MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - இந்தியா - கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்

இந்தியா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய சித்தராமையா முடிவு – காங்கிரஸ் மூத்த தலைவர் தகவல்

Admin
Last updated: மே 27, 2026 8:35 மணி
Admin
Share
SHARE

கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துவிட்டதாக அம்மாநில காங்கிரஸ் மூத்த தலைவர் ஆர்.வி.தேஷ்பாண்டே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் கட்சி ஆலோசனை நடத்திய நிலையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று (மே 26) காங்கிரஸ் தலைமையகமான இந்திரா பவனில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே. சிவகுமார், கே.சி. வேணுகோபால், ரந்தீப் சுர்ஜேவாலா, சச்சின் பைலட் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சித்தராமையாவிடம் கோரப்பட்டதாகவும், ராஜினாமாவுக்குப் பிறகு அவர் மாநிலங்களவை உறுப்பினராகவும், அவரது மகன் யதீந்திரா அமைச்சரவையிலும் சேர்க்கப்படுவார் என்ற சமரசத் திட்டம் முன்வைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து முடிவெடுக்க இரண்டு நாட்கள் அவகாசம் கேட்ட சித்தராமையாவிடம், அடுத்த முதல்வரைத் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அவருக்கு இல்லை என கார்கே சுட்டிக்காட்டியதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. இந்நிலையில், பெங்களூரு திரும்பிய சித்தராமையாவை அவரது ஆதரவாளர்கள் சந்தித்து, பதவியில் நீடிக்க அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ஆனால், கட்சித் தலைமை முடிவெடுத்துவிட்டதால் தன்னால் தொடர இயலாது என சித்தராமையா கூறியதாக ஆர்.வி.தேஷ்பாண்டே செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சித்தராமையாவை அமைச்சர்கள் ஹெச்.கே. பாட்டீல், ஹெச்.சி. மகாதேவப்பா, ஜமீர் அகமது கான் உள்ளிட்டோரும், சட்டமன்ற, மேலவை உறுப்பினர்களும் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நாளை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டை சந்திக்க சித்தராமையா நேரம் கோரியுள்ளதாகவும், துணை முதல்வர் டி.கே. சிவகுமாருக்கு காலை உணவு அழைப்பு விடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், இது தொடர்பாக இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என ரந்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:CongressKarnataka Politicsகர்நாடகாகாங்கிரஸ்சித்தராமையா
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article 11 மாவட்டங்களில் இன்று இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
Next Article மின்னல் தாக்குதலில் காயமடைந்தவரை சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமனம்

மத்திய கல்வி அமைச்சராக பிரகலாத் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித்துறை…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் பதவி விலகல்: பாஜக புகழாரம்

பொது வாழ்வில் நேர்மை மற்றும் தன்னலமற்ற சேவையின்…

ஜூலை 25, 2026

தர்மேந்திர பிரதான் ராஜினாமா: டெல்லியில் இளைஞர்கள் கொண்டாட்டம்

மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்த…

ஜூலை 25, 2026

டெல்லியில் கால்வாய் கார் விபத்து: ராணுவ அதிகாரி மகன் உயிரிழப்பு

டெல்லியில் வழுக்கலான சாலையில் கட்டுப்பாட்டை இழந்த கார்…

ஜூலை 25, 2026

டெல்லி போராட்டம் வாபஸ்: மத்திய அரசு கோரிக்கைகளை ஏற்றது சிஜேபி!

டெல்லியில் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி…

ஜூலை 25, 2026

You Might Also Like

ஏர்டெல் 5ஜி சேவை தொடர்பான அறிவிப்பு
இந்தியா

ஏர்டெல் 5ஜி: ஹாட்ஸ்பாட் ஷேரிங் வசதிக்கு திடீர் கட்டுப்பாடு!

ஏர்டெல் நிறுவனம், 5ஜி டேட்டாவை மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் பகிர முடியாது என்றும், 5ஜி பிளஸ் கிடைக்கும் இடங்களில் மட்டுமே வரம்பற்ற 5ஜி சேவையை பயன்படுத்த முடியும்…

2 Min Read
இந்தியா

இந்திய முப்படையை விமர்சனம் செய்த பாகிஸ்தான் ராணுவ அதிகாரி – வறுத்தெடுத்த நெட்டிசன்கள்

ஆபரேஷன் சிந்தூரில் இந்திய முப்படைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து, இந்திய ராணுவ உயர் அதிகாரிகள் செய்தியாளர்களிடம் ஆங்கிலத்தில் பேசினார்கள். இதுகுறித்து விமர்சனம் செய்த பாகிஸ்தான் லெப்டினட் ஜெனெரல்

1 Min Read
இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல்.. நாளை இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு!Published by:Last Updated:Apr 28, 2026 4:02 PM ISTமீதமுள்ள 142 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.கோப்பு படம்மேற்கு…

2 Min Read
இந்தியா

மாதவிடாய் மாணவியை வெளியே நிறுத்திய ஆசிரியர்: பாஜக மாநில தலைவர் கண்டனம்

சென்னை கோபாலபுரத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11 வயது மாணவியை மாதவிடாய் காரணமாக வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்த ஆசிரியர் மீது புகார். பாஜக மாநில தலைவர்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?