MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!
தமிழ்நாடு

பிரேமலதா விஜயகாந்த்: அன்புத் தம்பி முதல்வர் விஜய்க்கு வாழ்த்து!

Admin
Last updated: May 12, 2026 2:56 pm
Admin
Share
SHARE

தமிழ்நாடு சட்டப்பேரவையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று நடைபெற்றது. சட்டப்பேரவையின் சபாநாயகராக ஜே.சி.டி. பிரபாகர் பொறுப்பேற்றார். துணை சபாநாயகராக ரவிசங்கர் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகப் பொறுப்பேற்ற சபாநாயகருக்கு சட்டமன்ற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

அதைத் தொடர்ந்து, அவையில் இருந்தவர்கள் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அப்போது, தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேரவைக்கு வணக்கம் தெரிவித்து, "இது ஒரு மாண்புமிகு பேரவை. முன்னாள் முதல்வர்கள் சிறப்பாக ஆட்சி செய்துள்ளனர். இப்போதைய முதல்வர், அன்புத் தம்பி விஜய் அவர்களுக்கு திரையுலகில் அண்ணனாக விளங்கியவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்" என்று பேசினார்.

மேலும், "இந்தச் சபையில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் தமிழக மக்கள் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று, இதே அவையில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்போதும் வலியுறுத்துவார். அவர் கூறியது போல, சட்டமன்றத்தின் அனைத்து நிகழ்வுகளையும் நேரடியாக ஒளிபரப்ப வேண்டும். அனைத்துத் தரப்பு வாதங்களையும் சரிசமமாக ஒளிபரப்ப வேண்டும்" என்றும் பிரேமலதா வலியுறுத்தினார்.

"இந்தத் தமிழ்நாடும் தமிழகமும் எப்போதும் சிறப்புமிக்கதாக இருக்க வேண்டும். எனவே, தமிழ்நாட்டில் இனி நடைபெறும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம் வழங்க வேண்டும். அதன் பிறகே மற்ற மொழிகளுக்கு முக்கியத்துவம் தர வேண்டும்" எனவும் முதலமைச்சர் விஜயிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.

அதுமட்டுமின்றி, முதலமைச்சர் விஜய் நேற்று அனைத்து எதிர்கட்சிகளையும் நேரடியாகச் சென்று சந்தித்தது குறித்தும் பிரேமலதா பாராட்டினார். "இங்கு எதிர்கட்சிகள் என்பவை எதிரிக்கட்சிகள் அல்ல, அனைவரும் தோழமைக் கட்சிகள் தான் என்பதை மிகச் சிறப்பாகச் செய்து காட்டிய அன்புத் தம்பி முதல்வர் விஜய் அவர்களுக்கு வாழ்த்துக்கள்" என்று அவர் கூறினார்.

மேலும், இந்த பேரவை தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் நீதியையும் நேர்மையையும் நிலைநாட்ட வேண்டும் என்பதையும் பிரேமலதா எடுத்துரைத்தார்.

அத்துடன், நாளை நடைபெறவிருக்கும் நம்பிக்கை வாக்கெடுப்பிலும் அன்புத் தம்பி விஜய் அவர்கள் வெற்றி பெற்று, சிறப்பாக நம் நாட்டிற்குப் பணியாற்ற வேண்டும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

இறுதியாக, தனது அன்பு கணவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் ஆசீர்வாதத்தோடு தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து, பேரவைக்கு நன்றி கூறினார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article கோவை சாலை விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு முதல்வர் விஜய் நிதியுதவி அறிவிப்பு
Next Article தமிழக சட்டசபைக் கூட்டம் தொடக்கம்: ஜே.சி.டி. பிரபாகர் சபாநாயகராகப் பொறுப்பேற்பு
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

வாடகை செலுத்த முடியாமல் ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை: கேரளாவில் சோகம்

கேரளாவின் பிறவம் அருகே, வீட்டு வாடகை செலுத்த முடியாத விரக்தியில் ஒரே குடும்பத்தைச்…

June 28, 2026

தங்க இறக்குமதி குறைந்தது – பிரதமர் மோடி

விநாயகர் சதுர்த்திக்கு களிமண் சிலைகளையே வாங்க வேண்டும்…

June 28, 2026

முன்னாள் காதலியை கடத்த முயன்ற இளைஞர் காரில் கருகி பலியான சோகம்

கர்நாடகாவில் முன்னாள் காதலியுடன் சேர்ந்து தற்கொலைக்கு முயன்ற…

June 28, 2026

இந்தியாவில் சிகரெட் புகைப்போர் எண்ணிக்கை குறைந்தது – காரணம் என்ன?

இந்தியாவில் சிகரெட் புகைப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.…

June 28, 2026

மகளிர் இலவச பயணத்தால் தனியார் பஸ் சேவை நிறுத்தம்!

மகளிர் இலவச பஸ் பயணத் திட்டத்தால் தனியார்…

June 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறினார்: பி.வில்சன் எம்.பி குற்றச்சாட்டு

முதல்-அமைச்சர் விஜய் தனது ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறிவிட்டதாக பி.வில்சன் எம்.பி. குற்றம் சாட்டியுள்ளார். ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோர் வகிக்கும் பதவி என்னவென்று தெரியவில்லை…

1 Min Read
தமிழ்நாடு

5 அரசு ஐ.டி.ஐ.-களில் ஜூன் 30 வரை நேரடி மாணவர் சேர்க்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 5 அரசு ஐ.டி.ஐ.-களில் ஜூன் 30-ந்தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

ஜிப்மர் மருத்துவமனை: இன்று வெளிப்புற நோயாளிகள் சேவை ரத்து

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று (28.05.2026) வெளிப்புற நோயாளிகள் பிரிவு செயல்படாது. அவசர சிகிச்சைப் பிரிவு வழக்கம் போல் இயங்கும்.

1 Min Read
தமிழ்நாடு

சென்னையை குளிர்வித்த கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி

தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 14-ந்தேதி வரை லேசானது முதல்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?