MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!
தமிழ்நாடு

அதிமுகவில் பிளவு முடிவுக்கு வருகிறதா? ஒன்றிணையும் முயற்சிகள் தீவிரம்!

Admin
Last updated: மே 27, 2026 2:25 மணி
Admin
Share
SHARE

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வந்த அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் தென்படுகின்றன. சட்டமன்றத் தேர்தலில் 47 இடங்களை வென்ற பிறகு, பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு அணியாகவும், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தலைமையில் மற்றொரு அணியாகவும் அதிமுக பிரிந்தது. இந்த பிளவு, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்கும் வாக்கெடுப்பின்போது வெளிப்படையாகத் தெரிந்தது. எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் தரப்புக்கு 25 எம்.எல்.ஏ.க்களும், எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு 22 எம்.எல்.ஏ.க்களும் ஆதரவு தெரிவித்தனர்.

சபாநாயகரிடம் இரு தரப்பினரும் மாறி மாறி மனு அளித்து வந்தனர். த.வெ.க.வுக்கு ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏ.க்களின் கட்சிப் பதவிகளை எடப்பாடி பழனிசாமி பறித்ததுடன், கொறடா உத்தரவை மீறியதாக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சபாநாயகரிடம் மனு அளித்தார். அதேபோல், எஸ்.பி. வேலுமணி தரப்பும் எடப்பாடி பழனிசாமி மீது நடவடிக்கை கோரி மனு அளித்தது. இந்த மனுக்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் அணியில் இருந்த சில எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர். மேலும், சிலர் தங்கள் எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க.வில் இணைந்தனர். இதனால் எஸ்.பி. வேலுமணி அணியில் இருந்த எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை குறைந்து, எடப்பாடி பழனிசாமி அணியின் பலம் அதிகரித்தது. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத் தொடர்ந்து, எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் வீட்டில் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பிறகு, திடீர் திருப்பமாக எஸ்.பி. வேலுமணி அணியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் எடப்பாடி பழனிசாமியை அவரது பசுமை வழிச்சாலை இல்லத்தில் சந்தித்துப் பேசினர். கட்சியின் நலன் கருதி இரு தரப்பினரையும் ஒன்றிணைக்கும் நோக்கில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒன்றிணைக்கும் முயற்சியாக, எஸ்.பி. வேலுமணி தலைமையில் 14 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க புறப்பட்டனர். பறித்த கட்சிப் பதவிகளை மீண்டும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த சந்திப்பு நடந்ததாகத் தெரிகிறது. இரு அணிகளும் இணைந்த பிறகு, கட்சித் தாவல் தடை சட்டத்தின் கீழ் அளிக்கப்பட்ட கோரிக்கை திரும்பப் பெறப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஉட்கட்சிப் பூசல்தமிழக அரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சட்டவிரோத குடியேற்றம்: மக்கள் தொகை மாற்றங்களை ஆராய மத்திய அரசு குழு அமைப்பு
Next Article இந்தியாவிலேயே ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை உச்சம்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

நடிகர் மோகன்லால் யானை தந்தங்கள் மற்றும் கலைப்பொருட்களை வனத்துறையிடம் ஒப்படைக்க விண்ணப்பம்

யானை தந்தங்கள், கலைப்பொருட்கள்: வனத்துறையிடம் ஒப்படைக்க மோகன்லாலுக்கு விண்ணப்பம்

கேரளாவில், நடிகர் மோகன்லாலிடம் யானை தந்தங்கள் மற்றும் பழங்கால கலைப்பொருட்களை வனத்துறையினரிடம் ஒப்படைக்குமாறு…

ஜூலை 5, 2026

கர்நாடகாவில் ஆண்களுக்கான தேசிய மனித உரிமைக்குழு: புதிய முயற்சி

கர்நாடகாவில் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், அவர்கள் எதிர்கொள்ளும்…

ஜூலை 5, 2026

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி: இந்தியா ரூ. 38,000 கோடியை தாண்டியது

இந்தியாவின் பாதுகாப்பு தளவாட ஏற்றுமதி 2013-14ல் ரூ.…

ஜூலை 4, 2026

ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு ஆடு: அசத்தல் நீச்சல் வீடியோ வைரல்

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ரவி ஆற்று வெள்ளத்தில் காட்டு…

ஜூலை 4, 2026

இந்தியாவின் கடல்சார் வளர்ச்சி: மத்திய அமைச்சர் சர்பானந்தா பெருமிதம்

இந்தியாவின் முதல் உள்நாட்டு ஏற்றுமதி-இறக்குமதி கப்பல் கொள்கலனை…

ஜூலை 4, 2026

You Might Also Like

தமிழ்நாடு

ஸ்டாலினை வீழ்த்திய எனக்கு அங்கீகாரம் இல்லையா?? வி.எஸ் பாபு அதிருப்தி

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் 8000 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினை தோற்கடித்தார் வி.எஸ் பாபு. முன்னாள் முதல்வரை தோற்கடித்த வி.எஸ் பாபுவிற்கு…

1 Min Read
தமிழ்நாடு

செந்தில்பாலாஜி கைது முயற்சி: திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

முதலமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு முன்பாக, குதிரை பேர வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்ய தவெக அரசு முயற்சிப்பதாக திமுக முன்னாள் அமைச்சர் ரகுபதி குற்றம்…

1 Min Read
தமிழ்நாடு

ஸ்ரீவைகுண்டம் பாலியல் வன்கொடுமை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

ஸ்ரீவைகுண்டத்தில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பெ.சண்முகம்…

1 Min Read
தமிழ்நாடு

பாலியல் குற்றவாளிகளுக்கு ‘கலர் கோடு’: தவெக அரசு புதிய திட்டம்

பாலியல் குற்றவாளிகளைக் கண்காணிக்க 'SPECTRUM' என்ற புதிய 'கலர் கோடு' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. 15,000 குற்றவாளிகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, வண்ணக் குறியீடுகள் மூலம் கண்காணிக்கப்படும்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?