MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்
தமிழ்நாடு

தமிழ்நாட்டைக் காக்கும் வலிமை திமுகவிடம் உள்ளது – ஸ்டாலின்

Admin
Last updated: May 14, 2026 9:21 am
Admin
Share
SHARE

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், 'தமிழக வெற்றிக் கழக ஆட்சி அமையவோ, தொடரவோ திராவிட முன்னேற்றக் கழகம் தடையாக இருக்காது' என்ற தனது நிலைப்பாட்டின்படியே, திமுக உறுப்பினர்கள் நம்பிக்கை வாக்கெடுப்பைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், சட்டமன்றத்தில் தங்களது தோழமை இயக்க உறுப்பினர்களான திருமதி. பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர் தமிமுன் அன்சாரி, சகோதரர் நித்தியானந்தம் ஆகியோரும் வெளிநடப்பு செய்ததற்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்ற தோழமைக் கட்சிகள், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததை திமுக மதிக்கும் என்றும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இருப்பினும், இந்த ஆட்சி அமைய வழிவகுத்த அனைவரின் நம்பிக்கையையும் சிதைக்கும் வகையில் தமிழக வெற்றிக் கழகம் செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த 3 நாட்களாக ஆளுங்கட்சியின் செயல்பாடுகளும், அதற்கு தோழமைக் கட்சியினர் கொடுத்த அறிக்கைகளுமே இதற்கு சாட்சி என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

'Clean Politics' சொல்லி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது 'Dirty Politics' செய்வதாக ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பிளவுபட்ட அதிமுகவில், உறுப்பினர்களை விலைக்கு வாங்கி ஆட்சியைத் தக்கவைக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். 'உங்களோட Starting-ஏ இப்படி இருந்தா Finishing எப்படி இருக்கும்? இது தூய சக்தியா இல்ல, அடுத்த கட்சி MLA-க்களைத் தூக்குற சக்தியா?' என்று வாக்களித்த மக்களே வருந்திப் பேசுவதாக ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை நேரடியாகச் சாடிய ஸ்டாலின், உங்கள் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து கவனித்து வருவதாகவும், அடுத்து பிளவுபட்ட அதிமுக உறுப்பினர்களுக்கு என்ன 'Return Gift' கொடுக்கப் போகிறீர்கள் என்பதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள் என்றும் கூறியுள்ளார். திமுக ஒருபோதும் தனது கொள்கைகளில் இருந்து மாறாது என்றும், ஒரு ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக தொடர்ந்து செயல்படும் என்றும் தனது அறிக்கையில் அவர் உறுதியளித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:DMKTamil Nadu Politicsதமிழக அரசியல்திமுகமு.க. ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IAS ஆகலாம் வாங்க! சென்னையில் சிறப்பு வழிகாட்டு நிகழ்ச்சி!
Next Article 21 வயதுக்குட்பட்டோருக்கு மதுபானம் விற்பனை செய்ய தடை – டாஸ்மாக் அதிரடி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

திருப்பதி: 15 மணி நேர காத்திருப்பு! பக்தர்களுக்கு புதிய ஏற்பாடுகள்?

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறை காரணமாக பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. நேற்று…

May 14, 2026

சர்க்கரை ஏற்றுமதிக்கு தடை: சாமானியர்களுக்கு நிவாரணமா?

உள்நாட்டு சந்தையில் சர்க்கரை விலை உயர்வை கட்டுப்படுத்தவும்,…

May 14, 2026

உ.பி.யில் கனமழை: 56 பேர் பலி – முதல்வர் யோகி உத்தரவு

உத்தரபிரதேசத்தில் கனமழை மற்றும் புயல் காரணமாக 56…

May 14, 2026

தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு!

கச்சா எண்ணெய் விலை உயர்வால் அன்னிய செலாவணி…

May 14, 2026

மணிப்பூரில் துப்பாக்கிச்சூடு: 3 பாதிரியார்கள் பலி – தேசிய நெடுஞ்சாலைகள் மூடல்!

மணிப்பூர் மாநிலம் காங்போக்பி மாவட்டத்தில் 3 பாதிரியார்கள்…

May 14, 2026

You Might Also Like

தமிழ்நாடு

அரசியல் கருத்துக்களை முடக்க தடை: எக்ஸ் கணக்குகள் வழக்கு – உயர்நீதிமன்றம்

அரசியல் கருத்துக்களைப் பதிவிடும் 18 எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) கணக்குகளை முடக்குமாறு எக்ஸ் நிறுவனத்திற்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீஸார் அனுப்பிய நோட்டீஸுக்கு சென்னை உயர் நீதிமன்றம்…

1 Min Read
தமிழ்நாடு

எம்.எல்.ஏ. பதவியேற்கவில்லை..! சட்டமன்றத்தில் இருந்து பாதியிலேயே புறப்பட்ட சி.வி. சண்முகம்

தமிழகத்தின் 17-வது சட்டசபையின் முதல் கூட்டம் இன்று கூடியது. தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் நடைபெறும் சட்டசபை கூட்டத்தொடரில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்றார். சட்டசபை கூடியதும்…

1 Min Read
தமிழ்நாடு

முதல்-அமைச்சர் விஜய் முதல் கையெழுத்திட்ட பெண்கள் பாதுகாப்பு, போதை ஒழிப்பு திட்டங்கள்: அன்புமணி வரவேற்பு

பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் புதிய முதல்-அமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் த.வெ.க. தலைவர் ஜோசப் விஜய், பெண்களுக்கு எதிராக குற்றங்களைக்…

2 Min Read
தமிழ்நாடு

நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்த முதல்-அமைச்சர் விஜய்

தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக த.வெ.க. தலைவர் விஜய் நேற்று பதவியேற்றார். அவருக்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இன்றைய தினம், தமிழக சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் பதவியே

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?