MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

தமிழ்நாடு

ஐஸ் வியாபாரி கொலை: மைத்துனர்கள் கைது – விபத்து நாடகமும் அம்பலம்!

Admin
Last updated: மே 17, 2026 3:29 மணி
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில், குடும்ப தகராறில் ஏற்பட்ட ஆத்திரத்தில் மாமியாரை தாக்கிய ஐஸ் வியாபாரியை, அவரது மைத்துனர்கள் அடித்து கொலை செய்துவிட்டு, விபத்து நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய மைத்துனர்கள் இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.

பல்லடம் அறிவொளி நகரை சேர்ந்த முருகன் (45), ஐஸ் வியாபாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கும் இவரது மனைவி பொன்மொழிக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த தகராறின் போது, முருகனின் மனைவி பொன்மொழியின் தாய் காசி அம்மாள் (70) தலையிட்டு, மகளை சமாதானம் செய்து, முருகனை கண்டித்துள்ளார். மேலும், முருகனின் குடிப்பழக்கத்தையும் கண்டித்துள்ளார். இதனால் மாமியார்-மருமகன் இடையே வாக்குவாதம் முற்றியது. ஆத்திரமடைந்த முருகன், மாமியார் காசி அம்மாளை தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்கியுள்ளார். இதில் காசி அம்மாளின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயமடைந்த காசி அம்மாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.

நடந்த சம்பவத்தை தனது மகன்களான பழனிசாமி (51) மற்றும் பாண்டியன் (41) ஆகியோரிடம் காசி அம்மாள் தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இருவரும், முருகன் வீட்டுக்கு சென்று, 'ஏன் எங்கள் தாயை தாக்கினாய்?' என்று கேட்டுள்ளனர். அப்போது, இரு தரப்பிற்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த முருகன், மைத்துனர்கள் இருவரையும் தாக்க முயன்றுள்ளார். அப்போது, பாண்டியன் அங்கிருந்த கட்டையை எடுத்து முருகனின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் முருகன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

பயந்துபோன பழனிசாமி மற்றும் பாண்டியன், முருகன் விபத்தில் சிக்கியதாக கூறி 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்துள்ளனர். பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட முருகன், வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்த பல்லடம் போலீசார், முருகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். விசாரணையில், மைத்துனர்களே முருகனை கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், தாங்கள் தான் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர், இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:crimeMurderTamil Nadu Newsகொலைதிருப்பூர் செய்திகள்பல்லடம்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article புதுச்சேரி: காங்கிரஸ் – தவெக கூட்டணி? நாராயணசாமி பகீர்!
Next Article பிரபுதேவா, வடிவேலுவின் ‘பேங் பேங்’: ஜோம்பி ஜானரில் அதிரடி!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் என்கவுண்டரில் ஈடுபட்ட காட்சி

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

நவம்பர் 18, 2026

சோனியா நூல் விழாவில் பாஜக வீரர் அம்ரீந்தர் சிங்: காங்கிரஸில் மீண்டும் சேர வாய்ப்பா?

சோனியா காந்தி எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில்…

நவம்பர் 17, 2026

பிரேக் செயலிழந்தும் 463 கி.மீ. ஓடிய வந்தே பாரத் ரயில்: விசாரணை தீவிரம்

பிரேக் செயலிழந்த நிலையில் சுமார் 463 கி.மீ.…

நவம்பர் 16, 2026

டேட்டிங் செயலி காதல்: கனடா பெண் இந்தியா வருகை

டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான இளைஞரை திருமணம்…

நவம்பர் 16, 2026

பசியின் கோரம்: நாயிறைச்சியை உண்ட இளைஞர் – ஒடிசாவில் அதிர்ச்சி சம்பவம்

ஒடிசாவின் சம்பல்பூர் மாவட்டத்தில், சாலையில் இறந்த நாயின்…

நவம்பர் 15, 2026

You Might Also Like

கேரளாவின் மூத்த சிபிஎம் தலைவர் பேபி ஜான்
தமிழ்நாடு

மூத்த சிபிஎம் தலைவர் பேபி ஜான் காலமானார்

கேரளாவின் மூத்த சிபிஎம் தலைவரும், முன்னாள் மாநிலச் செயலக உறுப்பினருமான பேபி ஜான், தனது 75-வது வயதில் காலமானார். இவர் சிறந்த பேச்சாளராகவும் அறியப்பட்டவர்.

1 Min Read
மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய வனச்சரக அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு
தமிழ்நாடு

மேகமலை புலிகள் காப்பகம்: கிராம மக்கள் போராட்டம் – போலீஸ் பாதுகாப்பு தீவிரம்

மேகமலை புலிகள் காப்பகத்தை ஒட்டிய மலைகிராம மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளதால், வனச்சரக அலுவலகங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கிராம மக்களின் போராட்டங்கள் வனத்துறை நிர்வாகத்திற்கு அழுத்தத்தை…

2 Min Read
மதுரை சித்திரை வீதிகளில் சைக்கிளில் ரோந்து செல்லும் காவல்துறை அதிகாரிகள்
தமிழ்நாடு

50 ஆண்டுகளுக்குப் பின் மதுரை சித்திரை வீதிகளில் சைக்கிள் ரோந்து பணி துவக்கம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலைச் சுற்றியுள்ள சித்திரை வீதிகளில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சைக்கிள் ரோந்து பணியை காவல்துறை தொடங்கியுள்ளது. வாகனத் தடை உள்ள பகுதிகளில்…

2 Min Read
சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பு வழக்கறிஞர்
தமிழ்நாடு

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம்: ரூ.100 கோடி மோசடி – ஐகோர்ட்

தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக கூறி ரூ.100 கோடி மோசடி நடைபெற்ற சம்பவம் தொடர்பாக, 177 புகார்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இது குறித்து விசாரணை நடைபெற்று…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?