MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > பிசின்ஸ் > ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!
பிசின்ஸ்

ஐக்கிய அரபு அமீரகம் சென்றார் மோடி: முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து!

Admin
Last updated: May 16, 2026 9:29 am
Admin
Share
SHARE

பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு நேற்று மேற்கொண்ட பயணத்தில், எல்பிஜி மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேமிப்பு தொடர்பான முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தானது. வர்த்தகம், தொழில்நுட்​பம், எரிசக்தி, பாதுகாப்பு, புத்தாக்​கம் மற்றும் பசுமை வளர்ச்சி போன்ற துறைகளில் வளைகுடா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடனான உறவை வலுப்படுத்தும் நோக்கில், பிரதமர் மோடி 5 நாடுகளுக்கான பயணத்தை தொடங்கியுள்ளார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக அவர் ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார்.

அமீரக அதிபர் ஷேக் முகமது பின் ஜயீத் அல் நஹ்யன், பிரதமர் மோடியை அன்புடன் வரவேற்றார். ராணுவ வீரர்களின் அணிவகுப்பு மரியாதையும் அவருக்கு அளிக்கப்பட்டது. பின்னர், இரு தலைவர்களுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, ஈரான்-ஈராக் போர் காரணமாக ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிப்பது குறித்து பிரதமர் மோடி வலியுறுத்தினார். அமீரகம் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்த பிரதமர், மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் என்று உறுதியளித்தார். மேலும், ஈரான் போர் சமயத்தில் இந்தியர்களுக்கு பாதுகாப்பு அளித்ததற்காக அதிபர் அல் நஹ்யனுக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார்.

உலகளாவிய எரிசக்தி மற்றும் வர்த்தக கப்பல் போக்குவரத்திற்கு ஹார்முஸ் ஜலசந்தி எந்தவித தடையும் இன்றி திறக்கப்பட வேண்டும் என்றும், அங்கு சர்வதேச சட்ட விதிகள் பின்பற்றப்பட வேண்டியதன் அவசியத்தையும் பிரதமர் மோடி எடுத்துரைத்தார். அதைத் தொடர்ந்து, எல்பிஜி காஸ், பெட்ரோலியப் பொருட்கள் விநியோகம் மற்றும் சேமிப்பு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் நாட்டின் எரிசக்தி பாதுகாப்பை மேலும் மேம்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது உலகளவில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு போன்ற சூழலில், இந்த இருதரப்பு ஒப்பந்தம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மேலும், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பு, கட்டமைப்பு திட்டங்களில் முதலீடு குறித்தும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்திய கட்டமைப்பு மற்றும் ஆர்பிஎல் வங்கி, சம்மான் கேபிடல் போன்ற நிதி நிறுவனங்களில் ஐக்கிய அரபு அமீரகம் 5 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் ரூ.48,000 கோடி) முதலீடு செய்ய உறுதியளித்துள்ளது. குஜராத் மாநிலத்தின் வாடினர் பகுதியில் கப்பல் பழுதுபார்க்கும் மையங்கள் அமைப்பதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உறவு மேலும் வலுப்பெறும். வர்த்தக உறவில் ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவின் 3-வது பெரிய நாடாகவும், கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலான மொத்த முதலீட்டில் 7-வது பெரிய நாடாகவும் திகழ்கிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Energy SecurityIndia UAEModi UAE visitஎரிசக்தி ஒப்பந்தம்ஐக்கிய அரபு அமீரகம்பிரதமர் மோடி
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஆவடியில் மூதாட்டி கொலை: நகை, பணத்துக்காக நடந்த கொடூரம் – இருவர் கைது
Next Article கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெட்ரோல், டீசல் விற்பனை கட்டுப்பாடுகள் நீக்கம்: இன்று முதல் அமல்

மத்திய அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து, பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மீதான கட்டுப்பாடுகள்…

July 1, 2026

மும்பையில் பள்ளி பேருந்து மீது மரம் விழுந்து மாணவர் பலி

மும்பை செம்பூர் பகுதியில் பள்ளி பேருந்து மீது…

June 30, 2026

கணவனை விட அதிகம் சம்பாதித்தால் ஜீவனாம்சம் கிடையாது – கர்நாடக உயர்நீதிமன்றம்

கணவரை விட அதிகமாக சம்பாதிக்கும் பெண்கள் ஜீவனாம்சம்…

June 30, 2026

நாளை முதல் அமலுக்கு வரும் புதிய விதிகள்: ஆதார் அப்டேட் முதல் ரயில் அபராதம் வரை

நாளை முதல் ஆதார் மின்னஞ்சல் முகவரி இலவச…

June 30, 2026

ஆந்திராவில் பழங்குடியினர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் ஜனாதிபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, விசாகப்பட்டினம் பழங்குடியினர்…

June 30, 2026

You Might Also Like

உலகம்

ஹார்முஸ் நீரிணை பதற்றம்: மோடி எச்சரிக்கை

ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, ஹார்முஸ் நீரிணைப் பதற்றம் இந்திய மாலுமிகள் மற்றும் உலக கடல்சார் வர்த்தகத்திற்கு அச்சுறுத்தல் என எச்சரித்தார்.

1 Min Read
ஆட்டோமொபைல்

ஹுண்டாய் காம்பேக்ட் EV: புதிய மின்சார எஸ்யூவி விரைவில் அறிமுகம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஹுண்டாய் நிறுவனம் தனது நான்காவது மின்சார கார் மாடலாக ஒரு புதிய காம்பேக்ட் எஸ்யூவியை விரைவில் விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இந்த புதிய…

1 Min Read
உலகம்

ஸ்லோவாக்கியாவின் உயரிய விருதை பெற்றார் பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு ஸ்லோவாக்கியாவின் உயரிய விருது அந்நாட்டு அதிபர் பீட்டர் பெல்லெக்ரினி வழங்கினார். இது மோடிக்கு கிடைக்கும் 33வது சர்வதேச விருது ஆகும்.

1 Min Read
தமிழ்நாடு

பிரதமருக்கு முதலமைச்சர் எழுதிய கடிதத்தில் ஒரு முக்கிய மாற்றம்!

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பங்குகளை விற்கும் இந்திய அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர் விஜய் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். இதில் அவர் 'இந்திய அரசு'…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?