MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - இந்தியா - சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?

இந்தியா

சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?

Admin
Last updated: மே 8, 2026 11:24 காலை
Admin
Share
SHARE

சொகுசு கப்பலை தாக்கிய கொடூர வைரஸ்: சிக்கித் தவிக்கும் 2 இந்தியர்கள்; 149 பேரின் நிலை என்ன ஆச்சு?

எம்.வி ஹோண்டியஸ் கப்பலில் பயணித்து கொண்டிருக்கும் 149 பயணிகளில் சிலருக்கு மிக ஆபத்தான ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நெதர்லாந்தைச் சேர்ந்த உல்லாச கப்பலான  எம்.வி ஹோண்டியஸ் என்ற கப்பல், கடந்த ஏப்ரல் 1-ம் தேதி அர்ஜென்டினாவிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கியது. இந்தக் கப்பலில் 23 நாடுகளைச் சேர்ந்த 149 பயணிகள் மற்றும் ஊழியர்கள் உள்ளனர். இந்தக் கப்பல் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில், அந்தக் கப்பலில் இருக்கும் பயணிகளில் சிலருக்கு உலகின் மிக ஆபத்தான ‘ஹண்டாவைரஸ்’ தொற்று பரவியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் பயணத்தின் இடையே, இதுவரை 3 பயணிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் உயிரிழந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது. இந்தக் கப்பலில் பணிபுரியும் 61 ஊழியர்களில், இரண்டு பேர் இந்தியர்கள் என்பது அதிகாரப்பூர்வமாகத் தெரியவந்துள்ளது.

அவர்கள் பாதிக்கப்பட்டுள்ளார்களா? அவர்களின் நிலை என்ன? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. மேலும், நான்கு பயணிகள் சிகிச்சைக்காகக் கப்பலிலிருந்து மருத்துவ ரீதியாக வெளியேற்றப்பட்டுள்ளனர். அர்ஜென்டினாவில் ஒரு பறவையின் கழிவுகளிலிருந்து கிளம்பிய தூசியை சுவாசித்ததே இந்தத் தொற்றுக்குக் காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டால் முதலில் காய்ச்சல், தசைவலி ஆகியவை ஏற்படும். பின்னர் 72 மணி நேரத்தில் நுரையீரலை பாதித்து உயிரை பறிக்கும் என்று கூறப்படுகிறது.  இந்த நோய்க்கு தடுப்பூசியோ, எந்தவித மருந்தும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்தக் கப்பல் ஸ்பெயினின் டெனெரிஃப் துறைமுகத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

அங்கு வரும் மே 11-ம் தேதி பயணிகள் அனைவரும் தரையிறக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளனர். உலக சுகாதார அமைப்பு நிலைமையைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறது. இந்தியாவில் ஏற்கனவே 2008 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் சிலருக்கு ஹண்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கப்பலில் உள்ள இந்தியர்களின் நிலை குறித்து இந்தியத் தூதரகம் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவுக்கு அடுத்த சிக்கல்… நதி திட்டத்துக்கு சீனாவின் உதவியை நாடிய வங்கதேசம்
Next Article ஆளுநர் அழைப்பை ஏற்று மக்கள் மாளிகைக்கு சென்றார் விஜய்..!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

இந்தியா

ரயில்வேயில் காத்திருப்பு பட்டியல் பிரச்சினை: கடந்தாண்டில் 3 கோடிக்கும் மேற்பட்டோரின் டிக்கெட் ரத்து

புதுடெல்லி: ரயி​ல் பயணத்துக்காகக் காத்​திருப்பு பட்​டியலில் இருந்து பயணம் செய்ய முடி​யாதவர்​களின் எண்​ணிக்கை 3.39 கோடியை எட்​டி​யுள்​ளது. ரயி​லில் பயணம் செய்ய முடி​யாமல், கடந்​தாண்​டில் டிக்​கெட் ரத்த

1 Min Read
இந்தியா

கொல்கத்தாவில் சர்வதேச யோகா தினம்: பிரதமர் மோடி தலைமையில் பிரம்மாண்ட கொண்டாட்டம்!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கொல்கத்தாவில் நடைபெறும் பிரம்மாண்ட கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார். நாடு முழுவதும் 135க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்சிக்கு…

1 Min Read
இந்தியா

15 பேருக்கு பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது: முதல்வர் சங்கர் சண்முகம் கௌரவிப்பு

சர்வதேச செவிலியர் தினத்தை முன்னிட்டு, சிறந்த செவிலியர்களுக்கான தேசிய பிளாரன்ஸ் நைட்டிங்கேல் விருது வழங்கும் விழா நேற்று டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது. இந்த…

1 Min Read
இந்தியா

தங்கம் வாங்கித்தருவதாக ரூ.32 லட்சம் மோசடி: ‘கோல்டுமேன்’ சுரேஷ்குமார் கைது

தங்கம் வாங்கி தருவதாக கூறி பொதுமக்களிடம் சுமார் 32 லட்சம் ரூபாய் மோசடி செய்த 'கோல்டுமேன்' சுரேஷ்குமார் கைது செய்யப்பட்டார். பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் இந்த…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?