கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய சமூக ஆர்வலர் வேலாயுதம் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சகட்டம் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலர்களின் பாதுகாப்பிற்காக தமிழ்நாடு அரசு உடனடியாக ஒரு தனிச்சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சிவகங்கை மாவட்டம், ஜெயங்கொண்டான் நிலையைச் சேர்ந்த சமூக ஆர்வலரும், உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான தம்பி வேலாயுதம் மீது சமூக விரோதிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், மனவேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்கள் மீது அடுத்தடுத்து நடைபெறும் இதுபோன்ற தாக்குதல்களைத் தடுக்கத் தவறி, வேடிக்கை பார்க்கும் தவெக அரசின் செயலற்றத்தன்மை வன்மையான கண்டனத்துக்குரியது.
சமூக ஆர்வலர் தம்பி வேலாயுதம், தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாகத்தில் நடைபெறும் பல்வேறு ஊழல் முறைகேடுகளைத் துணிவுடன் வெளிக்கொணர்ந்து வந்தவர். இளம் வயதிலேயே மண்ணின் மீதும், மக்களின் மீதும் பேரன்பு கொண்டு பொதுத்தொண்டு புரியும் அவரது பணி பாராட்டுக்குரியது. அவரைப் போன்ற மண்ணுரிமைப் போராளிகளைப் போற்றிப் பாதுகாப்பது அரசின் தலையாய கடமையாகும். ஆனால், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகும் தமிழ்நாட்டில் சமூக ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பு இல்லாத கொடுஞ்சூழல் நிலவுவது வெட்கக்கேடானது.
கடந்த ஆட்சியில் திருநெல்வேலியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பெர்ட்டின் ராயன் மீதும், இராமநாதபுரத்தைச் சேர்ந்த தம்பி ஜான் பிரிட்டோ மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. சமூக ஆர்வலர் ஜகுபர் அலி கனிமவளக் கொள்ளையர்களால் வாகனம் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். இத்தகைய கொடுமைகள் தற்போதும் தொடர்வது பெருங்கொடுமையாகும்.
மணற்கொள்ளை, கனிமவளக் கொள்ளை, கள்ளச்சாராய விற்பனை, கஞ்சா விற்பனை, அரசு நிலம் ஆக்கிரமிப்பு, அரசு நிர்வாகத்தில் நடைபெறும் ஊழல் முறைகேடுகள் என நாளும் நடைபெறும் சமூக அவலங்கள் மற்றும் குற்றங்களுக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தும் சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால், சாமானிய மக்களின் நிலை என்னவாகும்?
தம்பி வேலாயுதம் போன்ற சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்கத் தவறினால், மக்கள் தொண்டாற்ற வேண்டும் என்ற எண்ணம் இனிவரும் இளந்தலைமுறையினருக்கு எப்படி வரும்? எனவே, கனிமவளக் கொள்ளைக்கு எதிராகப் போராடிய தம்பி வேலாயுதம் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகள் அனைவரையும் விரைந்து கைது செய்து, சட்டப்படி கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும்.
இனியும் இதுபோன்று கொலைவெறித் தாக்குதல்கள் நடைபெறாமல் தடுக்க, சமூக ஆர்வலர்கள் பாதுகாப்பிற்கான தனிச்சட்டத்தை வரும் சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே தமிழ்நாடு அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
சமூக ஆர்வலர் வேலாயுதம் மீதான தாக்குதல், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீரழிவின் உச்சம் என சீமான் குறிப்பிட்டுள்ளார். சமூக விரோதிகள் நடத்திய இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில், தவெக அரசின் செயலற்றத்தன்மை கண்டனத்துக்குரியது எனத் தெரிவித்துள்ளார்.
தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் அரசு நிர்வாக ஊழல்களை வெளிக்கொணர்ந்தவர் வேலாயுதம். அவரைப் போன்ற மண்ணுரிமைப் போராளிகளைப் பாதுகாப்பது அரசின் கடமை. ஆனால், தவெக ஆட்சிக்குப் பிறகும் சமூக ஆர்வலர்களுக்குப் பாதுகாப்பு இல்லை. கடந்த ஆட்சியில் நடந்த தாக்குதல்களையும், கொலைகளையும் குறிப்பிட்டு, தற்போதும் நிலைமை தொடர்வது பெருங்கொடுமை என சீமான் கூறியுள்ளார்.
சமூக ஆர்வலர்களுக்கே பாதுகாப்பு இல்லையென்றால் சாமானிய மக்களின் நிலை என்னவாகும்? மக்கள் தொண்டாற்ற இளந்தலைமுறையினருக்கு எப்படி ஊக்கமளிப்பது? என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து கடும் தண்டனை வழங்கவும், சமூக ஆர்வலர் பாதுகாப்புக்கான தனிச்சட்டத்தை சட்டமன்றத்தில் நிறைவேற்றவும் வலியுறுத்தியுள்ளார்.
