MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Reading: வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
    • ஆட்டோமொபைல்
  • டெக்னாலஜி
    • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்
  • மீம்ஸ் கார்னர்
Reading: வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • ஆன்மிகம்
  • ஜோதிடம்
  • லைஃப் ஸ்டைல்
  • கல்வி & வேலைவாய்ப்பு
  • பிசின்ஸ்
  • டெக்னாலஜி
  • மீம்ஸ் கார்னர்
Search
  • 🔴 Live UpdatesNew
  • செய்திகள்
  • அரசியல்
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சினிமா
  • சிறப்பு பகுதி
  • விளையாட்டு
  • க்ரைம்
Follow US
© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

Home - தமிழ்நாடு - வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்

தமிழ்நாடு

வியட்நாம் படகு விபத்து: 10 தமிழர்கள் உட்பட 15 பேர் உயிரிழப்பு – முதல்வர் இரங்கல்

Fernandez
Last updated: ஜூலை 12, 2026 7:23 காலை
Fernandez
Share
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களுக்கு முதல்வர் விஜய் இரங்கல்
SHARE

வியட்நாமின் பூ குவோக் தீவு அருகே இந்திய சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற அதிவேகப் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர். வியட்நாமில் உள்ள இந்திய தூதரகம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. இந்த துயர சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆகியோர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த கோர விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களுடன் கேரளாவைச் சேர்ந்த 2 பேர் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த 3 பேர் என மொத்தம் 15 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழர்கள் 17 பேர் உட்பட மொத்தம் 32 சுற்றுலாப் பயணிகள் அந்த படகில் பயணித்துள்ளனர். கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் இதில் அடங்குவர். சுற்றுலாப் பயணிகள் தவிர, படகின் 4 பணியாளர்களும் பயணித்திருந்தனர். உயிரிழந்த 15 பேரும் சுற்றுலாப் பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த 10 தமிழர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன. பழனியைச் சேர்ந்த முருக பிரபு (44), தருமபுரியைச் சேர்ந்த செந்தில் குமார் (45), சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், திருச்சி அன்பு நகரைச் சேர்ந்த அழகுராஜன், திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த பாலாஜி, பீமநகர் பகுதியைச் சேர்ந்த ஷேக் அப்துல்லா, வேலூர் சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த வினய்குமார் (48), ரவி சங்கர், சந்தோஷ் குமார், மற்றும் பாபு ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக, பழனியைச் சேர்ந்த முருகபிரபு (44) மற்றும் நிர்மல்குமார் ஆகியோர் ஒரு செல்போன் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர்களாகப் பணியாற்றி வந்தனர். அவர்களின் சிறப்பான வணிகச் செயல்பாட்டிற்காக, அந்நிறுவனம் இவர்களை வியட்நாம் சுற்றுலா அழைத்துச் சென்றுள்ளது. இதேபோல், தருமபுரி மாவட்ட லாவா மொபைல் ஏஜென்சி, ஆர்.ஓ சிஸ்டம் ஏஜென்சி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வந்த தொழிலதிபர் செந்தில்குமார் (45) உயிரிழந்தார். இவருக்கு மனைவி பூவிழி (40) மற்றும் மகள் லோகஶ்ரீ (7) உள்ளனர்.

சேலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர், ஹை க்யூ என்டர்பிரைசஸ் (பி) லிட் நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார். இவர் ஓப்போ, ஐ போன், லாவா போன்ற செல்போன்களின் விநியோகஸ்தராக அறியப்பட்டவர். இவருக்கு கார்த்திக், ஹரிணி என்ற இரண்டு பிள்ளைகள் உள்ளனர். மேலும், திருச்சியைச் சேர்ந்த அழகுராஜன், பாலாஜி, ஷேக் அப்துல்லா ஆகிய மூவரும் லாவா நிறுவனத்தில் பணியாற்றி வந்தவர்கள் என்றும், அந்நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இன்பச் சுற்றுலாவுக்காக வியட்நாம் சென்றிருந்ததும் தெரியவந்துள்ளது.

வேலூரைச் சேர்ந்த வினய்குமார் (48) நகைக்கடை நடத்தி வந்ததுடன், பிரபல செல்போன் நிறுவனத்தின் வேலூர் மாவட்ட டிஸ்ட்ரிபியூட்டராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய், விபத்தில் சிக்கியவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

தனது X தளத்தில் பதிவிட்ட முதல்வர் விஜய், 'வியட்நாம் நாட்டின் ஆன் தோய் கடல் பகுதியிலுள்ள ஹான் மே ருட் ங்வோய் (Hon May Rut Ngoai) தீவிற்கு சுற்றுலா சென்ற இந்தியர்கள் பயணித்த படகு இன்று காலை விபத்தில் சிக்கியதில் தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த செய்தி அறிந்து மிகுந்த மனவேதனையும், துயரமும் அடைந்தேன்' என தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில், “வியட்நாம் விபத்தில் இந்தியர்கள் 15 பேர் உயிரிழந்த தகவலறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன். இந்திய தூதரகம், துணை தூதரகம் சார்பில் தேவையான அனைத்து உதவிகளும் செய்யத் தயாராக உள்ளது. நிலைமையை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Author

Fernandez

Senior Reporter

Fernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!

TAGGED:15 பேர் உயிரிழப்புVietnam Boat Accidentகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்முதமிழ்நாட்டு சுற்றுலா பயணிகள்பிரதமர் மோடிமுதல்வர் விஜய்ராகுல் காந்திவியட்நாம் படகு விபத்து
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
ByFernandez
Senior ReporterFernandaz – MDTV 24x7 News நிறுவனத்தின் Senior Reporter மற்றும் General News Writer ஆக பணியாற்றி வருகிறார். அரசியல், சமூக நிகழ்வுகள், மக்கள் பிரச்சினைகள் மற்றும் முக்கிய நடப்பு செய்திகளை துல்லியமாகவும் விரைவாகவும் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அனுபவம் பெற்றவர். நம்பகமான தகவல்களை தரமான செய்திகளாக வழங்கும் நோக்கத்துடன் செய்தித்துறையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.
Previous Article பிரபல பின்னணிப் பாடகி எஸ்.ஜானகி பாடகி எஸ்.ஜானகி: பாடலாசிரியர், இசையமைப்பாளர் – ஒரு பார்வை
Next Article 12 ராசிக்கான இன்றைய ராசிபலன் கணிப்புகள் 12 ராசிகளுக்கான இன்றைய ராசிபலன்: பணவரத்து யாருக்கு? யாருக்கு நிதானம் தேவை?
கருத்துகள் இல்லை

மறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

Stay Connected

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

போக்குவரத்துறை அமைச்சர் பேருந்தில் ஆய்வு

நடத்துனர், ஓட்டுநரிடம் சிக்கிய போக்குவரத்துறை மந்திரி!

பொதுமக்கள் போல் பேருந்தில் சென்ற போக்குவரத்துறை அமைச்சர், சில்லறை இல்லை என்று கூறி…

ஜூலை 12, 2026

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 நிலநடுக்கம்: ஆந்திராவில் அதிர்வு

வங்கக் கடலில் ரிக்டர் 4.5 அளவில் நிலநடுக்கம்…

ஜூலை 12, 2026

மேகாலயாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 2.7 ஆக பதிவு

மேகாலயா மாநிலத்தில் இன்று மதியம் ரிக்டர் அளவில்…

ஜூலை 12, 2026

பெங்களூரு: மாசடைந்த காற்று – மாதத்திற்கு 10 சிகரெட் புகைப்பது போல!

பெங்களூருவில் சுவாசிக்கப்படும் மாசடைந்த காற்று, ஒரு மாதத்திற்கு…

ஜூலை 12, 2026

ராமர் கோயில் கொள்ளையர்களை தூக்கிலிடும் வரை ஓய மாட்டோம்: கேஜ்ரிவால்

அயோத்தி ராமர் கோயிலில் கொள்ளையடித்தவர்களை தூக்கிலிடும் வரை…

ஜூலை 12, 2026

You Might Also Like

தமிழ்நாடு

காதலுக்காக வருங்கால கணவனை கொன்ற பெண்: மகாராஷ்டிராவில் அதிர்ச்சி

மகாராஷ்டிராவில், காதலுக்காக நிச்சயிக்கப்பட்ட திருமணத்தை நிறுத்த வருங்கால கணவனையே கொலை செய்த இளம் பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை…

2 Min Read
தமிழ்நாடு

விஜய் பிரதமரை சந்திக்க வேண்டும்: மு.வீரபாண்டியன் வலியுறுத்தல்!

இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் மு.வீரபாண்டியன், முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமரை சந்தித்து தமிழகத்திற்கான நிலுவையில் உள்ள நிதியை பெற்று வர வேண்டும் என வலியுறுத்தினார்.

1 Min Read
தமிழ்நாடு

இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

சுமார் 1.5 கி.மீ. உயரத்தில் தெற்கு மத்தியப் பிரதேசத்தின் மையப்பகுதிகள் முதல் மன்னார் வளைகுடா வரை விதர்பா, மரத்வாடா, உள் கர்நாடகா மற்றும் தமிழ்நாடு வழியாக ஒரு…

1 Min Read
தமிழ்நாடு

வெள்ளியங்கிரி மலை: அடுத்த ஆண்டு முதல் மருத்துவ சான்றுடன் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம்!

வெள்ளியங்கிரி மலைக்கு ஆன்மீகப் பயணம் மேற்கொள்வோரின் பாதுகாப்பு நலன் கருதி, அடுத்த ஆண்டு முதல் இணையவழி முன்பதிவு மற்றும் மருத்துவச் சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

1 Min Read
MDTV 24x7 NEWS LOGO

Education

  • கல்வி & வேலைவாய்ப்பு

Trending

  • சினிமா
  • மீம்ஸ் கார்னர்
  • லைஃப் ஸ்டைல்

Devotional

  • ஆன்மிகம்
  • ஜோதிடம்

Tech

  • டெக்னாலஜி
  • பிசின்ஸ்
  • ஆட்டோமொபைல்
  • ஸ்மார்போன்ஸ் & கேட்ஜட்ஸ்

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Know More

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.

© 2022-2026 MDTV24X7News | By dptudioz . All Rights Reserved.
Go to mobile version
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?