MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்

தமிழ்நாடு

யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:33 காலை
Admin
Share
SHARE

திருப்பூர் மாவட்டத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்ததில், தாய் சசிகலா (32) ரத்தப்போக்கு ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைசாமி – சசிகலா தம்பதியினருக்கு ஏற்கனவே 6 வயதில் ஒரு மகள் உள்ளார். முதல் பிரசவம் சி-செக்ஷன் மூலம் நடந்த நிலையில், அதன்பின் ஏற்பட்ட முதுகு வலி மற்றும் உடல்நலப் பாதிப்புகளால் ஆங்கில மருத்துவத்தின் மீது அதிருப்தி அடைந்த சசிகலா, இரண்டாவது பிரசவத்தை இயற்கையாக வீட்டிலேயே பார்த்துக்கொள்ள முடிவு செய்துள்ளார்.

இரண்டாவது முறை கர்ப்பமான சசிகலா, கர்ப்ப காலத்தில் ஒருமுறை கூட மருத்துவமனைக்குச் சென்று வழக்கமான பரிசோதனைகளை மேற்கொள்ளவில்லை. உறவினர்கள் வற்புறுத்தியும் அவர் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்துள்ளார். மாறாக, இணையதளத்தில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்ப்பதற்கான வழிமுறைகளைத் திட்டமிட்டு வந்துள்ளார்.

கடந்த 23-ஆம் தேதி இரவு சசிகலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போதும் மருத்துவமனைக்குச் செல்ல மறுத்ததால், யூடியூப் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே பிரசவம் பார்க்கப்பட்டுள்ளது. கடந்த 24-ஆம் தேதி அதிகாலை 5.42 மணியளவில் சசிகலாவுக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஆனால், குழந்தை பிறந்த சில நிமிடங்களிலேயே சசிகலாவுக்கு கடுமையான மற்றும் கட்டுப்பாடற்ற ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மயக்கமடைந்துள்ளார்.

மயக்கமடைந்த சசிகலாவை குடும்பத்தினர் உடனடியாக மீட்டு பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதலுதவிக்காக அனுமதித்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கோயம்புத்தூரில் உள்ள ராயல் கேர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:தமிழ்நாடுதாய் மரணம்திருப்பூர்பிரசவம்யூடியூப்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article இந்தியாவை 1 ரன்னில் வீழ்த்தி அயர்லாந்து தொடர் வெற்றி!
Next Article பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி ஏழுமலையான் கோவில்

திருப்பதியில் ஒரே நாளில் 88,000 பக்தர்கள் தரிசனம்: ரூ.5 கோடி காணிக்கை

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரே நாளில் 88,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமி தரிசனம்…

ஜூலை 7, 2026

முதல்-அமைச்சர் விஜய்க்கு கரூர் செல்ல தடையில்லை: சுப்ரீம் கோர்ட்

முதல்-அமைச்சர் விஜய் கரூர் செல்வதற்கு எந்த தடையும்…

ஜூலை 7, 2026

வரும் வெள்ளிக்கிழமை கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்

தமிழக முதல்வர் விஜய், வரும் வெள்ளிக்கிழமை அன்று…

ஜூலை 7, 2026

கரூர் வருகைக்கு எதிராக திமுக மனு: அவசர விசாரணை இன்று

கரூர் வழக்கு தொடர்பாக டெல்லி சி.பி.ஐ. அலுவலகத்தில்…

ஜூலை 7, 2026

மும்பையில் கனமழை: 15 பேர் உயிரிழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு

மும்பையில் பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கொடைக்கானல்: புலிகள் நடமாட்டம் – பேரிஜம் ஏரிக்கு தடை!

கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி பகுதிக்கு புலிகள் நடமாட்டம் காரணமாக வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மறு அறிவிப்பு வரும் வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல அனுமதி இல்லை.

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய்க்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் – பிரேமலதா பேட்டி

சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த், விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில், பிரேமலதா விஜயகாந்த் இன்று சட்டசபைக்கு வருகை தந்து…

1 Min Read
தமிழ்நாடு

நீட் தேர்வு செல்லும்போது விபத்து: மாணவிக்கு உதவிய காவலர்கள்

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவி சாலை விபத்தில் சிக்கியபோது, மணிகண்டம் காவல்துறையினர் அவரை மீட்டு முதலுதவி அளித்து மனிதநேயத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

1 Min Read
சினிமா

மறைந்த பாக்யராஜ்: தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் நிரந்தர கவுரவ தலைவர் நியமனம்

தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம், மறைந்த இயக்குநர் பாக்யராஜை நிரந்தர கவுரவ தலைவராக நியமித்து கௌரவித்துள்ளது. இது அவரது கலைப்பணிக்கு கிடைத்த அங்கீகாரமாக கருதப்படுகிறது.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?