தினமும் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் ஏற்படும் எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு காண்போம். வைட்டமின் சி சத்து நிறைந்த நெல்லிக்காயை தினமும் உட்கொள்வது, புற்றுநோய் மற்றும் பெப்டிக் அல்சர் போன்ற நோய்களை கட்டுப்படுத்த உதவும். மேலும், சர்க்கரை மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகளையும் இது கட்டுக்குள் வைத்திருக்க துணைபுரியும்.
நெல்லிக்காயை அப்படியே சாப்பிடுவதோ அல்லது ஜூஸ் போட்டு குடிப்பதோ இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இது இதய சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமல் தடுப்பதோடு, இதய தசைகளையும் வலுப்படுத்தும். சீரான ரத்த ஓட்டத்திற்கு இது வழிவகுக்கும்.
மேலும், இதய வால்வுகளில் ஏற்படும் இரத்தக் குழாய் அடைப்புகளை சீராக்கி, ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும். உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்பை கரைத்து, உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்கவும் நெல்லிக்காய் ஜூஸ் உதவுகிறது.
நெல்லிக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் பித்தநீராக செயல்பட்டு, பித்தப்பையில் கற்கள் உருவாவதை தடுக்கும். ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து, இரத்தத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி, சிறுநீரகங்கள் கழிவுகளை வெளியேற்றவும் இது துணைபுரியும்.
