பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் ஈரானிய போயிங் 747 விமானம் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விமானம் கடந்த ஒரு மாதமாக அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து அமெரிக்க பாதுகாப்புத்துறைக்கு பாகிஸ்தான் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே சமாதானப் பேச்சுவார்த்தையில் பாகிஸ்தான் ஒரு தூதுவராக செயல்பட்டு வரும் சூழலில், இந்த நிகழ்வு முக்கியத்துவம் பெறுகிறது. கடந்த ஏப்ரல் மாதமும், ஈரானைச் சேர்ந்த RC-130H போர் விமானம் பாகிஸ்தானின் நூர் கான் விமான தளத்தில் தரையிறங்கியது. அப்போது எடுக்கப்பட்ட செயற்கைக்கோள் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.
தற்போது பாகிஸ்தானில் தரையிறங்கியுள்ள ஈரான் விமானம் குறித்து, டேமியன் சைமன் என்ற ஆய்வாளர் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். இந்த விமானம் ஒரு மாத காலமாக பாகிஸ்தானில் இருந்து வருவதாகவும், இது அமெரிக்காவிற்கு ஒருவிதமான மறைமுக செய்தியாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் மீது அமெரிக்கா எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்நாட்டு செனட் அதிகாரி கிரஹாம் வலியுறுத்தியுள்ளார். இரு நாடுகளுக்கு இடையேயான இராஜதந்திர உறவுகள் மற்றும் பிராந்திய பாதுகாப்பு குறித்த கேள்விகளை இந்த சம்பவம் எழுப்பியுள்ளது.