MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > அரசியல் > அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!
அரசியல்

அதிமுகவில் சுயநலப் பூகம்பம்: கட்சி பிளவுபடுமா? பெரும் குழப்பம்!

Admin
Last updated: May 17, 2026 7:00 am
Admin
Share
SHARE

பொன்விழா கண்ட அதிமுக, தற்போது ஒரு சிலரின் சுயநலத்தால் மீண்டும் ஒரு இக்கட்டான சூழ்நிலையை சந்தித்துள்ளது. கட்சியின் ஒட்டுமொத்த நலனை விட தனிப்பட்ட லாபங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதே இதற்குக் காரணம்.

எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட அதிமுக, திமுகவில் அவருக்கு ஏற்பட்ட நெருக்கடிகளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களால் மதுரையில் தாமரைக் கொடியை ஏற்றி அடிக்கல் நாட்டப்பட்டது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க, 1972 அக்டோபரில் அதிமுகவை எம்.ஜி.ஆர் தொடங்கினார். அப்போது எம்.ஜி.ஆர் ரசிகர்களை 'விசிலடிச்சான் குஞ்சுகள்' என திமுக விமர்சித்தது. திமுக மேடைகளுக்குப் போட்டியாக அதிமுக மேடைகள் போட்டு பதிலடி கொடுத்தனர். 'ரத்தத்தின் ரத்தமே' என எம்.ஜி.ஆர் அழைத்தபோது, தங்களையே கட்சிக்கு ரத்தம் கொடுத்ததாக உணர்ந்தனர் ரசிகர்கள். இதனால் பல நெருக்கடிகளைச் சந்தித்தனர். ஜெயிலில் இருந்த ரவுடிகளை பரோலில் எடுத்து பழிதீர்த்த சம்பவங்களும் நடந்தன. இதனால் திமுகவும் அதிமுகவும் நிரந்தர எதிரிகளாயின.

ஜெயலலிதா அதிமுக தலைமையை ஏற்ற பிறகு, திமுகவினருடன் தொடர்பு வைத்திருந்தவர்களைக் கட்சியிலிருந்து நீக்கினார். மதுரை திருமண நிகழ்ச்சி ஒன்றில் மு.க. அழகிரியும் செல்லூர் ராஜூவும் கலந்துகொண்ட புகைப்படத்தை ஆதாரமாகக் கொண்டு, ராஜூவை அமைச்சர் பதவியிலிருந்தே ஜெயலலிதா நீக்கியது இதற்கு ஒரு உதாரணம். இந்தச் சூழலில், இந்தத் தேர்தலில் திமுக தயவில் ஆட்சியைப் பிடிக்க முயன்றதாகக் கூறி, சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி தலைமையிலான முன்னாள் அமைச்சர்கள் பழனிசாமிக்கு எதிராகப் பிரிவினையைத் தொடங்கிவிட்டனர்.

கட்சிக்குள் இருந்த பிளவைச் சரிசெய்து, அதிமுகவை வலுப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை பழனிசாமி புறக்கணித்ததாகக் கூறப்படுகிறது. தேர்தல் முடிவுகள் பாதகமாக அமைந்தால், இது அவருக்கு எதிராகத் திரும்பும் என்றும், அதிமுக மேலும் பிளவுபடும் என்றும் அப்போதே பேச்சுக்கள் எழுந்தன. 2021 தேர்தலில் தோற்றாலும், அதிமுகவை வலுவான எதிர்க்கட்சியாக நிலைநிறுத்திய பழனிசாமி, கடந்த 5 ஆண்டுகளாகக் கட்சியை சீராக வழிநடத்தினார். பாஜகவின் உள்வேலைகளால் கட்சி உடைந்துவிடக் கூடாது என்பதற்காக, டெல்லிக்குச் சென்றார், வலிமையான கூட்டணியை அமைத்தார், தமிழகம் முழுவதும் தனி ஒருவராகப் பிரச்சாரம் செய்தார். இதன் காரணமாகவே, விஜய்யின் அலைக்கும் மத்தியில் அதிமுகவுக்கு கவுரமான தோல்வி கிடைத்தது.

ஆட்சியைப் பிடித்துவிட்டால் எல்லாவற்றையும் சமாளித்துவிடலாம் என்று பழனிசாமி கணக்கு போட்டார். முதலில் அமைதியாக இருந்த முன்னாள் அமைச்சர்கள், பழனிசாமியின் முயற்சி பலனளிக்காது என்று தெரிந்ததும், தமாகா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். பழனிசாமி திமுகவுடன் சேர நினைத்தபோது, நாம் தமாகாவுக்கு ஆதரவளித்து அதிகாரத்தில் பங்கேற்பதில் என்ன தவறு என்று சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றோரும் சுயநலமாக யோசித்தனர். 'அம்மாவால் தீய சக்தி என்று சொல்லப்பட்ட திமுகவுடன் பழனிசாமி இணைய முயன்றார். அதை ஏற்க முடியாமல் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம்' என்று அவர்கள் கூறுகின்றனர். புதுச்சேரியில் நான்கு நாட்கள் தங்கியிருந்து 'சிந்தித்து' இந்தப் 'தெளிவைப்' பெற்றதாகக் கூறப்படுகிறது.

தொடர் தோல்விகளால் துவண்டு கிடக்கும் தொண்டர்களுக்கு ஆறுதல் சொல்ல யாருக்கும் நேரமில்லை. ஆளாளுக்கு சுயநலமாகச் சிந்தித்து கட்சியை இரண்டாகப் பிரித்துவிட்டு, 'அதிமுகவை உடைப்பது எங்கள் நோக்கமல்ல' என்று கூறி, 'பொதுக்குழுவைக் கூட்டுங்கள்' எனப் போர்க்குரல் எழுப்புகின்றனர். இதற்குப் பதிலடியாக, 'கட்சி மாறி வாக்களித்தவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள்' என சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், அதிமுக மீண்டும் நீதிமன்றப் படியைப் பிடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:AIADMKTamil Nadu Politicsஅதிமுகஅதிமுக பிளவுஅரசியல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?
Next Article ஐபிஎல் 2026: பந்து தாக்கி பாதியிலேயே வெளியேறிய சாய் சுதர்சன்!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பாகிஸ்தான் எச்சரிக்கை: ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி கடும் நடவடிக்கை!

இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால், பாகிஸ்தான் உலக வரைபடத்தில் இருக்காது என்று இந்திய…

May 17, 2026

நீட் தேர்வு மையம் மாற்றலாம் – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக ரத்து…

May 17, 2026

ரூ.182 கோடி ஜிகாதி போதைப்பொருள் சிக்கியது: அமித் ஷா தகவல்

இந்தியாவில் முதல் முறையாக ரூ.182 கோடி மதிப்பிலான…

May 17, 2026

55% மதிப்பெண் எடுத்த மகனுக்கு பெற்றோர் கேக் வெட்டி கொண்டாட்டம்!

மும்பையில் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 55% மதிப்பெண்…

May 17, 2026

வேலையில்லா இளைஞர்கள் குறித்து தலைமை நீதிபதி விளக்கம்: என்ன சொன்னார்?

வேலையில்லா இளைஞர்கள் குறித்து உச்ச நீதிமன்ற தலைமை…

May 17, 2026

You Might Also Like

அரசியல்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: மக்கள் பாதிப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!

பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு விலை உயர்வை திரும்பப் பெற வேண்டும் என…

1 Min Read
தமிழ்நாடு

தவெக அமைச்சரவையில் காங்கிரஸ்: கிரிஷ் சோடங்கர் திட்டவட்டம்

தமிழக சட்டசபை தேர்தலில் 5 தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ், தவெக அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து டெல்லியில் ராகுல் காந்தியுடன் ஆலோசனை நடத்தப்படும் என…

1 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
அரசியல்

அழகர்கோவில்: சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!

அழகர்கோவிலில் உள்ள நாகினி கண்மாயில் நடைபெற்ற சமத்துவ மீன்பிடித் திருவிழாவில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று உற்சாகமாக மீன்பிடித்தனர்.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?