகியுள்ளார். எம்ஜிஆர், என்டிஆர் செய்த சாதனைகளை விட அவரது சாதனை பெரியது. தனியொருவராக பெரிய கட்சிகளுக்கு எதிராக வெற்றி பெற்றுள்ளார். சினிமாத்துறையில் இருந்து வந்து அவர் சாதித்தது எனக்கு ஆச்சரியம் அளிக்கிறது. மக்கள் அவர் மீது மிகுந்த எதிர்பார்ப்புடன் வாக்களித்துள்ளனர். அந்த எதிர்பார்ப்பை நிச்சயம் நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அதற்காக எனது வாழ்த்துகள். நான் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்பது குறித்த விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளேன். எனது ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான கட்சிகளில் இணைந்து பயணிக்கலாம் என ஏற்கெனவே கூறியுள்ளேன். அரசியல் என்பது மிகப்பெரிய பொறுப்பு. ஆறுபது ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்தில் ஒரு மாற்றம் ஏற்பட்டுள்ளது. சினிமா புகழ், இளைஞர்கள், மகளிர் கொண்டு வந்துள்ள மாற்றம் இது' என்று தெரிவித்தார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:SuperstarTamil Nadu Politicsஅரசியல்ரஜினிகாந்த்விஜய்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!
Next Article ஆண்களே கவனம்! குடும்ப வன்முறையால் தற்கொலை – அரசுக்கு அதிரடி கோரிக்கை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

குறுகிய கால ஹஜ் யாத்திரை: மத்திய அரசின் புதிய திட்டம் அறிமுகம்!

தொழில் செய்பவர்கள் நீண்ட நாட்கள் பயணிக்க முடியாத சூழலைக் கருத்தில் கொண்டு, மத்திய…

May 17, 2026

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்பு: ஜூன் 25 முதல் சிறப்புப் பணி!

தெலங்கானாவில் வாக்காளர் சரிபார்ப்புப் பணிகள் ஜூன் 25…

May 17, 2026

நாடாளுமன்ற குழு கூட்டங்களில் 53% பங்கேற்பு: ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

மத்திய அரசின் நாடாளுமன்ற நிலைக்குழு கூட்டங்களில் உறுப்பினர்களின்…

May 17, 2026

ராஜ்தானி விரைவு ரெயில்: நடுரோட்டில் தீ விபத்து – பயணிகள் தப்பினர்!

ராஜஸ்தான் அருகே ராஜ்தானி விரைவு ரெயிலில் தீ…

May 17, 2026

நீட் தேர்வு மைய மாற்றம்: தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள்…

May 17, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அதிமுகவில் அதிரடி: புதுக்கோட்டை, தென்காசி மாவட்ட செயலாளர்கள் நீக்கம்!

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை தெற்கு மற்றும் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர்களை உடனடியாகப் பதவிகளில் இருந்து விடுவித்து அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

1 Min Read
அரசியல்

ஒரே நாடு ஒரே தேர்தல்: கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் – நாடு தழுவிய பாதையாத்திரை!

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நாடு தழுவிய பாதையாத்திரை நடத்தவுள்ளது. ஆகஸ்ட் 6 முதல் 15 வரை நடைபெறும் இந்த…

1 Min Read
அரசியல்

தமிழக முதல்வர் விஜய் பதவியேற்பு விழா தருணங்கள் – புகைப்பட தொகுப்பு

தமிழக முதல்வராக பதவியேற்றார் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய். அவருடன் 9 அமைச்சர்களும் பதவி ஏற்றனர். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை…

3 Min Read
தமிழ்நாடு

மகளிர் உரிமைத்தொகை: ரூ.1000 விரைவில் வரும் – முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு!

தமிழக முதல்வர் விஜய், மே மாதத்திற்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000 விரைவில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என அறிவித்துள்ளார். திட்ட மறுசீரமைப்புக்கு அவகாசம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?