MDTV 24x7 NEWS LOGO MDTV 24x7 NEWS LOGO
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Reading: நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள்
Font ResizerAa
  • உலகம்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • டெக்னாலஜி
  • சற்றுமுன்
Search
  • சற்றுமுன்
  • ஐபிஎல் 2026
  • அரசியல்
  • இந்தியா
  • சினிமா
  • தமிழ்நாடு
  • சிறப்பு பகுதி
  • பிசின்ஸ்
Follow US
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.
MDTV 24x7 News | Tamil Breaking News | தமிழ் செய்திகள் > Blog > க்ரைம் > நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்
க்ரைம்

நகை, பணம் திருடிய மருமகன் உட்பட 3 பேர் கைது: வண்டலூர் சம்பவம்

Admin
Last updated: May 25, 2026 1:41 pm
Admin
Share
SHARE

வண்டலூர் அருகே மண்ணிவாக்​கம் கிழக்கு மாட​வீ​தி​யைச் சேர்ந்த சாந்தி (56) என்பவர் வீட்டில் இருந்த 24 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாய் பணம் திருடு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாந்தியின் மகள், ஆட்டோ ஓட்டுநரான தட்​சிணா​மூர்த்​தி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சாந்தியும் அவரது மகளும் வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகின்றனர். கடந்த மே 22-ம் தேதி வேலைக்குச் சென்று மாலை வீடு திரும்பிய சாந்தி, பீரோவில் இருந்த நகை மற்றும் பணம் திருடு போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்து வண்டலூர் – ஓட்டேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், சாந்தியின் மருமகன் தட்​சிணா​மூர்த்​தியை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், தட்​சிணா​மூர்த்​தி தனது ஆட்டோவில் இரண்டு பெண்களை அழைத்து வந்து சாந்தி வீட்டிற்குள் நுழைவதும், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து வெளியேறுவதும் பதிவாகியிருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், மாமியார் வீட்டில் இருந்து 24 சவரன் நகை மற்றும் 2 லட்சம் ரூபாயை தனது தோழிகளுடன் சேர்ந்து திருடியதை தட்​சிணா​மூர்த்​தி ஒப்புக்கொண்டார். இதையடுத்து, தட்​சிணா​மூர்த்​தி, அவருக்கு உடந்தையாக இருந்த தீபா (29) மற்றும் 17 வயது சிறுமி ஆகியோரை போலீசார் கைது செய்து, திருடப்பட்ட நகை மற்றும் பணத்தை மீட்டனர். பின்னர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Subscribe to Our Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
TAGGED:Vandaloorகைதுதமிழ்நாடு செய்திகள்திருட்டுநகை திருட்டுவண்டலூர்
Share This Article
Facebook Whatsapp Whatsapp Telegram Threads
What do you think?
Love0
Sad0
Happy0
Sleepy0
Dead0
Angry0
Surprise0
Cry0
Wink0
Previous Article தர்ம முனிஸ்வரனுக்கு இரட்டை தூக்கு தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Next Article ரன்வீர் சிங்குடன் நடிக்க ஆசை – நடிகை திரிதா சவுத்ரி
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

சமிபத்திய செய்திகள்

சற்றுமுன்

கர்நாடக முதல்வர் மாற்றம்: சித்தராமையா வெளியே, டிகே சிவகுமார் உள்ளே!

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்துள்ளார். அவருக்குப் பதிலாக டி.கே.சிவகுமார் புதிய முதல்வராக…

May 28, 2026

ராஜ்யசபா வேண்டாம்; மாநில அரசியலில் தொடர்வேன் – சித்தராமையா

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்த சித்தராமையா,…

May 28, 2026

சோனியா, ராகுல் காந்தியை முதல்வர் விஜய் சந்திப்பு – எம்.பி. தகவல்

முதல்வர் விஜய், வரும் ஜூன் 11-ம் தேதி…

May 28, 2026

சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு: மதிப்பெண் சர்ச்சை – மத்திய அமைச்சர் பொறுப்பேற்பு

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களின் விடைத்தாள்கள் டிஜிட்டல்…

May 28, 2026

கர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்கிறார் சித்தராமையா

கர்நாடகாவில் முதல்வர் பதவி மாற்றம் குறித்த இழுபறிக்கு…

May 28, 2026

You Might Also Like

தமிழ்நாடு

முஸ்லிம் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள்: எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்

தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்பட வேண்டும் என்றும், முக்கிய துறைகள் ஒதுக்கப்பட வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.

1 Min Read
க்ரைம்

ஆவடியில் 140 கிலோ கஞ்சா, 2000 மாத்திரைகள்: 6 பேர் கைது!

ஆவடி அருகே 140 கிலோ கஞ்சா மற்றும் 2,000 போதை மாத்திரைகளை கடத்தி வந்த 6 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடமிருந்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர…

1 Min Read
தமிழ்நாடு

கள்ளக்காதலியின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் கைது

நெல்லை பாளையங்கோட்டையில், திருமணமான பெண்ணுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட வாலிபர், அவரது மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்ததால் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

1 Min Read
க்ரைம்

செல்போன்களை குறைந்த விலையில் தருவதாக நூதன மோசடி: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கைது

சென்னை: ​விலை உயர்ந்த செல்போன்களை குறைந்த விலை​யில் தரு​வ​தாக கூறி, நூதன பண மோசடி​யில் ஈடு​பட்ட மகா​ராஷ்டி​ராவைச் சேர்ந்த ஒரே குடும்​பத்​தின் 4 பேர் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர்.…

2 Min Read
MDTV 24x7 NEWS LOGO

News

  • உலகம்
  • Advertise

ட்ரெண்டிங்

  • Innovate
  • Gadget
  • PC hardware
  • Review
  • Software

Health

  • Medicine
  • Children
  • Coronavirus
  • Nutrition
  • Disease

Culture

  • Stars
  • Screen
  • Culture
  • Media
  • Videos

More

  • சற்றுமுன்
  • க்ரைம்
  • தமிழ்நாடு
  • ஆன்மிகம்
  • அரசியல்

Subscribe

  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact Us
  • About Us

© dpstudioz. Ruby Design Company. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?