MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

தமிழ்நாடு

பெரும்பான்மைக்கு குதிரை பேரம்: வானதி சீனிவாசன் குற்றச்சாட்டு

Admin
Last updated: ஜூன் 29, 2026 7:41 காலை
Admin
Share
SHARE

கோவை தெற்கு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் மக்களுடன் இணைந்து பிரதமர் மோடியின் 'மன் கி பாத்' நிகழ்ச்சியை பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கேட்டறிந்தார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "ஜனசங்கத்தின் நிறுவனரும், ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்க போராடி சிறையில் உயிர் நீத்தவருமான சியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு நாள் நிகழ்ச்சிகள் நாடு முழுவதும் பாஜக சார்பில் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை தெற்கு தொகுதியில் சியாமா பிரசாத் முகர்ஜியின் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தி, மரம் நட்டோம். நான் எம்எல்ஏவாக இருந்தபோது, இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட வாட்டர் ஏடிஎம் இயந்திரம் வேலை செய்யவில்லை என பொதுமக்கள் புகார் அளித்தனர். அதனை உடனடியாக சரி செய்யுமாறு மாநகராட்சி நிர்வாகத்தினரிடம் கூறியுள்ளேன்.

தமிழக அரசின் சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்படுபவர், தமிழகத்தின் தேவைகளையும், பிரச்சினைகளையும் மத்திய அமைச்சர்களுடன் பேசி பெற்றுத்தர வேண்டும். அது முக்கியமான பணி. அதை தமிழக அரசு யாருக்கு வேண்டுமானாலும் வழங்கலாம். ஆனால், சர்ச்சை எழும்போது அதற்குரிய பதிலை அளிக்க வேண்டும். காவிரி பிரச்சனையில், தமிழக முதல்வர் விஜய், தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கர்நாடக முதல்வருடன் சுமுகமாகப் பேசி தீர்வு காண வேண்டும். தமிழக அரசின் அனுமதி இன்றி எந்த அணையும் கட்டக்கூடாது என்பது மத்திய அரசின் நிலைப்பாடு.

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஒரு கட்சியிலிருந்து மற்றொரு கட்சிக்கு பலர் செல்வது இயல்பு. ஆனால், மிகவும் புத்திசாலித்தனமாக, திட்டமிட்ட ரீதியில் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து பெரும்பான்மை அடைய இந்த அரசு முயற்சிக்கிறது. இதை குதிரை பேரம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்ல முடியும்? தேர்தல் முன்பு கொள்கை கூட்டணி என முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமையாகப் பேசினார். இப்போது அந்தக் கூட்டணி சிதறி உள்ளது. எது கொள்கை என திமுக யோசிக்க வேண்டும். உறுதியான கொள்கையுடனும், தேசிய சிந்தனையுடனும் மக்கள் வளர்ச்சிக்காக உள்ள கட்சி பாஜகதான்.

பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை புதிய இயக்கம் தொடங்கியுள்ளார். அவர் கட்சிக்கு எதிராக வந்தால் அப்போது கருத்து சொல்வதுதான் சரியாக இருக்கும். அனுபவமிக்கவர்களையும் புதியவர்களையும் ஒருங்கிணைத்துச் செல்வது ஒரு கட்சிக்கு சிறந்த பண்பு. அந்த வகையில், பாஜகவில் அனுபவமிக்கவர்களுக்கும், புதியவர்களுக்கும் உரிய அங்கீகாரம் வழங்கப்படுகிறது. அண்ணாமலைக்கு பாஜக உயர்ந்த பொறுப்பைக் கொடுத்தது. அவரும் கட்சிக்காக சிறப்பாக உழைத்தார். சட்டப்பேரவை நிகழ்வுகள் இப்போதும் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் பேசும்போது நேரலை ஒளிபரப்பு நிறுத்தப்படுகிறது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பல்வேறு கோவில்களுக்குச் சென்று ஆய்வு செய்கிறார். கோவில் பணத்தை பக்தர்களின் வசதிகளுக்காக செலவிட வேண்டும் என்பது வரவேற்கத்தக்கது. பார்ட்டி ஃபண்ட் வாங்க மாட்டோம் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார். இது வரவேற்கத்தக்க நல்ல விஷயம். கடந்த திமுக ஆட்சியில் லஞ்சம் அதிகமாக இருந்தது. இதனால் ஏற்பட்ட வெறுப்பு காரணமாகவே மக்கள் திமுகவை தோற்கடித்தனர். அயோத்தி ராமர் கோவில் விவகாரத்தில், அரசு கமிட்டி அமைத்து, தவறு செய்தவர்களைக் கைது செய்துள்ளது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் உரிய தண்டனை வழங்கப்படும்', என்று வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

Author

Admin

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:குதிரை பேரம்கோவைதமிழக அரசுபாஜகவானதி சீனிவாசன்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article யூடியூப் பார்த்து பிரசவம்: ரத்தப்போக்கால் தாய் பலி – திருப்பூர் சோகம்
Next Article நேபாளத்தில் தவித்த 52 இந்திய யாத்ரீகர்கள் மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மாநிலங்களவை தலைவர் ஜே.பி. நட்டா

கார்கே பங்கேற்ற நிகழ்ச்சியில் சுத்திகரிப்பு சடங்கு: விசாரணைக்கு நட்டா உத்தரவு

மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்ற நிகழ்ச்சியில் நடந்த சுத்திகரிப்பு சடங்கு குறித்து விசாரணை நடத்தப்படும்…

ஆகஸ்ட் 13, 2026

ஆந்திராவின் வளர்ச்சிக்கு குடியரசுத் தலைவர் பாராட்டு

ஆந்திர மாநிலத்தின் உண்மையான வளர்ச்சிக்கு முதலமைச்சர் சந்திரபாபு…

ஆகஸ்ட் 13, 2026

திருப்பதி: இலவச தரிசனத்திற்கு 20 மணி நேர காத்திருப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனத்திற்காக பக்தர்கள்…

ஆகஸ்ட் 13, 2026

5 மாநில தேர்தல்: காங்கிரஸுக்கு ₹207 கோடி நன்கொடை

அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி…

ஆகஸ்ட் 13, 2026

தனியார் மருத்துவமனை அறை வாடகை: 3 நட்சத்திர ஹோட்டல் கட்டணத்தை மிஞ்சக் கூடாது – குழு பரிந்துரை

தனியார் மருத்துவமனைகளில் அறை வாடகை, 3 நட்சத்திர…

ஆகஸ்ட் 13, 2026

You Might Also Like

அதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாடு

அதிமுகவில் அதிருப்தி: சீனியர்களுடன் எடப்பாடி சமரச முயற்சி

அதிமுகவில் அதிருப்தியில் உள்ள சீனியர் தலைவர்களுடன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியில் எடப்பாடி பழனிச்சாமி ஈடுபட்டுள்ளார். உட்கட்சிப் பூசல்களைச் சமாளித்து ஒற்றுமையை நிலைநாட்ட தீவிர முயற்சி.

2 Min Read
பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு

தேவையற்ற விளம்பர நாடகம்: நயினார் நாகேந்திரன் கண்டனம்

வாக்களிப்பு அரசியலுக்காக கண்மூடித்தனமாக எதிர்க்கும் போக்கை மாற்று கட்சியினர் கைவிட வேண்டும் என நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார். FCRA-க்கு எதிராக தனித்தீர்மானம் நிறைவேற்றப்பட்டதற்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

கொள்கை கூட்டணி சிதறிவிட்டது: திமுகவை விமர்சித்த வானதி சீனிவாசன்

டெல்லி பிரதிநிதி அதிகாரியாக நியமிக்கப்பட்ட நபர் குறித்து சர்ச்சைகள் எழும்போது, அதற்கு பதிலளிக்க வேண்டியது முதலமைச்சரின் கடமை என பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும்,…

1 Min Read
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் குழந்தை திருமண தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பேசுகிறார்
தமிழ்நாடு

18 வயதுக்கு முன் திருமணம்: 2 ஆண்டு சிறை – ஆட்சியர் எச்சரிக்கை!

திருவாரூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு முன் பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்தால் 2 ஆண்டுகள் சிறை தண்டனை என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குழந்தை திருமணங்களைத்…

3 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?