MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: 12 இடங்களில் அதிரடி ஆய்வு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: 12 இடங்களில் அதிரடி ஆய்வு

இந்தியா

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: 12 இடங்களில் அதிரடி ஆய்வு

Admin
Last updated: மே 27, 2026 11:56 காலை
Admin
Share
SHARE

கேரள மாநில முன்னாள் முதல்வரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயனின் வீடு உட்பட 12 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டுள்ளனர். ‘கொச்சின் மினரல்ஸ் அண்டு ரூடைல் லிமிடெட்’ (சிஎம்ஆர்எல்) என்ற கனிம நிறுவனத்துக்கு கேரள அரசு சுரங்க அனுமதி வழங்கியதில் லஞ்சம் பெற்றதாகவும், பண மோசடி நடந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரத்தில் பினராயி விஜயனின் மகள் டி.வீணாவின் ‘எக்ஸாலாஜிக்’ என்ற ஐடி நிறுவனத்திற்கும் நேரடி தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருந்தன.

இந்த நிலையில், சிஎம்ஆர்எல் விவகாரத்தில் அமலாக்கத் துறை விசாரணையை ரத்து செய்ய முடியாது என கேரள உயர் நீதிமன்றம் நேற்று தெரிவித்திருந்தது. இந்த வழக்கை சிஎம்ஆர்எல் நிறுவனமே தொடுத்திருந்தது. இந்நிலையில், இன்று (மே 27) அமலாக்கத் துறை அதிகாரிகள், முன்னாள் முதல்வர் பினராயி விஜயனின் வீடு, அவரது மகள் வீணாவின் கணவரும், முன்னாள் பொதுப்பணித் துறை அமைச்சருமான பி.ஏ.முகமது ரியாஸ் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த சோதனைகள் திருவனந்தபுரம், கோழிக்கோடு உள்ளிட்ட நகரங்களில் நடைபெற்று வருகின்றன.

சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து எக்ஸாலாஜிக் நிறுவனம் ரூ.1.72 கோடியை முறைகேடாக பெற்றதாக வருமான வரி தீர்வு வாரியம் தெரிவித்திருந்தது. இதில் வீணா மட்டுமல்லாது அரசு அதிகாரிகள் மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. கடந்த 2023-ல் இந்த விவகாரம் முதன்முதலாக வெளிச்சத்துக்கு வந்தது. அப்போது சிஎம்ஆர்எல் நிறுவனத்திடம் இருந்து 2017 முதல் 2020 வரை நிதி முறைகேடு நடந்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து அமலாக்கத் துறை, வருமான வரித்துறையினர் வீணா உட்பட பலரிடம் ஏற்கெனவே விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இந்த திடீர் சோதனைகள் கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:ED RaidKerala Politicsஅமலாக்கத்துறைஅரசியல்கேரளாபினராயி விஜயன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பக்ரீத் பண்டிகை: இஸ்லாமிய மக்களுக்கு ஸ்டாலின் வாழ்த்து
Next Article முதல்வர் பதவி: சித்தராமையா மறுப்பு – டெல்லி தலைவர்கள் தீவிரம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூரு குழந்தை கொலை சம்பவம் தொடர்பான விசாரணை

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில் வீசிக் கொன்ற தந்தை, கட்டிலில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும்…

ஜூலை 7, 2026

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

You Might Also Like

இந்தியா

உங்களுக்காக போராடுவேன்: ராகுல் காந்தி உறுதி

இந்திய அரசியலமைப்பைப் பாதுகாக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் உங்களுடன் நான் துணை நின்றிருக்கிறேன். இந்த நிலைப்பாட்டில் இன்றும் நான் உறுதியாக நிற்கிறேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி…

1 Min Read
இந்தியா

குதிரை பேரம் குற்றச்சாட்டு: த.வெ.க. அரசு மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை

தமிழக த.வெ.க. அரசு மீதான குதிரை பேரம் குற்றச்சாட்டு, ரூ.1,000 கோடி லஞ்சம், நம்பிக்கை வாக்கெடுப்பு முறைகேடு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது. ஜனாதிபதி ஆட்சி…

1 Min Read

பசுவை தேசிய விலங்காக அறிவிக்க கோரும் முஸ்லிம் அமைப்புகள்

பக்ரீத் பண்டிகை நெருங்கும் நிலையில், பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் பசுவை தேசிய விலங்காக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன. இது தொடர்பாக முஸ்லிம் அமைப்புகளிடையே ஒருமித்த…

2 Min Read
தமிழ்நாடு

கேரள புதிய முதல்வர் சதீசனுக்கு எடப்பாடி பழனிசாமி வாழ்த்து!

கேரளாவின் புதிய முதல்வராக பதவியேற்ற வி.டி.சதீசனுக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வில் முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?