தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக வெங்கட நாராயணா நியமிக்கப்பட்ட விவகாரத்தில், இந்த நியமனத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை முதல்வர் உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டும். வெங்கட் நாராயணாவின் நியமனம் தற்போது பல விவாதங்களையும் விமர்சனங்களையும் உருவாக்கியுள்ளது. தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூகப் பிரச்சனைகள் குறித்த ஆழமான புரிதல் இல்லாத ஒருவரை இந்தப் பொறுப்பில் நியமித்தது சரியான நடவடிக்கை அல்ல. வெங்கட் நாராயணாவின் நியமனத்தை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எனவே, டெல்லி சிறப்பு பிரதிநிதியாக மிகவும் பொருத்தமான ஒருவரை முதல்வர் நியமிக்க வேண்டும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
You Might Also Like
குடிநீர் தேவைக்காக வைகை அணை திறப்பு: மதுரைக்கு நீர் வழங்கல்
மதுரை மாநகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் குடிநீர் விநியோகம் உறுதி செய்யப்படும்.
1 Min Read
மேற்கு வங்கத்திலும் தவெக கட்சி அலுவலகம் திறப்பு!
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேசிய அளவிலான விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு வங்கத்தில் தனது முதல் கட்சி அலுவலகத்தை கிழக்கு பர்த்வான் மாவட்டம்…
2 Min Read
நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி: உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாகர்கோவில் காசிக்கு ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. சமூக வலைத்தளங்கள் மூலம் பெண்களை மிரட்டி பணம் பறித்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பை உறுதி செய்தது.
2 Min Read
இந்தியன் வங்கி நிகர லாபம் ரூ.3,273 கோடியாக உயர்வு
இந்தியன் வங்கியின் நிகர லாபம் கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 10.09% அதிகரித்து ரூ.3,273 கோடியாக உயர்ந்துள்ளது. நிர்வாக இயக்குனர் பினோத் குமார் தகவல்.
1 Min Read
