MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: “கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: “கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - “கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்

இந்தியா

“கஜானாவில் பணம் இல்லை என கூறி வாக்களித்த மக்களை ஏமாற்றி திசைதிருப்பாதீங்க”: மு.க.ஸ்டாலின்

Admin
Last updated: மே 10, 2026 2:24 மணி
Admin
Share
SHARE

சென்னை: “எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க… உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க” என்று திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவு அறிக்கையில், “தமிழ்நாடு முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளை வரவேற்கிறேன்.

எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.

ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.

‘ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு’ – என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.

தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!

“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.

தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!” என தெரிவித்துள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சென்னை: பிட்காயினில் முதலீடு செய்வதாக ரூ.10.89 லட்சம் மோசடி
Next Article சமூகநீதி, நல்லாட்சிப் பாதையில் புதிய அரசு நடை போடட்டும்! – அன்புமணி வாழ்த்து
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததை கொண்டாடும் சிஜேபி போராட்டக்காரர்கள்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா: சிஜேபி களத்தில் கொண்டாட்டம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதைத்…

ஜூலை 25, 2026

ஜூலை 20 போராட்டம்: 130 காவலர்கள், 65 மாணவர்கள் காயம்

ஜூலை 20 அன்று நாடாளுமன்றத்தை நோக்கிய பேரணியில்…

ஜூலை 25, 2026

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கேவுக்கு டைபாய்டு காய்ச்சல்

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் தீப்கே…

ஜூலை 25, 2026

டெல்லியில் 18 மெட்ரோ நிலையங்கள் தொடர்ந்து மூடல்

டெல்லியில் 18 மெட்ரோ ரயில் நிலையங்கள் அடுத்த…

ஜூலை 25, 2026

மாணவர் போராட்டங்களுக்கு மத்தியில் மோகன் பாகவத் கருத்து

இன்றைய தலைமுறையினர் கேள்விகள் கேட்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.…

ஜூலை 25, 2026

You Might Also Like

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் 'விக்ரம்-1' ராக்கெட்
இந்தியா

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து முதல் தனியார் ராக்கெட் நாளை விண்ணில் சீற்றம்!

ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் 'விக்ரம்-1' நாளை விண்ணில் ஏவப்படுகிறது. 450 கி.மீ உயர சுற்றுப்பாதையை அடையும் இலக்குடன் சோதனைப் பயணம்.

2 Min Read
மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
இந்தியா

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ. 686 கோடியாக இருந்தது, தற்போது ரூ. 38,000 கோடியை தாண்டியுள்ளது என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

2 Min Read
ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை காரில் இழுத்துச் செல்லும் ஓட்டுநர்
இந்தியா

பெட்ரோல் பங்க் ஊழியரை 1 கி.மீ காரில் இழுத்துச் சென்ற ஓட்டுநர்

ஹரியானாவில் பெட்ரோல் பங்க் ஊழியரை டீசல் நிரப்பிய பணத்தை கொடுக்காமல் தப்பிக்க முயன்ற கார் ஓட்டுநர் 1 கி.மீ தூரம் காரில் இழுத்துச் சென்ற அதிர்ச்சி சம்பவம்.…

2 Min Read
அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியின் காட்சி
இந்தியா

அசாம் வெள்ளம்: 31 பேர் உயிரிழப்பு – 16 மாவட்டங்கள் பாதிப்பு

அசாம் மாநிலத்தில் கனமழை காரணமாக 16 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த துயர சம்பவத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?