தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,400 உயர்ந்துள்ளது. இது நகை வாங்க திட்டமிட்டிருந்த பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் இன்று காலை முதலே தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. காலையில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்து புதிய உச்சத்தை தொட்ட நிலையில், மாலையில் மேலும் ரூ.1,200 உயர்ந்துள்ளது. இதனால், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,08,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலையும் ரூ.150 உயர்ந்து ரூ.13,550-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் இன்று கடுமையாக உயர்ந்துள்ளது. காலையில் கிலோவுக்கு ரூ.5,000 உயர்ந்த நிலையில், இரவில் மேலும் ரூ.5,000 உயர்ந்துள்ளது. இதனால், வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.10,000 உயர்ந்து ரூ.2,55,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தொடர்ந்து தங்கத்தின் விலை உயர்ந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, திருமண சீசன் நெருங்கி வருவதால், இந்த விலை உயர்வு நகை வாங்குவோரை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


