MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்
தமிழ்நாடு

துணைவேந்தர் நியமனம்: விரைந்து நடவடிக்கை எடுக்க அன்புமணி வலியுறுத்தல்

Admin
Last updated: May 27, 2026 4:56 pm
Admin
Share
SHARE

தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர்களாக முதலமைச்சர் நியமிக்கப்படலாம் என்ற சட்ட முன்வரைவுகளுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல் அளித்திருக்கும் நிலையில், துணைவேந்தர்களை விரைந்து நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சியின்போது, பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிப்பது தொடர்பாக 10 சட்ட முன்வரைவுகள் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டன. எனினும், இந்த சட்ட முன்வரைவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமலும், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி தாமதப்படுத்தியும் வந்தார். இதைத் தொடர்ந்து, ஒப்புதல் அளிக்கும்படி ஆளுநருக்கு ஆணையிடக் கோரி திமுக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியலமைப்புச் சட்டத்தின் 142-வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்கும் சட்ட முன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், தற்போதைய சூழலில் தமிழகத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களின் வேந்தரும் முதலமைச்சர்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு, இந்த சட்டங்களை செல்லாது என அறிவிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில், சட்டங்களுக்கு இடைக்காலத் தடை விதித்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் இந்த இடைக்காலத் தடையையும் செல்லாது என தீர்ப்பளித்து, இந்த வழக்கை 6 வாரங்களுக்குள் விசாரித்து தீர்ப்பளிக்குமாறு உத்தரவிட்டது. எனவே, தமிழக அரசு செய்ய வேண்டியது, உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து முடித்து, நடைமுறைக்கு கொண்டு வருவதன் மூலம் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தர்களை உடனடியாக நியமிப்பதாகும். மாறாக, சட்ட மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளால் உறுதி செய்யப்பட்ட இந்த நிலைப்பாட்டை மாற்ற புதிய அரசு எந்த முயற்சியும் செய்யக் கூடாது. அவ்வாறு செய்வது மாநில அரசின் உரிமைகளை விட்டுக்கொடுப்பதாக அமையும் என அன்புமணி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Vice Chancellor Appointmentஅன்புமணிதமிழக அரசுதுணைவேந்தர்பல்கலைக்கழகம்பாமக
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தோனி சிஎஸ்கேவில் தொடர்வாரா? சிஇஓ காசி விஸ்வநாதன் விளக்கம்
Next Article கருத்து வேறுபாடுதான், பிளவு இல்லை – எஸ்.பி.வேலுமணி விளக்கம்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

ஜூலை 31 வரை ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் காரணமாக, ஏர் இந்தியா விமான…

May 29, 2026

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப்…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

TN Assembly | எம்.எல்.ஏ.ஆக பதவியேற்காத அமைச்சர் கீர்த்தனா

தமிழகத்தின் 17-வது சட்டசபை இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும் முதலமைச்சர் விஜய்க்கு…

1 Min Read
தமிழ்நாடு

CSK vs SRH: சென்னை மெட்ரோ சிறப்பு அறிவிப்பு!

ஐபிஎல் 2026 போட்டியை காண வரும் ரசிகர்களுக்காக, சென்னை மெட்ரோ நிர்வாகம் சிறப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. ஸ்பான்சர் செய்யப்பட்ட பயணச்சீட்டுடன் கட்டணமின்றி பயணம் செய்யலாம்.

1 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம் பாலியல் வன்கொடுமை: முதல்-அமைச்சர் வீரவசனம் எங்கே? – தினகரன் கேள்வி

விழுப்புரம் மரக்காணம் அருகே 11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜயின் வீரவசனத்தை டிடிவி தினகரன் கேள்விக்குள்ளாக்கியுள்ளார். குற்றவாளிக்கு உச்சபட்ச…

1 Min Read
தமிழ்நாடு

திருச்செந்தூர்: வைகாசி பிறப்பு – 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

வைகாசி மாதப்பிறப்பு மற்றும் கோடை விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர். இலவச தரிசனத்தில் சுமார் 7 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?