MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

தமிழ்நாடு

அரசு பெரும்பான்மையை நிரூபிக்க இன்று சட்டசபையில் வாக்கெடுப்பு

Admin
Last updated: மே 13, 2026 6:20 காலை
Admin
Share
SHARE

தமிழக சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களை வென்றது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களுடன் இரண்டாவது இடத்தையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. அ.தி.மு.க. மட்டும் 47 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கடந்த 2021 தேர்தலில் ஆட்சியை இழந்த அ.தி.மு.க., இந்த முறையும் தோல்வியை சந்தித்ததால், கட்சியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. சி.வி.சண்முகம், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தலைமையில் தனியாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் த.வெ.க. ஆட்சிக்கு ஆதரவு அளிப்பது என்றும், கட்சியின் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றும் முடிவு செய்தனர். மேலும் சட்டசபை அ.தி.மு.க. குழு தலைவராக வேலுமணியையும் தேர்வு செய்தனர்.

இதனிடையே, எடப்பாடி பழனிசாமியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்த அவரது தரப்பினர், தற்காலிக சபாநாயகராக இருந்த கருப்பையாவிடம் அதற்கான கடிதத்தை நேற்று முன்தினம் கொடுத்தனர். இதேபோல் எஸ்.பி.வேலுமணியை சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்ததற்கான கடிதத்தை சி.வி.சண்முகம் தரப்பினரும் கொடுத்தனர். இதனால் அ.தி.மு.க. இரண்டாக உடைந்ததாக கருதப்பட்டது.

அ.தி.மு.க.வில் கோஷ்டி மோதல் வலுத்துள்ள நிலையில், சி.வி.சண்முகம் குழுவை முதல்-அமைச்சர் விஜய் நேற்று மாலை சந்தித்தார். தொடர்ந்து இரண்டாவது நாளாக அரசியல் கட்சி தலைவர்களை நேற்று விஜய் சந்தித்தார். அதன்படி சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்திற்கு விஜய் நேற்று மாலை சென்றார்.

அங்கு சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலு மணி, தங்கமணி, நத்தம் விசுவநாதன், டாக்டர் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்டோர் முதல்-அமைச்சர் விஜய்யை வரவேற்றனர். அப்போது விஜய்யிடம் தங்களது தரப்புக்கு 28 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

இந்நிலையில், தமிழக சட்டசபையில் அரசு தனது பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை இன்று நடத்துகிறது. அதன்படி இன்று (புதன்கிழமை) சட்ட சபையில் அரசு சார்பில் நம்பிக்கை கோரும் தீர்மானத்தை ஆளும் கட்சி சார்பில் ஒருவர் முன்மொழிவார். அதில் முதல்-அமைச்சர் விஜய் உரையாற்றுவார். எதிர்க்கட்சியினரும் இதில் உரையாற்றுவார்கள்.

அதன் பிறகு அந்த தீர்மானம் எம்.எல்.ஏ.க்களின் குரல் வாக்கெடுப்புக்கு விடப்படும். தீர்மானத்தை ஆதரிப்போரின் எண்ணிக்கையையும், எதிர்ப்போரின் எண்ணிக்கையையும் கணக்கிட்டு சபாநாயகரிடம் செயலாளர் வழங்குவார். சட்டசபையில் வீற்றிருக்கும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கையில் 50 சதவீதம் + 1 என்ற எண்ணிக்கையை தீர்மானம் பெற வேண்டும்.

அதன்படி வெற்றி, தோல்வியை சபாநாயகர் அறிவிப்பார். வெற்றி பெற்று விட்டால் அரசு தனது பணியை தொடர்ந்து நடத்தும். ஒருவேளை தீர்மானம் தோற்றுவிட்டால், அது கவர்னருக்கு தெரிவிக்கப்படும். பெரும்பான்மையை அரசு நிரூபிக்கத் தவறிவிட்டதால் அரசு கலைக்கப்படுவதாக கவர்னர் உத்தரவிடுவார். ஆனால், த.வெ.க. அரசு இந்த தீர்மானத்தில் தோற்க வாய்ப்பு மிகமிக குறைவாக உள்ளது.

எடப்பாடி பழனிசாமி தரப்பைச் சேர்ந்த ஓ.எஸ்.மணியன் தங்களுக்கு 26 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்திருந்தார். சி.வி.சண்முகம் தரப்பு தங்களுக்கு 28 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக கூறினார். இரு தரப்புக்கும் எத்தனை பேர் ஆதரவு என்பது இன்று சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவில் தெரியவரும்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article ஐபிஎல் 2026: தமிழக வீரர் சாய் சுதர்சன் புதிய சாதனை.. கிறிஸ் கெயிலுக்கு அடுத்தபடியாக அசத்தல்
Next Article 22 லட்சம் பேர் எழுதிய நீட் தேர்வு ரத்து: சி.பி.ஐ. வழக்குப்பதிவு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கேரளாவில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி

கேரளாவில் நிலச்சரிவு: உயிரிழப்பு 5 ஆக அதிகரிப்பு

கேரள மாநிலம் வயநாட்டில் கனமழை காரணமாக சுரங்கப்பாதை கட்டுமானப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில்…

ஜூலை 7, 2026

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு பால் கொடுத்த பன்றி: நெகிழ்ச்சி சம்பவம்

தாயை இழந்த நாய்க்குட்டிகளுக்கு தாய் அன்புடன் பால்…

ஜூலை 7, 2026

கணவனை தீர்த்துக்கட்ட மனைவி திட்டமிட்ட கொடூரம்: கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த காரியம்!

வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவனை, தனது கள்ளக்காதலனுடன்…

ஜூலை 7, 2026

பெங்களூரு: குழந்தையை கொன்ற தந்தை – பரபரப்பு தகவல்

பெங்களூருவில் 11 மாத குழந்தையை கோபத்தில் தரையில்…

ஜூலை 7, 2026

மும்பையில் 7 அடி முதலை: கனமழையால் குடியிருப்புக்குள் புகுந்து பீதி

மும்பையில் கனமழையால் போவாய் ஏரியிலிருந்து 7 அடி…

ஜூலை 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அமைச்சர் மதன் ராஜா தந்தைக்கு நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை

தமிழக அமைச்சர் மதன் ராஜா, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்து, அரசு மருத்துவமனைகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார். இந்த செயல்பாடு பொதுமக்களிடையே பாராட்டுகளைப்…

1 Min Read
தமிழ்நாடு

சுயமரியாதைக்காக ராஜினாமா: 3 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் விளக்கம்

சுயமரியாதைக்காக ராஜினாமா செய்ததாக அதிமுக எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் விளக்கம் அளித்துள்ளனர். த.வெ.க. முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்து, தங்களை கட்சியில் இணைத்துக்கொண்டனர்.

2 Min Read
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழகம் 'Dirty Politics' செய்வதாக குற்றம் சாட்டியுள்ளார். அதிமுக உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாக அவர் கூறியுள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

ஆளுநர் ஆர்லெகருடன் சபாநாயகர் திடீர் சந்திப்பு!

தமிழகத்தில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்து வரும் நிலையில், சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகர், அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமாருடன் ஆளுநர் ஆர்லெகரைச் சந்தித்துப் பேசினார். இது அரசியல்…

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?