MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்க்கு சிவசங்கர் எச்சரிக்கை: ‘அமைதி ஆபத்தை விளைவிக்கும்!’
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்க்கு சிவசங்கர் எச்சரிக்கை: ‘அமைதி ஆபத்தை விளைவிக்கும்!’
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்க்கு சிவசங்கர் எச்சரிக்கை: ‘அமைதி ஆபத்தை விளைவிக்கும்!’

தமிழ்நாடு

விஜய்க்கு சிவசங்கர் எச்சரிக்கை: ‘அமைதி ஆபத்தை விளைவிக்கும்!’

Fernandez
Last updated: ஜூலை 31, 2026 6:54 மணி
Fernandez
Share
முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களிடம் பேசுகிறார்
திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்
SHARE

சென்னை: 'அமைதியாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்' என நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் தற்போதைய ஆளுங்கட்சியின் 'Mouthpiece' ஆக செயல்படுவதாகவும், தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனம் சாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர், தற்போதைய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து கடுமையாக விமர்சித்தார். 'முதலமைச்சர் என்றாலே மு.க.ஸ்டாலின் தான் நினைவுக்கு வருவார். தன் இயலாமையை மறைக்கவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைக்கிறார் விஜய். நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் தாயுமானவர் திட்டம் போன்ற திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தவெகவால் (தற்போதைய அரசு) எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், திமுகவின் திட்டங்களுக்கு பெயர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நிறத்தை மாற்றுவது, பெயரை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மக்கள் மத்தியில் எதிர்ப்புதான் திரும்பும்' என்று அவர் கூறினார்.

மேலும், மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யாமல், தினமும் வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி பேசுவது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். 'கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எழாத மின் தட்டுப்பாடு பிரச்சனை, இந்த குறுகிய காலத்தில் ஏன் ஏற்படுகிறது? மக்கள் படும் துன்பங்களுக்கு குரல் கொடுப்பது எதிர்க்கட்சியான எங்களின் கடமை' என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் குறித்து பேசிய சிவசங்கர், 'நிர்மல்குமார் அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சருக்கும் அவர்தான் ‘Mouthpiece’. Mouthpiece அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் துறையைப் பற்றி கேள்வி கேட்டால் தெரியாது என்கிறார். உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் கூட கள்ள மெளனம் சாதிப்பதுதான் உங்கள் பதிலாக இருக்கிறதா?' என கேள்வி எழுப்பினார்.

'பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் மக்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் வெடிக்காது என்று நினைக்கிறீர்கள். உங்கள் அமைதியால் ஒரு கட்டத்தில் புரட்சி வெடிக்கும். இதை நீங்கள் உணரவில்லை எனில், ஆபத்து உங்களுக்குதான்' என்று நடிகர் விஜய்க்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKMK StalinS.S.SivashankarTVKஎஸ்.எஸ்.சிவசங்கர்தவெகதிமுகமின்சாரத்துறைமுதலமைச்சர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article இந்தியாவில் அறிமுகமாகவுள்ள புதிய எஸ்யூவி கார்களின் படங்கள் அடுத்த 3 மாதங்களில் வரும் 3 புதிய சக்திவாய்ந்த எஸ்யூவி கார்கள்!
Next Article பத்ரிநாத் பத்ரி நாராயணன் கோயில் பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு: பணம், நகை மீட்பு
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

மத்திய அமைச்சர் அமித் ஷா குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்

குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயில்: அமித் ஷா தொடங்கி வைத்தார்

குஜராத்தில் நாட்டின் முதல் எல்என்ஜி ரயில் சேவையை மத்திய அமைச்சர் அமித் ஷா…

செப்டம்பர் 28, 2026

தனியார் பள்ளி கழிவறையில் 3-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை

சென்னையில் தனியார் பள்ளி ஒன்றில் 3-ம் வகுப்பு…

செப்டம்பர் 28, 2026

அரியானாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து 6 பேர் உயிரிழப்பு

அரியானாவில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில்…

செப்டம்பர் 28, 2026

வங்கி ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு: வங்கிகள் வழக்கம் போல் இயங்கும்

வங்கி ஊழியர்களின் 3 நாள் வேலைநிறுத்தப் போராட்டம்…

செப்டம்பர் 28, 2026

கேரள அரசு இணையதளம் முடக்கம்: பாகிஸ்தான் ஹேக்கர்கள் கைவரிசை?

கேரள அரசின் பொதுநிர்வாகத்துறை இணையதளத்தை பாகிஸ்தான் ஹேக்கர்கள்…

செப்டம்பர் 27, 2026

You Might Also Like

தமிழ்நாடு

தாம்பரத்தில் புதிய குப்பை மேலாண்மை தொழில்நுட்பம் அறிமுகம்

தாம்பரத்தில், தமிழகத்தின் முதல்முறையாக, கம்ப்ரஸர் இயந்திரங்கள் மூலம் குப்பைகளை அழுத்தி, மூடப்பட்ட கண்டெய்னர் லாரிகளில் கொண்டு செல்லும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது துர்நாற்றம் மற்றும்…

1 Min Read
நடிகர் சிவா
தமிழ்நாடு

கில்லி பட நடிகர் சிவா காலமானார்: திரையுலகினர் அஞ்சலி

விஜய் நடிப்பில் மாபெரும் வெற்றி பெற்ற 'கில்லி' படத்தில் அவருடன் நடித்த நடிகர் சிவா காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

1 Min Read
தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டத்தில் நடந்த சாலை விபத்து
தமிழ்நாடு

ஹைதராபாத் அருகே பயங்கரம்: சொகுசு பஸ் மீது கண்டெய்னர் லாரி மோதி 6 பேர் உயிரிழப்பு

ஹைதராபாத்தில் இருந்து விஜயவாடா சென்ற தனியார் சொகுசு பேருந்து, கண்டெய்னர் லாரி மீது மோதி 6 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி…

1 Min Read
தமிழக முதல்வர் விஜய் ஆவின் பால் கொள்முதல் விலை உயர்வு குறித்து அறிவிக்கிறார்
தமிழ்நாடு

ஆவினுக்கு கொள்முதல் விலை உயர்வு: முதல்வர் விஜய் அறிவிப்பு

தமிழக முதல்வர் விஜய், ஆவினுக்கு பால் வழங்கும் விவசாயிகளுக்காக கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தி அறிவித்துள்ளார். இது விவசாயிகளிடையே வரவேற்பை பெற்றுள்ளது.

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?