MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: முதல்வர் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்: விஜய்க்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் அறிவுரை
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: முதல்வர் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்: விஜய்க்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் அறிவுரை
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - முதல்வர் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்: விஜய்க்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் அறிவுரை

தமிழ்நாடு

முதல்வர் பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள்: விஜய்க்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் அறிவுரை

Fernandez
Last updated: செப்டம்பர் 8, 2026 11:20 மணி
Fernandez
Share
திமுக வழக்கறிஞர் பரந்தாமன்
திமுக வழக்கறிஞர் பரந்தாமன்
SHARE

முதல்வர் பொறுப்பில் இருக்கும் விஜய், சட்டமன்றத்தில் தனது உடல் மொழி குறித்து அளித்த விளக்கத்திற்கு திமுக வழக்கறிஞர் பரந்தாமன் பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கருத்துக்கள் தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றன.

பரந்தாமன் தனது பதிவில், 'சட்டப்பேரவையில் உடல் மொழிக்கு வேலையில்லை, உரையாற்றுவதுதான் உங்கள் வேலை மாண்புமிகு விஜய் அவர்களே!' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், 'எல்லாவற்றையும் செய்துவிட்டு வீட்டுக்குச் சென்று ட்வீட் போடுவது, நீங்கள் இன்னும் மாண்புமிகு ஆகவில்லை என்பதையே காட்டுகிறது. முதல்முறையாக நீங்கள் இப்படி செய்திருந்தால், உங்களின் இந்த விளக்கத்தை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஆனால், தமிழ்நாட்டு சட்டமன்ற வரலாற்றில் யாரும் இதுவரை செய்யாத ஒரு கீழ்த்தரமான செயலை, முதல்வர் பொறுப்பை ஏற்ற பிறகு இது இரண்டாவது முறையாக நீங்கள் செய்திருக்கிறீர்கள். எனவே, வேண்டும் என்றே திட்டமிட்டு, உள்நோக்கத்துடன் தியாக வரலாற்றுக்கு சொந்தமான தலைவர்களின் தியாகத்தை கொச்சைப்படுத்தியிருக்கிறீர்கள்' என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், 'உழைப்பைத் தந்து, தியாகத்தைச் செய்து, இந்த முதல்வர் பொறுப்புக்கு பல காலம் மக்கள் பணியாற்றிய பிறகு வந்திருந்தால் இதன் வலிமையை உணர்ந்திருப்பீர்கள். ஊதாரித்தனமான வசனங்கள் பேசி, வலைதள பொய் பரப்புரை மூலம் பதவிக்கு வந்ததால், முதல்வர் பொறுப்பின் மாண்பும், சட்டமன்ற மாண்பும் இன்று தங்களால் கூனிக்குறுகியுள்ளது. இதனால் தமிழ்நாட்டு மக்கள் தலைகுனிந்துள்ளனர்' என்றும் பரந்தாமன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

காவல்துறை மானியத்தின் பதிலுரையில், பதிலில்லாத பதிலுரையை அளித்த வரலாற்றை உருவாக்கிய முதல்வர் தாங்கள்தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 'எதிர்காலத்தில் சட்டமன்ற நடவடிக்கைகளை அறிந்துக்கொள்ள குறிப்புகளை படிக்கயிருக்கும் அடுத்த தலைமுறையினருக்கு, நீங்கள் பதில் அளிக்கத் தெரியாத பொம்மை முதல்வர் என உங்களை நீங்களே பதிவிட்டுவிட்டீர்கள்' என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

எனவே, பழிப்பதற்கும், திமுகவை குற்றம் சுமத்துவதற்கும் நேரத்தை வீணாக்காமல், மாண்புமிகு முதல்வர் என்னும் உயரிய பொறுப்புணர்ந்து பணியாற்றுங்கள் என்றும் பரந்தாமன் தனது பதிவின் மூலம் விஜய்க்கு அறிவுறுத்தியுள்ளார். இந்த கருத்துக்கள், முதல்வர் விஜய் மற்றும் திமுக தரப்புக்கு இடையே ஒரு புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளன.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:DMKParanthamanTamil Nadu PoliticsVIJAYசட்டமன்றம்பரந்தாமன்முதல்வர்விஜய்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article சட்டப்பேரவையில் அமைச்சர் நிர்மல் குமார் மு.க.ஸ்டாலின் மிசா அல்ல, பெண்கள் வழக்கு: அமைச்சர் நிர்மல் குமார்
Next Article உலக சுகாதார நிறுவனத்தின் லோகோ அல்லது மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகளை குறிக்கும் படம் மதுவில் பாதுகாப்பான அளவு இல்லை: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக சிறைத்துறை டிஐஜி சோமசேகர் கைது செய்யப்பட்டார்

ஆயுள் தண்டனை கைதி விடுதலை: கர்நாடக டிஐஜி கைது

உச்ச நீதிமன்ற உத்தரவை போலியாக தயாரித்து ஆயுள் தண்டனை கைதியை விடுவித்த வழக்கில்…

அக்டோபர் 8, 2026

தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக…

அக்டோபர் 8, 2026

பிரதமர் மோடியைப் பாராட்டி மத்திய அமைச்சரவை தீர்மானம்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டுகால பொதுச்சேவையைப்…

அக்டோபர் 7, 2026

பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் சிறப்பு அதிகாரி…

அக்டோபர் 7, 2026

விமானப் படை புதிய தளபதி: அசுதோஷ் தீட்சித் நியமனம்

இந்திய விமானப் படையின் புதிய தளபதியாக ஏர்…

அக்டோபர் 7, 2026

You Might Also Like

தமிழ்நாடு

கல்லூரி படிப்பை தொடர மறுத்த மாணவர்: விபரீத முடிவால் அதிர்ச்சி

கல்லூரி படிப்பை தொடர விருப்பமில்லை என மாணவர் ஒருவர் பெற்றோரிடம் தெரிவித்த நிலையில், அவர் எடுத்த விபரீத முடிவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 Min Read
தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் குறித்த செய்தியாளர் சந்திப்பு
தமிழ்நாடு

2 தொகுதிகளில் இடைத்தேர்தல்: வேட்பாளர்கள் யார்?

தமிழகத்தில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ள இடைத்தேர்தலில், முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம் குமரவேல் மற்றும் சத்யபாமா தவெக சார்பில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாக தகவல்.

2 Min Read
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பெரியார் பிறந்தநாள் வாழ்த்து செய்தி
தமிழ்நாடு

பெரியார் பகுத்தறிவுச் சுடர் தலைமுறைகள் கடந்து ஒளிரும்: மு.க.ஸ்டாலின்

தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், 'பெரியார் ஏற்றிய பகுத்தறிவுச் சுடர், தலைமுறைகள் கடந்து ஒளிரட்டும்!' என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

1 Min Read
தமிழ்நாடு

4 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க மனு: ஐகோர்ட்டில் பதில் மனு தாக்கல்

நான்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க மனு விவகாரத்தில், சட்டமன்ற செயலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். இது அரசியல் அரங்கில் முக்கியத்துவம்…

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?