MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி

க்ரைம்

சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி

Admin
Last updated: மே 10, 2026 2:24 மணி
Admin
Share
SHARE

பிட்காயினில் முதலீடு செய்தால் லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி, தனியார் நிறுவன மேலாளரிடம் ரூ.10.89 லட்சம் மோசடி செய்த நபர் மீது கோட்டூர்புரம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை கோட்டூர் மண்ணப்பா தெருவை சேர்ந்தவர் சசிகுமார் (41), பிட்காயினில் முதலீடு செய்வதாக கூறி தன்னிடம் ரூ.10.89 லட்சத்தை பெற்றுக்கொண்டு ஒருவர் ஏமாற்றி விட்டதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், “கடந்த ஆண்டு அடையாறில் உள்ள தனியார் திரு மண தகவல் மையத்தில் அசோசி யேட் மேலாளராக தான் பணியாற்றிய போது அங்கிருந்த ரிலேஷன் ஷிப் மேனேஜரான கூடுவாஞ்சேரியை சேர்ந்த விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

14 தவணைகளாக..: விக்னேஷ் தான் ‘யுவிசி’ என்ற பிட்காயினில் முதலீடு செய்து மாதம் ரூ.2 லட்சம் வரை லாபம் ஈட்டுவதாகவும், சசிகுமார் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் மாதம் ரூ.20 ஆயிரம் லாபம் பெற்று தருவதாக ஆசை வார்த்தை கூறினார். இதை நம்பி, கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மனைவியின் நகைகளை வங்கியில் அடமானம் வைத்தும், தனிநபர் கடன் மூலமாகவும், மருத்துவச் செலவுக்காக சேமித்து வைத்திருந்த பணம் என மொத்தம் ரூ.10.89 லட்சத்தை 14 தவணைகளாக விக்னேஷிடம் வழங்கினேன்.

ஆனால், பணத்தை பெற்றுக்கொண்ட விக்னேஷ் கூறியபடி லாப தொகையை தராமல் காலம் தாழ்த்தி வந்தார். இதனால் சந்தேக மடைந்து, விக்னேஷ் வசிக்கும் கூடு வாஞ்சேரி பகுதிக்கு சென்று நேரில் விசாரித்த போது, அவர் பிட்காயி னில் எந்த முதலீடும் செய்யவில்லை என்பதும். இதேபோல் பலரிடம் ரூ.40 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்திருப்பதும் தெரியவந்தது.

கொலை மிரட்டல்: இது குறித்து கேட்டபோது விக்னேஷ் கொலை மிரட்டல் விடுத்தார். அவர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டுத்தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சசி குமார் அளித்த புகாரின் அடிப்படையில், கோட்டூர்புரம் குற்றப் பிரிவுகாவல் ஆய்வாளர் கற்பகம் தலைமையிலான போலீஸார், விக்னேஷ் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவை- முதலமைச்சர் விஜய்
Next Article “கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பு

டெல்லி: ₹22,000 கோடி அரிசி ஊழல் – ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

டெல்லியில் ₹22,000 கோடி மதிப்பிலான மானிய அரிசி ஊழல் தொடர்பாக ஆம் ஆத்மி…

ஆகஸ்ட் 9, 2026

கர்நாடகா-தமிழக எல்லையில் நாளை போராட்டம்: வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு

காவிரி நீர் விவகாரத்தில் தமிழ்நாடு தொடர்ந்து துன்புறுத்தலை…

ஆகஸ்ட் 9, 2026

மம்தா பானர்ஜி வாகனம் மீது தாக்குதல்: மேற்கு வங்காளத்தில் பரபரப்பு

மேற்கு வங்காளத்தில், உயிரிழந்த கட்சி தொண்டரின் வீட்டிற்குச்…

ஆகஸ்ட் 9, 2026

மக்களின் பாதுகாப்பிற்கு இந்தியா எந்த எல்லைக்கும் செல்லும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவின் இறையாண்மையையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதற்காக,…

ஆகஸ்ட் 9, 2026

மத்திய பிரதேசம்: கார் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசத்தில் கண்டெய்னர் லாரி கார் மீது…

ஆகஸ்ட் 9, 2026

You Might Also Like

க்ரைம்

கோவையில் கல்லூரி அருகே இளம்பெண் சடலம்: பாலியல் கொலையா என விசாரணை

கோவையில் புதூர் அருகே கல்லூரிக்கு அருகில் அடையாளம் தெரியாத இளம்பெண்ணின் சடலம் அரை நிர்வாண நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது பாலியல் கொலையா என காவல்துறையினர் தீவிர விசாரணை…

1 Min Read
க்ரைம்

மதுரையில் சித்திரை திருவிழா மோதல்: சிறுவன் வெட்டி கொலை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அருகே சித்திரை திருவிழா மோதல் காரணமாக 17 வயது சிறுவன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக…

1 Min Read
க்ரைம்

செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் செவிலியர் பணி வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஆவடி மத்திய…

1 Min Read
க்ரைம்

போக்சோ வழக்கை வாபஸ் பெற மிரட்டல்: பணிநீக்க தலைமை ஆசிரியர் கைது

போக்சோ வழக்கை வாபஸ் பெறக் கோரி புகார் அளித்தவர் மற்றும் சாட்சியை மிரட்டிய பணிநீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் செங்கல்வராயன் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?