MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!

தமிழ்நாடு

தனிமையில் உல்லாசமென அழைத்த பெண்: பைனான்ஸியரை நிர்வாணமாக்கி மிரட்டிய கும்பல்!

Admin
Last updated: ஜூலை 8, 2026 7:43 காலை
Admin
Share
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் அவரது கூட்டாளி
காரைக்குடியில் பைனான்ஸியரை மிரட்டிய வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் மற்றும் கூட்டாளி.
SHARE

தனிமையில் உல்லாசமாக இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி, ஒரு பைனான்சியரை நிர்வாணமாக்கி பணம் கேட்டு மிரட்டிய பெண் மற்றும் அவரது கூட்டாளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம், பிபட்டி கிராமத்தைச் சேர்ந்த 40 வயதான வடிவேல் என்பவர் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். கடந்த ஜூன் மாதம், கவிதா என்ற பெயரில் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் அவரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண், தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுவதாக கூறி, ஜூன் 9 ஆம் தேதி வடிவேலிடம் இருந்து ஜி-பே மூலம் ரூ.4,500 பெற்றுள்ளார். அதன் பிறகு, இருவரும் தொடர்ந்து செல்போனில் பேசி பழகி வந்துள்ளனர்.

நாளடைவில் இவர்களது பழக்கம் நெருக்கமான நிலையை எட்டியுள்ளது. அப்போது, காரைக்குடிக்கு வந்தால் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருக்கலாம் என அந்த பெண் வடிவேலுவுக்கு ஆசை வார்த்தை கூறியதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய வடிவேல், ஜூன் 24 ஆம் தேதி காரைக்குடிக்கு சென்றுள்ளார்.

காரைக்குடியில், அந்த பெண் வடிவேலை சற்று தனிமையாக பேசலாம் என்று கூறி, அங்குள்ள ஒரு பழைய ஓட்டு வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். ஆனால், அங்கு சென்றதும் வடிவேலுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. வீட்டிற்குள் மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென வெளியே வந்து, வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி தாக்கியுள்ளனர். மேலும், அவரிடம் இருந்து ரூ.50 லட்சம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

தன்னிடம் அவ்வளவு பணம் இல்லை என்று வடிவேல் கூறிய நிலையில், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனம் மற்றும் செல்போனையும் பறித்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. பின்னர், அங்கிருந்து வீட்டிற்கு சென்ற வடிவேல், இந்த சம்பவம் குறித்து காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், காரைக்குடி புதிய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில், இந்த சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக செயல்பட்ட தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும், இந்த கும்பல் வேறு யாரையும் இதேபோல் ஏமாற்றி உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:FinancierKaraikudiStrippedThreatWomanகவிதாகாரைக்குடிதமிழ்ச்செல்வன்திருப்புத்தூர்நிர்வாணமாக்கிபெண்பைனான்ஸியர்மிரட்டல்வடிவேல்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது செய்யப்பட்டார் வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த துணை போலீஸ் சூப்பிரண்டு கைது
Next Article லஞ்சம் வாங்கிய பேரூராட்சி இளநிலை உதவியாளர் பாலமுருகன் கைது ரூ.15 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர் கைது!
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே

வந்தே மாதரம் பாடல்: மோடி, பாஜகவிடம் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலை முழுமையாக பாடாதது ஏன்? பிரதமர் மோடி, பாஜகவிடம் காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

90 ஆண்டுகளாக இல்லாத சிக்கல் இப்போது ஏன்? – வந்தே மாதரம் விவகாரத்தில் கார்கே கேள்வி

வந்தே மாதரம் பாடலின் சுருக்கப்பட்ட பதிப்பையே காங்கிரஸ்…

ஆகஸ்ட் 22, 2026

சோமாலியா கடலில் 2 கப்பல்கள் கடத்தல்: 22 இந்திய மாலுமிகள் மீட்பு தீவிரம்

சோமாலியா, ஏமன் கடற்பகுதிகளில் கடற்கொள்ளையர்களால் கடத்தப்பட்ட 2…

ஆகஸ்ட் 22, 2026

31 ஆண்டுகள் சிறைவாசம்: 105 வயது முதியவருக்கு சுப்ரீம் கோர்ட் ஜாமீன்

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 31…

ஆகஸ்ட் 22, 2026

மனைவியுடன் சேர நரபலி: ஒருவர் கொலை செய்யப்பட்டு, தலை பூஜை அறையில் புதைப்பு

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து சென்ற மனைவியுடன்…

ஆகஸ்ட் 22, 2026

You Might Also Like

தூத்துக்குடி பொருட்காட்சியில் சேதப்படுத்தப்பட்ட பொருட்கள்
தமிழ்நாடு

தூத்துக்குடி பொருட்காட்சியில் தகராறு: தவெகவினர் 10 பேர் மீது வழக்கு

தூத்துக்குடியில் நடந்த பொருட்காட்சியில் தவெகவினர் 10 பேர் மீது நாற்காலி, டியூப் லைட் உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

1 Min Read
தமிழ்நாடு

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகள் 7 ஆக உயர்வு

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் ராஜினாமா செய்ததை அடுத்து, தமிழகத்தில் காலியாக உள்ள சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. விரைவில் இடைத்தேர்தல் அறிவிப்பு…

1 Min Read
தமிழ்நாடு

திருவள்ளூரில் சிறுவனை கொடூரமாக கொலை செய்து புதைத்த சம்பவம் – பரபரப்பு

திருவள்ளூரில், ஆடுகளை சரியாக மேய்க்காத சிறுவனை அடித்துக்கொன்று புதைத்த கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 Min Read
கோவை தீயணைப்பு வீரர் தற்கொலை சம்பவம் குறித்த விசாரணை
தமிழ்நாடு

காதல் திருமணமான ஒன்றரை மாதத்தில் தீயணைப்பு வீரர் தற்கொலை: போலீசார் விசாரணை

கோவை: காதல் திருமணம் செய்து ஒன்றரை மாதங்களிலேயே தீயணைப்பு வீரர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?