MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: விவசாயிகள் கடன் தள்ளுபடி: அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விவசாயிகள் கடன் தள்ளுபடி: அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

தமிழ்நாடு

விவசாயிகள் கடன் தள்ளுபடி: அரசுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை

Admin
Last updated: மே 26, 2026 3:38 மணி
Admin
Share
SHARE

வேளாண் கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக சங்கத்தின் பொதுச்செயலாளர் பி.எஸ்.மாசிலாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக முதல்வர் தனது தேர்தல் வாக்குறுதியில், 5 ஏக்கர் வரை சிறுகுறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கி கடன்கள் அனைத்தும் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவித்திருந்தார். ஆனால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள கடன் தள்ளுபடி, விவசாயிகளை வஞ்சிப்பதாக அமைந்துள்ளது. இது வாக்குறுதி அல்ல, உத்தரவாதம் என்று அப்போது முதல்வர் கூறினார்'

மேலும் அவர் கூறுகையில், 'கடன் தள்ளுபடிக்கு கடன் நிலுவை தொகையில் சீலிங் வைப்பது இதுவே முதல் முறையாகும். ஒவ்வொரு சீலிங்கிலும் குறு விவசாயிகளுக்கு அறிவித்துள்ள கடன் தள்ளுபடியில் 50 சதவீதம் மட்டுமே சிறு விவசாயிகளுக்கு தள்ளுபடி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு ஏக்கர் கரும்பு சாகுபடிக்கு 60,000 ரூபாயும், ஒரு ஏக்கர் நெல் சாகுபடிக்கு 36 ஆயிரம் ரூபாயும் வங்கிகள் கடனாக கொடுப்பதாக பதிவு செய்யப்படுகிறது. ஆனால் இவர்களுக்கு இப்போது அறிவித்துள்ள தள்ளுபடிகள் வெறும் 5000 ரூபாய் மட்டுமே. இதுவரை நிலத்தின் அளவை சீலிங்காகக் கொண்டு பயிர் கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் புதிய முதல்வர், கடன் தொகையை அளவாகக் கொண்டு விவசாயிகளை ஏமாற்றியுள்ளார்'

கடந்த காலங்களில் ஒன்றிய அரசு 71 ஆயிரம் கோடி ரூபாயும், தமிழக அரசு இருமுறை 12000 கோடி மற்றும் 7000 கோடி ரூபாயும் கடன் தள்ளுபடி செய்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். அப்போது இந்த சீலிங் முறை இல்லை என்றும், இப்போதைய தள்ளுபடி கூடுதல் தொகை 2000 கோடி ரூபாய் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டார். 'தமிழ்நாடு அரசின் நிதி இருப்பு தெரிந்தே முதல்வர் வாக்குறுதி அளித்திருக்க வேண்டும். மேலும், கூட்டுறவு வங்கிகள் விவசாயிகள் கொடுக்கும் சிட்டா அடங்கல் பரப்பளவு முழுவதற்கும் பயிர்க்கடன் கொடுப்பதில்லை. சான்றுகளில் உள்ள பரப்பளவில் 30 சதவீதம் அளவிற்குரிய கடன் தான் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில், கொடுக்கப்படும் சிட்டா அடங்கலை கணக்கில் கொள்ளாமல், விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன் தொகையை அளவாகக் கொண்டு தள்ளுபடி அறிவிப்பு வெளியிட வேண்டும்'

குறு விவசாயிகள் பெரும்பாலும் கடன் பெறுவதில்லை என்றும், அவர்களுக்கு வங்கிகளும் தாராளமாக கடன் கொடுப்பதில்லை என்றும் அவர் தெரிவித்தார். எனவே, முதல்வர் தேர்தல் கால வாக்குறுதிப்படியே சிறுகுறு விவசாயிகளுக்கு முழு கடன் தள்ளுபடியும், இதர விவசாயிகளுக்கு 50 சதவீதம் தள்ளுபடியும் மறு ஆய்வு செய்து அறிவிக்க வேண்டும். மேலும், கடன் நிலுவையை ஒத்திவைக்க வேண்டும் என்றும், எந்த நிபந்தனையும் இல்லாமல் புதிய பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் கேட்டுக்கொள்வதாக பி.எஸ்.மாசிலாமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Tamil Nadu Farmersதமிழ்நாடு விவசாயிகள் சங்கம்தேர்தல் வாக்குறுதிபயிர்க்கடன்விவசாயிகள் கடன் தள்ளுபடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article பிரிட்டனில் இந்திய வம்சாவளி தாய்-மகன் சாதனை: அடுத்தடுத்து மேயர்களாக தேர்வு
Next Article அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா: சபாநாயகர் விளக்கம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மனைவி ஒருவர் கணவனை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் தொடர்பான செய்தி

குடித்துவிட்டு அடித்த கணவனை பெட்ரோல் ஊற்றி கொன்ற மனைவி!

உத்தரப் பிரதேசத்தின் ஃபதேபூரில், குடித்துவிட்டு தினமும் கொடுமைப்படுத்திய கணவனை மனைவி பெட்ரோல் ஊற்றி…

ஜூலை 6, 2026

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக 2 இந்துக்கள் நியமனம்

மத்திய பிரதேச வக்பு வாரியத்தில் முதல்முறையாக இரண்டு…

ஜூலை 6, 2026

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி ரூ.8 லட்சம் வரை நன்கொடை திருட்டு!

அயோத்தி ராமர் கோவிலில் தினசரி சுமார் 8…

ஜூலை 6, 2026

உ.பி.யில் உரிமமற்ற தேயிலை தொழிற்சாலைக்கு சீல்: 15 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில், உரிமம் இன்றி…

ஜூலை 6, 2026

ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக திமுக வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

திமுகவின் கரூர் மாவட்ட செயலாளரான ஆதவ் அர்ஜுனாவுக்கு…

ஜூலை 6, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கோவை சிறுமி கொலை: குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை – அமைச்சர் உறுதி

கோவை அருகே சிறுமி கொலை சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தரப்படும் என அமைச்சர் சம்பத்குமார் உறுதி அளித்துள்ளார். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

1 Min Read
தமிழ்நாடு

டெல்லி பிரதிநிதி நியமனம்: தவெக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம்

தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக கர்நாடகாவைச் சேர்ந்த வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இது…

2 Min Read
தமிழ்நாடு

தமிழக அமைச்சரவை: முக்கிய துறைகள் யாருக்கு? காத்திருப்பு நீடிக்குமா?

தமிழக சட்டசபையில் 35 அமைச்சர்கள் வரை பதவி ஏற்கலாம் என்ற நிலையில், தற்போது 10 அமைச்சர்களுக்கு மட்டுமே துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. முக்கிய துறைகள் யாருக்கு ஒதுக்கப்படும் என்ற…

1 Min Read
தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

பல்லடத்தில், குடும்ப தகராறில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு விபத்து நாடகமாடிய சம்பவம் அம்பலமாகியுள்ளது. இருவர் கைது.

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?