விஜய்க்கு சிவசங்கர் எச்சரிக்கை: ‘அமைதி ஆபத்தை விளைவிக்கும்!’

திமுக எம்.எல்.ஏ. எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார்

சென்னை: 'அமைதியாக இருந்தால் மிகப்பெரிய ஆபத்தை சந்திக்க நேரிடும்' என நடிகர் விஜய்க்கு முன்னாள் அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக, மின்சாரத்துறை அமைச்சர் தற்போதைய ஆளுங்கட்சியின் 'Mouthpiece' ஆக செயல்படுவதாகவும், தனது துறை சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்காமல் மௌனம் சாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திமுக எம்.எல்.ஏ. சிவசங்கர், தற்போதைய அரசு திட்டங்களின் பெயர்களை மாற்றுவது குறித்து கடுமையாக விமர்சித்தார். 'முதலமைச்சர் என்றாலே மு.க.ஸ்டாலின் தான் நினைவுக்கு வருவார். தன் இயலாமையை மறைக்கவே திமுக திட்டங்களின் பெயர்களை மாற்ற நினைக்கிறார் விஜய். நான் முதல்வன், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் மற்றும் தாயுமானவர் திட்டம் போன்ற திட்டங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. தவெகவால் (தற்போதைய அரசு) எதுவும் செய்ய முடியவில்லை என்பதால், திமுகவின் திட்டங்களுக்கு பெயர் மாற்றிக்கொண்டிருக்கிறார்கள். நிறத்தை மாற்றுவது, பெயரை மாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால் மக்கள் மத்தியில் எதிர்ப்புதான் திரும்பும்' என்று அவர் கூறினார்.

மேலும், மின்சாரத்துறையில் நிலவும் பிரச்சனைகள் குறித்து முழுமையாக ஆய்வு செய்யாமல், தினமும் வாட்ஸ்அப் செய்திகளை வைத்துக்கொண்டு ஆளுங்கட்சி பேசுவது சரியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார். 'கடந்த 5 ஆண்டு கால திமுக ஆட்சியில் எழாத மின் தட்டுப்பாடு பிரச்சனை, இந்த குறுகிய காலத்தில் ஏன் ஏற்படுகிறது? மக்கள் படும் துன்பங்களுக்கு குரல் கொடுப்பது எதிர்க்கட்சியான எங்களின் கடமை' என்றும் அவர் வலியுறுத்தினார்.

தற்போதைய மின்சாரத்துறை அமைச்சர் குறித்து பேசிய சிவசங்கர், 'நிர்மல்குமார் அமைச்சரவையில் உள்ள எல்லா அமைச்சருக்கும் அவர்தான் ‘Mouthpiece’. Mouthpiece அமைச்சராக இருக்கிறார். ஆனால் அவர் துறையைப் பற்றி கேள்வி கேட்டால் தெரியாது என்கிறார். உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளில் கூட கள்ள மெளனம் சாதிப்பதுதான் உங்கள் பதிலாக இருக்கிறதா?' என கேள்வி எழுப்பினார்.

'பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தால் மக்கள் மத்தியில் பிரச்சனை ஏதும் வெடிக்காது என்று நினைக்கிறீர்கள். உங்கள் அமைதியால் ஒரு கட்டத்தில் புரட்சி வெடிக்கும். இதை நீங்கள் உணரவில்லை எனில், ஆபத்து உங்களுக்குதான்' என்று நடிகர் விஜய்க்கு மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார். இந்த கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Share This Article
Senior Reporter Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Exit mobile version