ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பரபரப்பான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. தர்மசாலாவில் நடைபெற்ற இந்த போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு அதிரடி துவக்கம் கிடைத்தது. வெங்கடேஷ் ஐயர் 73 ரன்களும், விராட் கோலி 58 ரன்களும் குவித்தனர். இறுதியில் டிம் டேவிட் அதிரடியால், பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 222 ரன்கள் குவித்தது. இதைத் தொடர்ந்து, 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சிகள் காத்திருந்தன. முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்ததால், பஞ்சாப் அணி 93 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஸ்டோய்னிஸ் 37 ரன்களும், ஷஷாங் 56 ரன்களும் சேர்த்தாலும், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. இறுதியாக, பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம், 23 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், நடப்பு ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய முதல் அணி என்ற பெருமையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி பெற்றுள்ளது.
You Might Also Like
கிழிந்த ஷாக்ஸ், ஷூக்கள்: உலகக்கோப்பை கால்பந்தில் வீரர்களின் வினோத காரணம்!
உலகக்கோப்பை கால்பந்து தொடரில் வீரர்கள் ஷாக்ஸ் மற்றும் காலணிகளில் ஓட்டைகள் போட்டு விளையாடுவது ஏன்? அசௌகரியம், தசைப்பிடிப்பு, உராய்வு போன்ற பிரச்சனைகளில் இருந்து தப்பிக்க இந்த வினோத…
2 Min Read
இந்தியா – இங்கிலாந்து டி20: தமிழக வீரர் வருண் சக்கரவர்த்திக்கு மீண்டும் வாய்ப்பு
இந்தியா - இங்கிலாந்து முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி அணிக்கு திரும்பிய நிலையில், வைபவ்…
1 Min Read
சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பதவி: லண்டனில் பணியை தொடங்கினார்
சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் விலகலைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியில் முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளது. 2027 ஐபிஎல் தொடரில் ஆலோசகராக நியமிக்கப்பட…
2 Min Read
விராட் கோலி புதிய உச்சம்: தோனி, ரோஹித் சாதனையை முறியடித்த கிங் கோலி!
விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக போட்டிகளில் விளையாடிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். மேலும், டி20 கிரிக்கெட்டில் 14000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர்…
2 Min Read
