MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பதவி: லண்டனில் பணியை தொடங்கினார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பதவி: லண்டனில் பணியை தொடங்கினார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - விளையாட்டு - சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பதவி: லண்டனில் பணியை தொடங்கினார்

விளையாட்டு

சிஎஸ்கேவில் தோனிக்கு புதிய பதவி: லண்டனில் பணியை தொடங்கினார்

Sri Prem Kumar R
Last updated: ஜூலை 15, 2026 5:53 மணி
Sri Prem Kumar R
Share
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக நியமிக்கப்பட உள்ள எம்.எஸ். தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக எம்.எஸ். தோனி
SHARE

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் பதவியில் இருந்து விலகியதைத் தொடர்ந்து, எம்.எஸ். தோனிக்கு அணியில் ஒரு முக்கியப் பொறுப்பு வழங்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே வட்டாரங்களின்படி, 2027 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகராக தோனி நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது.

மேலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் தொடர்பான அனைத்து முக்கிய முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரமும் தோனியிடமே ஒப்படைக்கப்பட உள்ளது. 2026 ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக தோனி ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 45 வயதாகும் தோனி, இனி ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தச் சூழலில், ஸ்டீபன் பிளெமிங்கிற்குப் பதிலாக புதிய பயிற்சியாளரைத் தேர்வு செய்யும் பணியில் சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தப் புதிய பயிற்சியாளரின் தேர்வு முடிந்தவுடன், தோனி சிஎஸ்கே அணியின் ஆலோசகராக தனது பணிகளைத் தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது லண்டனில் உள்ள தோனி, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே பர்மிங்காமில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் கண்டு ரசித்தார்.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் 'தி ஹண்ட்ரட்' தொடருக்காக முகாமிட்டுள்ள சில பயிற்சியாளர்களை தோனி சந்திக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இவர்களில் ஒருவரே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்ற தகவலும் பரவலாக உள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கும் தமிழகத்தைச் சேர்ந்த ஹேமங் பதானி, சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர் பல்வேறு டி20 லீக் தொடர்களில் பயிற்சியாளராக இருந்து பல கோப்பைகளைக் வென்று கொடுத்துள்ளார். இருப்பினும், அவரது பயிற்சியின் கீழ் கடந்த இரண்டு ஆண்டுகளாக டெல்லி கேப்பிடல்ஸ் அணி மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருவதால், அவரை பயிற்சியாளராக நியமிக்கக் கூடாது என சிஎஸ்கே ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த முக்கிய முடிவு எடுக்கும் அதிகாரம் தோனி வசம் அளிக்கப்பட்டால், அவர் யாரைத் தேர்ந்தெடுப்பார் என்ற எதிர்பார்ப்பும் நிலவுகிறது. சிலர் ராகுல் டிராவிட் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வரக்கூடும் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 2026 ஐபிஎல் தொடருக்கு முன்னர் ராகுல் டிராவிட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகினார். அதன் பிறகு அவர் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை. எனவே, அவர் சிஎஸ்கே அணிக்கு வரவும் வாய்ப்புள்ளது.

ராகுல் டிராவிட் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் தொடக்க காலத்தில் சிஎஸ்கே அணியின் உரிமையாளர் என். சீனிவாசனின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஸ்பான்சர்ஷிப் பெற்று விளையாடியுள்ளார். மேலும், அதே நிறுவனத்தில் அவர் ஒரு கவுரவப் பதவியிலும் இருந்தார். இதன் காரணமாக, ராகுல் டிராவிட் இந்தியாவுக்கு டி20 உலகக்கோப்பையை வென்று கொடுத்த பயிற்சியாளர், பேட்டிங் ஜாம்பவான் என்பதோடு சிஎஸ்கே நிர்வாகத்திற்கும் நெருக்கமானவர் என்ற அடிப்படையில், அவர் சிஎஸ்கே அணியின் பயிற்சியாளராக வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

Author

Sri Prem Kumar R

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Chennai Super KingsCricketHemang BadaniIPLMS DhoniRahul DravidStephen Flemingஎம்.எஸ். தோனிஐபிஎல்கிரிக்கெட்சென்னை சூப்பர் கிங்ஸ்ராகுல் டிராவிட்ஸ்டீபன் பிளெமிங்ஹேமங் பதானி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article டேட்டிங் செயலி பயன்படுத்தும் இளைஞர்களின் புகைப்படம் டேட்டிங் செயலிகள்: சாதி தேர்வுகள் இளைஞர்களிடையே புதிய வடிவம் பெறுகின்றனவா?
Next Article தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள் ஒதுக்கீடு குறித்த அறிவிப்பை வெளியிடும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் (அருண்ராஜ்) தமிழ்நாட்டிற்கு கூடுதலாக 150 எம்பிபிஎஸ் இடங்கள்: அமைச்சர் அருண்ராஜ் அறிவிப்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கொச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கத்துடன் கைது செய்யப்பட்ட தமிழக தம்பதி

கேரளாவில் ரூ.2 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்: தமிழக தம்பதி கைது

கேரள மாநிலம் கொச்சியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடி…

ஜூலை 15, 2026

18 நாள் உண்ணாவிரதம்: சோனம் வாங்சுக் உடல்நிலை பாதிப்பு – மத்திய அரசு மவுனம்?

லடாக் தன்னாட்சி உரிமைக்காகப் போராடும் சோனம் வாங்சுக்…

ஜூலை 15, 2026

கணவனைக் கொன்று உடலை துண்டு துண்டாக்கிய மனைவி: காதலனுடன் கைது

நவி மும்பையில், கணவரை கொலை செய்து உடலை…

ஜூலை 15, 2026

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம்: உறவில் முக்கிய தருணம் – மோடி

இந்தியா-இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் இரு நாடுகளின் உறவில்…

ஜூலை 15, 2026

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ் ரத்து: சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட்…

ஜூலை 15, 2026

You Might Also Like

விளையாட்டு

வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் நிலை வந்துவிடக்கூடாது: கல்லினன் எச்சரிக்கை

இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டம், அவருக்கு சச்சின் டெண்டுல்கரைப் போல காயங்களை ஏற்படுத்தக்கூடும் என தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேரில் கல்லினன் எச்சரித்துள்ளார். மணிக்கட்டு,…

2 Min Read
விளையாட்டு

IPL 2026: “வைபவ் சூர்யவன்ஷி 21 வயதில் ஓய்வு பெற்றுவிடுவார்”.. வாகன் வெளியிட்ட அதிரடித் தகவல்

மும்பை: உலக கிரிக்கெட் வரலாற்றில் 15 வயதில் ஒரு சிறுவன் ஜஸ்பிரித் பும்ரா, பேட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் போன்ற உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர்களை மைதானத்தின்…

2 Min Read
விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து கபில் தேவ் கருத்து தெரிவிக்கிறார்
விளையாட்டு

விராட் கோலி டெஸ்ட் ஓய்வு: கபில் தேவ் அதிருப்தி, மெக்கன்ரோவுடன் ஒப்பீடு

விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றது குறித்து கபில் தேவ் அதிருப்தி தெரிவித்துள்ளார். கோலி கோபப்படாமல் இருந்திருக்க வேண்டும் என்றும், உள்நாட்டு போட்டிகளில் விளையாடி…

3 Min Read
விளையாட்டு

ஸ்ரேயாஸ் கேப்டன்சி: பாண்டிங் பயிற்சியாளர் என நினைத்தேன் – மைக்கேல் வாகன்

இந்திய டி20 அணியின் புதிய கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் நியமிக்கப்பட்டபோது, ரிக்கி பாண்டிங் தான் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்படப் போகிறார் என்று தான்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?