சென்னையில் நாளை (26.05.2026) குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்புப் பணிகளுக்காக காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை இந்த மின்தடை நீடிக்கும். பணிகள் முடிந்தவுடன் மின்சாரம் மீண்டும் வழங்கப்படும்.
திநகர் பகுதியில் பஜுல்லா சாலை, சாரி தெரு, பார்த்தசாரதிபுரம், உண்ணாமலை அம்மன் தெரு, வள்ளுவர் சாலை, நந்தி தெரு, ரங்கநாதன் தெரு, தணிகாசலம் சாலை, மாசிலாமணி சாலை, காந்தி தெரு, ஜெயலால் நேரு தெரு, ராமச்சந்திரா ஐயர் தெரு, ராமன் தோட்டம், மாம்பலம் நெடுஞ்சாலை, கோடம்பாக்கம் நெடுஞ்சாலை, வடக்கு உஸ்மான் சாலை, ரங்கராஜபுரம், அடீஸ் நகர், அக்பராபாத், பாராங்குசபுரம், சிஆர்பி கார்டன், மங்க்கேஷ் தெரு, ரயில்வே பார்டர் சாலை, ஸ்டேஷன் வியூ சாலை, பாரதி தெரு, திலக் தெரு ஆகிய இடங்களில் மின்சாரம் இருக்காது.
மேலும், தசரதபுரம் பகுதியில் காவேரி ரங்கன் நகர், கேகே சாலை, லோகையா காலனி, பாலாஜி நகர், பாஸ்கர் காலனி, மத்யழகன் நகர், வெங்கடேச நகர், அருணாசல நகர்; சாலிகிராமத்தில் குமரன் காலனி, காந்தி நகர், தேவராஜ் நகர், எஸ்.எஸ்.ஆர். பங்கஜம் சாலை; கே.கே. நகரில் பரணி காலனி, காவேரி மருத்துவமனை, சூரியா தெரு, 80 அடி சாலை, எம்.ஜி. சக்கரபாணி தெரு, பிக் பஜார், பாஸ்போர்ட் அலுவலகம் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.
விருகம்பாக்கத்தில் ஆற்காடு சாலை, என்.எஸ்.கே லேன், ஷியாமளா டவர்; சின்மயா நகரில் முனுசாமி தெரு, கஸ்தூரி தெரு, வினாயகம் தெரு, காமராஜர் சாலை; திருவேற்காட்டில் ஆனந்தன் நகர், சக்கரேஸ்வரி நகர், மகாலட்சுமி நகர், விஜிஎன், அன்பு நகர்; ஐயப்பன் தாங்கலில் மவுண்ட் பூந்தமல்லி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, முருகன் கோவில் தெரு, ஜெ.ஜெ நகர், அம்மன் நகர், பி.ஜி அவென்யூ, இந்திரா நகர், ஜானகியம்மாள் நகர், சாய் நகர், விநாயகபுரம், சொர்ணமணி நகர் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் நிறுத்தப்படும். இந்த மின்தடையால் பொதுமக்கள் சிரமமின்றி தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்துகொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.
