MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - க்ரைம் - ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது

க்ரைம்

ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது

Admin
Last updated: மே 16, 2026 9:29 காலை
Admin
Share
SHARE

சென்னையை அடுத்த சூரப்பட்டு பகுதியில் தனியாக வசித்து வந்த 70 வயது மூதாட்டி பொன்னம்மாள், நகை மற்றும் பணத்துக்காக கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் நிலத்தரகர் பழனி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸ் ஆகிய இருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சூரப்பட்டு, துளுக்கானத்தம்மன் கோயில் 7-வது தெருவைச் சேர்ந்த பொன்னம்மாள், தனது கணவர் 2006-ல் இறந்த பிறகு தனியாக வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு 6 மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு 7.45 மணியளவில் ஆட்டோவில் வந்த இருவர், இரவு 8.45 மணியளவில் திரும்பிச் சென்றுள்ளனர். இதை சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், பொன்னம்மாள் வீட்டிற்கு சென்று பார்த்தபோது, அவர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையிலும், முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் காயங்களுடனும் இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதூர் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், பொன்னம்மாளின் 5-வது மகள் கெஜலட்சுமி அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பொன்னம்மாள் தனது குடும்பத்திற்கு சொந்தமான சுமார் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்பனை செய்ய ஏற்பாடு செய்து, அதில் 31 லட்சம் ரூபாயை முன்பணமாக பெற்றுள்ளார். இந்த பணத்தை தனது 6 மகள்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் என பிரித்துக் கொடுத்துவிட்டு, மீதி தொகையை வங்கிக் கணக்கில் வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

நிலத்தை விற்பனை செய்வதில் இடைத்தரகராக செயல்பட்ட பழனி, இந்த முன்பணத் தொகை வீட்டில் இருப்பதாக நினைத்து, அதை கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளார். நிலத்தை வாங்கியவரிடம் இருந்து பெற்ற பணத்தை, மகள்களின் வங்கிக் கணக்குகளுக்கு செலுத்தியதை அறியாத பழனி, தனது நண்பரான ஆட்டோ ஓட்டுநர் துளசிதாஸுடன் சேர்ந்து பொன்னம்மாள் வீட்டிற்கு வந்து அவரை கொலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. பீரோவில் பணம் இல்லாததால், பீரோவில் இருந்த 8 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும், பொன்னம்மாள் அணிந்திருந்த 4 பவுன் நகைகளையும் கொள்ளையடித்துவிட்டு இருவரும் தப்பிச் சென்றுள்ளனர். அவர்களிடம் இருந்து 1.27 லட்சம் ரூபாய் ரொக்கமும், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Avadi murderChennai PoliceTamil Nadu Crimeஆவடிநகை கொள்ளைமூதாட்டி கொலை
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சீனாவில் 6 ‘சூப்பர் ஆடுகள்’ குளோனிங்: பால் உற்பத்தியில் புரட்சி!
Next Article ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது சரி: உமர் அப்துல்லா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதியின் தற்போதைய நிலையை…

ஆகஸ்ட் 15, 2026

இலவச பயிற்சி: தேர்வுகளுக்கு ஒரு கோடி இளைஞர்களுக்கு ஏஐ பயிற்சி – மோடி அறிவிப்பு

சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி, பல்வேறு…

ஆகஸ்ட் 15, 2026

பிரதமர் மோடி அனைத்திற்கும் உரிமை கோருகிறார்: கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின…

ஆகஸ்ட் 15, 2026

ஜனநாயகத்தில் விவாதங்கள், போராட்டங்கள் அவசியம் – மோகன் பகவத்

ஜனநாயகத்தில் விவாதங்கள், உரையாடல்கள், எதிர்ப்புகள் மற்றும் போராட்டங்கள்…

ஆகஸ்ட் 15, 2026

தொழிலதிபரிடம் ரூ.75 லட்சம் மோசடி: 2 பேர் கைது

பிரபல தங்க வர்த்தகரின் விவரங்களை திருடி, ஹைதராபாத்…

ஆகஸ்ட் 15, 2026

You Might Also Like

க்ரைம்

படுக்கை அறையிலும் கேமரா: 48 நாளில் இளம்பெண் தற்கொலை

மும்பையில் கணவனின் கொடூர கண்காணிப்பால் விரக்தியடைந்த திருமணமான 48 நாட்களே ஆன இளம்பெண் விஷாகா தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் குடும்பத்தினர்…

1 Min Read
க்ரைம்

செவிலியர் வேலை வாங்கித் தருவதாக ரூ.11 லட்சம் மோசடி: மருத்துவமனை ஊழியர் கைது

சென்னையில் உள்ள பெரம்பூர் ரயில்வே மருத்துவமனையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, 10.81 லட்சம் ரூபாய் மோசடி செய்த மருத்துவமனை ஊழியரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸார்…

1 Min Read
தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது பாலியல் புகார் அளிக்கப்பட்டதாக செய்தி
க்ரைம்

தவெக மாவட்டச் செயலாளர் மீது பாலியல் புகார்: வீடியோ எடுத்து மிரட்டியதாக பெண் குற்றச்சாட்டு

தமிழக வெற்றிக் கழகத்தின் இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் G. விஜய்மோகன் மீது, கட்சியில் பொறுப்பு கேட்கச் சென்ற பெண்ணை இன்ஸ்டாகிராமில் ஆசை வார்த்தை கூறி, வீடியோ…

2 Min Read
க்ரைம்

கிருஷ்ணகிரி அருகே 2 பேர் கொலை: எரிந்த நிலை​யில் உடல்​கள் மீட்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்​கள் கொலை செய்​யப்​பட்​டு, தீ வைத்து எரிக்​கப்​பட்ட நிலை​யில் உடல்​களை மீட்டு போலீ​ஸார் விசா​ரித்து வரு​கின்​றனர். கிருஷ்ணகிரி அருகே ஆலப்​பட்டி கிராமத்​தில்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?