MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: விஜய்யின் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – ஆர்.பி. உதயகுமார்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: விஜய்யின் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – ஆர்.பி. உதயகுமார்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - விஜய்யின் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – ஆர்.பி. உதயகுமார்

தமிழ்நாடு

விஜய்யின் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – ஆர்.பி. உதயகுமார்

Admin
Last updated: ஜூலை 8, 2026 7:01 காலை
Admin
Share
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர் சந்திப்பில் பேசுகிறார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
SHARE

மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வெளியிட்ட வீடியோவில், நடிகர் விஜய் தற்போது ஆடும் அரசியல் ஆட்டத்திற்கு மக்கள் விரைவில் முடிவுரை எழுதுவார்கள் என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.

தற்போதைய தமிழக அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்துவதை விட, 52 ஆண்டுகளாக அயராது உழைத்து வரும் அதிமுகவை மக்களிடமிருந்து தனிமைப்படுத்தும் சூழ்ச்சியில் இறங்கியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். குறிப்பாக, அதிமுகவின் பொதுச்செயலாளரான எடப்பாடியாரை மக்களிடமிருந்து தனிமைப்படுத்த ரகசிய திட்டத்தின் மூலம், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து குதிரை பேரத்தில் அரசு கவனம் செலுத்துவதாகவும் அவர் கூறினார்.

இது அரசியல் காழ்ப்புணர்ச்சியால் சொல்லப்படவில்லை என்றும், தேர்தல் முடிவு வந்த பிறகு ஆட்சி அமைக்க வீரமணியை சந்தித்ததை தொடர்ந்து, திமுக தலைவர் ஸ்டாலினை நேரில் சந்தித்து, பொன்னாடை போர்த்தி, பூச்செண்டு கொடுத்து, இதுவரை கண்டிராத அன்பையும் பாசத்தையும் விஜய் பரிமாறிக் கொண்டதை நாடு பார்த்தது என்றும் ஆர்.பி. உதயகுமார் குறிப்பிட்டார்.

மேலும், அமைச்சர் பதவிக்கு ஆசை காட்டி அதிமுக குடும்பத்தில் பிளவை ஏற்படுத்தியதோடு, கழகத்தின் பொதுச்செயலாளரை சந்திக்காமலேயே, அரசியல் மரபுகளை மீறி, சட்ட திட்ட விதிகளை மீறி சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை அவர்களின் இருப்பிடத்திற்கே சென்று சந்தித்தது அரசியல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார். அமைச்சர் பதவிக்கு உத்தரவாதம் என்று விஜய் கூறியது, 'ஆடு பகை, குட்டி உறவு' என்ற பழமொழியை நினைவுபடுத்துவதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, விஜய்யின் அரசியல் சித்து விளையாட்டுகள் எடுபடவில்லை என்றும், அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும், கழக நிர்வாகிகளும் எடப்பாடியார் உடன் இணைந்து மக்கள் பணியை தொடர முடிவு எடுத்தபோது, அதிர்ந்து போன விஜய், அதிரடியாக அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்ததாகவும், இதுவரை 6 அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்த அபத்தமான அரசியல் ஆட்டத்தை அவர் தொடர்ந்து ஆடுவதாகவும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார். இன்னும் 12 பேரை ராஜினாமா செய்ய வைக்கும் ஆட்டத்தை அவர் தொடர்வார் என செய்திகள் வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தேர்தல் நேரத்தில் மாபெரும் மக்கள் இயக்கமான அதிமுகவை அல்லு, சில்லுகள் என்று ஆணவத்தின் உச்சியில் விஜய் விமர்சித்ததை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. அதிமுகவை தமிழ்நாட்டு மக்களிடமிருந்து தனிமைப்படுத்துவதற்கும், எடப்பாடியாரை தனிமைப்படுத்த வேண்டும் என்ற விஜய்யின் ரகசிய திட்டம் என்னவென்று நாட்டு மக்களுக்கு புரியவில்லை என்றும் அவர் கூறினார்.

ஒரு எளிய விவசாய குடும்பத்தில் பிறந்து, எந்த அரசியல் பின்புலம், சினிமா வசீகரம் இல்லாமல், தன்னுடைய அர்ப்பணிப்பாலும், அயராது உழைப்பாலும் தமிழக அரசியலில் யாரும் தவிர்க்க முடியாத சக்தியாக எடப்பாடியார் திகழ்கிறார். பல்வேறு சூழ்ச்சிகள், எதிர்ப்புகள், துரோகங்களைத் தாண்டி வலிமையோடு அதிமுகவை வழிநடத்தி வருவதால் தான் எடப்பாடியாருக்கும் விஜய்க்கும் தகராறு என்றும், இது வாய்க்கால் வரப்பு தகராறு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஆகவே, அதிமுகவை தனிமைப்படுத்தி விட்டால் த.வெ.க கட்சியை தேசிய அளவில் வளர்த்து விடலாம் என்று எடப்பாடியாரை தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால், காலம் மாறும்போது அரசியல் கடும் பின்னடைவுகளை விஜய் சந்திப்பார் என்றும், விஜய் ஒன்றும் அவதார புருஷனோ, தமிழ்நாட்டை காக்க வந்த கடவுளோ அல்ல என்றும், காலம் தந்த தீர்ப்பில் அவருக்கு முதலமைச்சர் அரியாசனம் கிடைத்திருந்தாலும், தலைகால் புரியாமல் ஆடும் ஆட்டம் எத்தனை நாளைக்கு என்று பார்ப்போம் என்றும் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:AIADMKDMKRB UdhayakumarVIJAYஅதிமுகஆர்.பி. உதயகுமார்த.வெ.க.தமிழக அரசியல்விஜய்ஸ்டாலின்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article மகேந்திர சிங் தோனி மைதானத்தில் அமர்ந்திருக்கும் காட்சி தோனி வருகை: இந்தியா-இங்கிலாந்து டி20 போட்டியில் எதிர்பாராத திருப்பம்!
Next Article மன அழுத்தத்தின் அறிகுறிகளை விளக்கும் மருத்துவ நிபுணர் மன அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள்: கண்டறிந்து குணப்படுத்துவது எப்படி?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

அயோத்தி ராமர் கோவில் உண்டியல் பணம் திருட்டு தொடர்பாக கைது செய்யப்பட்ட ஊழியர்

அயோத்தி ராமர் கோவில் காணிக்கை திருட்டு: காதலிக்கு ஐபோன் வாங்கி கொடுத்த ஊழியர் கைது!

அயோத்தி ராமர் கோவிலில் உண்டியலில் இருந்த பணத்தை திருடி, காதலிக்கு ஐபோன் வாங்கி…

ஜூலை 8, 2026

மகனின் முகத்தை பார்க்க மறுத்த தாய்: மேற்கு வங்க என்கவுண்டர் சம்பவம்

மேற்கு வங்கத்தில் 11 வயது சிறுமி கூட்டு…

ஜூலை 8, 2026

இந்தோனேசியாவின் பிரம்பனன் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு

இந்தோனேசியாவின் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற பிரம்பனன் கோயிலில்…

ஜூலை 8, 2026

மருத்துவர், ஊழியர் மீது கொடூர தாக்குதல்: சிவசேனா பிரமுகர் கைது

சென்னையில் பெண் மருத்துவர் மற்றும் ஊழியர் மீது…

ஜூலை 8, 2026

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிர் தப்பிய மதுரை தம்பதி: வைரலாகும் வீடியோ

கேரளாவின் வயநாடு நிலச்சரிவில் சிக்கி, லாரிக்கு அடியில்…

ஜூலை 8, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முகத்தை மூடி சென்றவர் யார்? – முதலமைச்சரிடம் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி

தமிழக சட்டசபையில் இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இதில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.அவர் பேசுகையில், 'எதிர்க்கட்சிகளை எதிரிகட்சிகளாக பார்க்காமல்,…

1 Min Read
தமிழ்நாடு

அதிமுகவிற்குள் மீண்டும் குழப்பம்? சிவி சண்முகம் தலைமையில் எம்.எல்.ஏக்கள் தனியே ஆலோசனை

தமிழக அரசியல் களம் நிமிடத்திற்கு நிமிடம் பரபரப்பான கட்டத்தை எட்டி வரும் நிலையில், சிவி சண்முகம் தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் தனியாக ஆலோசனை நடத்தி வருவது புதிய…

1 Min Read
தமிழ்நாடு

9 மாவட்டங்களில் இன்று காலை மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் 9 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் லேசான…

1 Min Read
தமிழ்நாடு

ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள்: முதல்வர் விஜய் உத்தரவு

தமிழகத்தின் மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ.15,032 கோடியில் 231 புதிய துணை மின் நிலையங்கள் அமைக்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இது மின் விநியோகத்தை மேம்படுத்தும்.

1 Min Read
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?