MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: 7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: 7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - 7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

தமிழ்நாடு

7 நாட்களில் 949 குற்றவாளிகள் கைது: காவல்துறை அதிரடி நடவடிக்கை

Admin
Last updated: ஜூலை 8, 2026 8:00 மணி
Admin
Share
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப.
தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப.
SHARE

தமிழகம் முழுவதும் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில், காவல்துறை தீவிர அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. கடந்த 7 நாட்களில் மட்டும், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 949 சரித்திர பதிவேடு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், "சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கும் நோக்கில், முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு காவல் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் திரு.மகேஷ் குமார் அகர்வால் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாநிலம் முழுவதும் சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார் மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் தொடர்புடைய தலைமறைவு குற்றவாளிகளுக்கு எதிராக தீவிர அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 1 முதல் ஜூலை 7, 2026 வரையிலான காலகட்டத்தில், மாநிலம் முழுவதும் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகளின் போது, மொத்தம் 24,025 சரித்திரப்பதிவேடு ரவுடிகள் மற்றும் குற்றகுணத்தார் சோதனை செய்யப்பட்டனர். இவர்களில், குற்றச்செயல்களில் ஈடுபட்ட 949 பேர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், பிணையில் வெளிவர முடியாத 2,385 பிடியாணைகள் இந்த 7 நாட்களில் நிறைவேற்றப்பட்டுள்ளன. நிலுவையில் உள்ள பிணையில் வெளிவர முடியாத பிடியாணைகளை (NBW) நிறைவேற்றுவதற்கும், தலைமறைவு குற்றவாளிகளைக் கைது செய்வதற்கும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

மாநகர காவல் ஆணையாளர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு அதிகாரிகள் ஆகியோருக்கு, சரித்திரப்பதிவேடு குற்றவாளிகள், குற்ற குணத்தார், தொடர் குற்றவாளிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ளவும், வழக்கமான சோதனைகள், தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் நெருக்கமான கண்காணிப்புகள் மூலம் குற்றச் செயல்களைத் தடுக்கவும், சட்டம் மற்றும் ஒழுங்கை பராமரிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தொடர்ச்சியான நடவடிக்கைகள், கண்காணிப்பு பணிக்கான அமலாக்க ஒருங்கிணைப்பை மேம்படுத்தியுள்ளது. மேலும், தடுப்பு காவல் நடவடிக்கைகளை வலுப்படுத்தி, பிடியாணைகள் நிறைவேற்றுதலை அதிகரித்து, தொடர் குற்றவாளிகள் மற்றும் சட்டம்-ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக உள்ளவர்களுக்கு எதிராக இலக்கு வைத்து நடவடிக்கை எடுக்க இது உதவியுள்ளது.

இதன் மூலம், மாநிலம் முழுவதும் பொது ஒழுங்கை உயர்தரத்தில் பராமரிப்பதற்கும், பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் சட்ட அமலாக்க நடவடிக்கைகள் மேலும் வலுப்பெற்றுள்ளன என்று காவல்துறை தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதுடன், குற்றவாளிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:Crime NewsLaw and OrderTamil Nadu Policeகாவல்துறை நடவடிக்கைகுற்றவாளிகள் கைதுசட்டம் ஒழுங்குதமிழக காவல்துறைதிரு.மகேஷ் குமார் அகர்வால்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article சேலம் மாநகராட்சி குடிநீர் திட்ட ஒப்பந்தம் கையெழுத்து சேலம் மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டம்: ஒப்பந்தம் கையெழுத்து
Next Article குடியிருப்பு பகுதியில் டெலிவரி ஊழியரை குறிவைத்து பாயும் சிறுத்தை இந்தூரில் சிறுத்தை தாக்குதல்: டெலிவரி ஊழியரை குறிவைத்த காட்சி வைரல்
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

என்கவுண்டரில் கொல்லப்பட்ட குற்றவாளி பிரபாஸ் மண்டல் தொடர்பான செய்தி

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

இந்தூரில் சிறுத்தை தாக்குதல்: டெலிவரி ஊழியரை குறிவைத்த காட்சி வைரல்

இந்தூரில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை, உணவு…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

மேகதாது திட்டம்: 11 ஆண்டுகளாக போராடும் ஒரே கட்சி ம.தி.மு.க. – வைகோ

மத்திய அரசு மேகதாது அணை திட்டத்தை இயக்குவதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார். 11 ஆண்டுகளாக இந்த திட்டத்தை தடுக்க ஒரே கட்சி ம.தி.மு.க. தான்…

1 Min Read
தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு வைரமுத்து பாராட்டு: தோல்வி இல்லை, அடுத்த வெற்றிக்கு தயார்!

கவிஞர் வைரமுத்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்துவிட்டு, அவரது தலைமைப் பண்பையும், தோல்வியில் துவளாத மன உறுதியையும் பாராட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

விழுப்புரம்: சாக்லேட் சாப்பிட்ட மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் உள்ள அரசுப் பள்ளியில், பிறந்தநாள் சாக்லேட் சாப்பிட்ட 18 மாணவர்களுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாக்லேட் காலாவதியானதா என விசாரணை நடைபெறுகிறது.

1 Min Read
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கூட்டாளி
தமிழ்நாடு

தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!

தனிமையில் உல்லாசமென ஆசை வார்த்தை கூறி பைனான்ஸியரை நிர்வாணமாக்கி, பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கூட்டாளியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும்…

2 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?