MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > தமிழ்நாடு > தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்
தமிழ்நாடு

தமிழக முதல்-அமைச்சராக விஜய் இன்று பதவியேற்கிறார்

Admin
Last updated: May 10, 2026 6:28 am
Admin
Share
SHARE

தமிழக அரசின் பதவிக்காலம் மே மாதம் 10-ந்தேதியுடன் நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23-ந்தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 4-ந்தேதி எண்ணப்பட்டன. இதில், விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தி.மு.க. கூட்டணி 73 இடங்களையும், அ.தி.மு.க. கூட்டணி 53 இடங்களையும் கைப்பற்றின.

இதனால், தமிழகத்தில் ஆட்சியமைப்பதற்கு தேவையான முயற்சியில் தமிழக வெற்றிக்கழகம் ஈடுபட்டது. எனினும், பெரும்பான்மையை (118 எம்.எல்.ஏ.க்கள்) நிரூபிக்க வேண்டிய சூழல் அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

இதற்காக த.வெ.க. சார்பில் பல்வேறு கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. காங்கிரஸ், வி.சி.க., இந்திய கம்யூனிஸ்டு (சி.பி.ஐ.), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு (சி.பி.எம்.) ஆகிய கட்சிகளிடம் தனித்தனியே பேச்சுவார்த்தை நடந்தது.

இதில், காங்கிரஸ் நிர்வாகிகள் விஜய்யை சந்தித்து, 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை விஜய்யிடம் வழங்கினர். இதனால், 113 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு த.வெ.க.விடம் இருந்தது. இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம் என்று சி.பி.ஐ., சி.பி.எம். கட்சிகள் நேற்று முன்தினம் அறிவித்தன.

தொடர்ந்து, வி.சி.க.வும் தன்னுடைய ஆதரவை நேற்று தெரிவித்தது. இதேபோன்று, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியும் ஆதரவு அளித்துள்ளது. எனினும், ஆட்சியில் பங்கு கொள்ள மாட்டோம் என்றும் வெளியில் இருந்து ஆதரவு அளிக்கப்படும் என்றும் அக்கட்சிகள் தெரிவித்தன. இதனால், த.வெ.க.வின் மொத்த பலம் 121 ஆக உயர்ந்துள்ளது.

இதில், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் ராஜினாமா செய்யும்போது, த.வெ.க.வின் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். இது பெரும்பான்மைக்கும் (118) கூடுதல் ஆகும்.

இந்த சூழலில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று தமிழக பொறுப்பு கவர்னர் ராஜேந்திர அர்லேகரை நேரில் சந்தித்து, தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அப்போது, பெரும்பான்மைக்கு தேவையான எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை வழங்கினார். அதனை ஏற்றுக்கொண்ட பொறுப்பு கவர்னர், த.வெ.க. தலைவர் விஜய் தலைமையிலான அரசு பதவியேற்க அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 10 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

அதில், த.வெ.க. தலைவர் விஜய் தமிழக முதல்-அமைச்சராக பதவியேற்க உள்ளார். அவருக்கு கவர்னர் அர்லேகர், பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அவருடன் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன், ஆதவ் அர்ஜுனா, நிர்மல் குமார், அருண்ராஜ் உள்பட 10 பேர் அமைச்சர்களாக பதவியேற்க உள்ளனர்.

இதனை தொடர்ந்து, எம்.எல்.ஏ.க்கள் நாளை பதவியேற்க உள்ளனர். வரும் 13-ந்தேதிக்குள் விஜய் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மக்கள் மாளிகை தெரிவித்துள்ளது.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article IPL 2026: 15 வயதில் சிக்ஸர் மன்னனாக மாறிய வைபவ் சூர்யவன்ஷி.. 100 சிக்ஸ் அடித்து உலக சாதனை படைத்தார்
Next Article சென்னையில் 20 இடங்களில் Live – விஜய் பதவியேற்பு விழாவை ஒளிபரப்ப ஏற்பாடு – லிஸ்ட்
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

பெங்களூரு கொலை: தாய், தந்தை, தங்கையை கொன்று தப்பிய பெண் புதுவையில் கைது

பெங்களூருவில் பெற்றோரையும் தங்கையையும் கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய பெண், காதலனுடன் சேர்ந்து…

June 25, 2026

கோவா: பாறையில் ரீல்ஸ் எடுத்த சுற்றுலா பயணி ராட்சத அலையில் சிக்கி உயிரிழப்பு

கோவா பகா கடற்கரையில் பாறைகளில் ரீல்ஸ் எடுத்த…

June 25, 2026

5 வயது சிறுமிக்கு பாலியல் துயரம்: சிறுவர்கள் மீது அதிர்ச்சி குற்றச்சாட்டு

சென்னையில் 5 வயது சிறுமிக்கு வயிறு வலிப்பதாக…

June 25, 2026

காவிரி ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தில் 5 பேர் பரிதாபம்

காவிரி ஆற்றங்கரையில் செல்பி எடுக்க முயன்ற ஒரே…

June 25, 2026

போதைப்பொருள் கடத்தல்: தமிழகம், புதுச்சேரிக்கு கேரள முதல்வர் கடிதம்

போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க, தமிழகம் மற்றும் புதுச்சேரி…

June 25, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தயாரிப்பாளர் கே.ராஜன் மறைவு: டிடிவி தினகரன் ஆழ்ந்த இரங்கல்

பிரபல தயாரிப்பாளர் கே.ராஜன் அடையாறு மேம்பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

2 Min Read
தமிழ்நாடு

முதல் – அமைச்சர் விஜய்க்கு நயினார் நாகேந்திரன் வாழ்த்து

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தள பதிவில் கூறி இருப்பதாவது:- நடந்து முடிந்த 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று, தமிழக…

1 Min Read
தமிழ்நாடு

கோவில் திருவிழாவில் வாலிபர் கொடூர கொலை: முன்விரோதம் காரணம்?

கோவில் திருவிழாவில் முன்விரோதம் காரணமாக வாலிபர் ஒருவர் கும்பலால் ஓட, ஓட விரட்டி அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

1 Min Read
தமிழ்நாடு

மூட நம்பிக்கைகளை ஒழிக்க சட்டம்: வன்னி அரசு வலியுறுத்தல்

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற குழு தலைவர் வன்னி அரசு, தமிழக அரசு ஜோதிடம், பில்லி சூனியம் போன்ற…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?